மகாபாரதம் முழு கதை தமிழில் (Mahabharatham in Tamil)

மஹாபாரதம் - 1 : பிரகஸ்பதியின் சாபமும் தாராவின் குழந்தையும்

பாரதத்தின் மாபெரும் இரு இதிகாசங்களில் ஒன்றான மஹாபாரதம் இன்றுவரை இலக்கியவாதிகளுக்கு ஒரு வியத்தகு இலக்கிய களஞ்சியமாகவும், வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு அதிநுட்பமான ஒரு வரலாற்று பொக்கிஷமாகவும், ஆன்மீகப் பாதையில் உள்ளவர்களுக்கு உத்வேகம்தரும் ஒப்பற்ற கருவியாகவும் இருப்பதோடு, வாழ்வின் அனைத்து தரப்பு மக்களுக்கும் வாழ்வியல் பாடம் சொல்லித்தரும் அமுதசுரபியாகவும் திகழ்கிறது. இந்த புதிய தொடர் மூலமாக நம்முடன் சமகாலத்தில் வாழும் ஒப்பற்ற ஞானியான சத்குருவின் பார்வையிருந்து மஹாபாரதத்தை படித்து சுவைத்து மகிழ்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. தொடர்ந்து படித்து பலன்பெறுங்கள்!

மஹாபாரதம் - 2: உதயமாகிறது சந்திரவம்சம்

கதையை தொடரும் சத்குரு, கௌரவர்களின் சந்திரவம்சம் பிறந்த கதையை இங்கே நமக்கு விவரிக்கிறார்.

மஹாபாரதம் தொடர் - 3 : சாபமா வரமா?

சாபமா வரமா?, மஹாபாரதம், மகாபாரதம், Mahabharatham in Tamil

 

கடந்த பகுதியில், சுக்கிராச்சாரியாரிடம் சஞ்சீவினி மந்திரத்தை கற்க அசுரர் குழுவில் கச்சன் "ஊடுருவியதை" பார்த்தோம். சுக்கிராச்சாரியாரின் மகளான தேவயானி கச்சன் மீது காதல் கொள்கிறாள். தேவயானியை விலக்கிவிட்டு தன் வழியே செல்கிறான் கச்சன். இனி..

மஹாபாரதம் தொடர் - 4 : சகுந்தலையின் கதை - பரதனின் பிறப்பு

கடந்த ‌பகுதியில் பாண்டவர்கள், கௌரவர்களின்‌ சந்திரவம்ச மூதாதையரான புரு, மற்றும் யாதவ‌ குல முன்னோரான யதுவின்‌ கதை வரை நாம் அறிந்தோம். இன்றைய‌ பகுதியில், சகுந்தலை - துஷ்யந்தனின் வாழ்க்கையையும், பரதனின் பிறப்பையும் நமக்குச் சொல்கிறார் சத்குரு.

மஹாபாரதம் பகுதி 5 : சாந்தனு கங்கையை சந்திக்கிறான்

கடந்த ‌பகுதியில் சகுந்தலை, துஷ்யந்தனின் சந்திப்பு மற்றும் பரதனின் பிறப்பு பற்றி பார்த்தோம். இந்த பகுதியில் பரதனின் ஞானம் பற்றியும் அவரது குலத்தோன்றலான சாந்தனு கங்கையை சந்திப்பது பற்றியும் விளக்குகிறார் சத்குரு.

மஹாபாரதம் பகுதி 6 : தேவரதனின் பிறப்பு

கடந்த பகுதியில் சாந்தனு கங்கையை சந்தித்ததை பார்த்தோம். இந்த பகுதியில் அந்த சந்திப்பின் விளைவாக தேவரதனின் பிறப்பையும், உடன் பிணைந்திருக்கும் வசிஷ்டரின் சாபத்தையும் பார்க்க இருக்கிறோம்.

மஹாபாரதம் பகுதி 7: பீஷ்மராகிறார் தேவரதன்

கங்கை சாந்தனுவிடமே தேவரதனை திரும்ப ஒப்படைக்கும் இடத்திலிருந்து கதையை தொடரும் சத்குரு, தேவரதன் பீஷ்மராக உருவெடுப்பதையும், தனக்கு உரிமையான ராஜ்ஜியத்தை விட்டுக் கொடுப்பதையும் இந்த பகுதியில் விளக்குகிறார்.

மஹாபாரதம் பகுதி 8 : அம்பையின் நிலை

Amba, Mahabharat in Tamil, அம்பா, மஹாபாரதம், மகாபாரதம், Mahabharatham in Tamil

 

சாந்தனுவுக்கும் சத்யவதிக்கும் திருமணம் நடப்பதையும், குரு வம்சத்தின் வருங்காலத்திற்காக எதிர்பாராத ஒரு சூழ்நிலையை பீஷ்மர் உருவாக்குவதையும் நமக்கு விளக்குகிறார் சத்குரு.

மஹாபாரதம் பகுதி 9 : பழிவாங்க துடிக்கும் அம்பா

ஒரே நாளில் தலைகீழாக மாறிய அம்பாவின் வாழ்க்கை, இதற்கு காரணமான பீஷ்மரை கொல்ல வேண்டும் என்ற தீராத தாகமாக மாறுவதையும், அதற்காக தன் உயிரையும் கொடுக்கும் அளவிற்கு செல்வதையும் இந்த பகுதியில் நாம் பார்க்க இருக்கிறோம்.

மகாபாரதம் பகுதி 10: யாதவ குலத்தில் கிருஷ்ண விஜயம்

யது-விலிருந்து தோன்றிய யாதவ குலத்தினர் பற்றியும் கிருஷ்ணர் பிறந்த சூழ்நிலையையும் நமக்கு விளக்குகிறார் சத்குரு.

மஹாபாரதம் பகுதி 11 : பாண்டவர்களின் தோற்றம்

இந்திரன் குந்தியை ஆசீர்வதித்தல், Indiran blessing Kunthi, மஹாபாரதம், மகாபாரதம், Mahabharatham in Tamil

 

சற்றே‌ நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மஹாபாரதம் தொடரை தொடர்கிறோம். இந்த பகுதியில், இரு இளம் மனைவியர் இருந்தபோதும், சாபத்தால் குழந்தையின்றி தவிக்கும் பாண்டுவை பற்றி பார்க்க இருக்கிறோம். குந்தி, தனக்கு வரமாக கிடைத்த மந்திரத்தை பயன்படுத்தி கடவுளர்கள் மூலம் குழந்தை வரம் அடைவதையும் பாண்டவ சகோதரர்கள் ஐவரின் பிறப்பை பற்றியும் இங்கு நமக்கு விளக்குகிறார் சத்குரு.

மஹாபாரதம் பகுதி 12: கௌரவர்களின் பிறப்பை சூழ்ந்த துர்சகுணங்கள்

இந்தப் பகுதியில், திருதராஷ்டிரனின் 100 மகன்கள் பிறந்தபோது அச்சுறுத்தல்கள் நிறைந்த அதிசயமான சூழ்நிலை ஏற்பட்டதை பார்க்க இருக்கிறோம். காந்தாரியும் அவளது கணவனும் பல சகுனங்கள், முனிவர்களின் ஞானம், தங்கள் விவேகம் என எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு பாம்பு விழிகளுடன் பிறந்த தங்களின் மூத்த மகன் துரியோதனனை தியாகம் செய்ய மறுக்கிறார்கள்.

மஹாபாரதம் பகுதி 13: தர்மம் - தனிமனித தர்மம் மற்றும் பிரபஞ்ச தர்மம்

தர்மம் மற்றும் அதர்மம், இந்த இரண்டு நிலைகளை பற்றியபடி மஹாபாரதத்தில் வரும் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கை பயணமும் நிகழ்கிறது. இது நல்லது, இது கெட்டது என்ற தீர்ப்புகளை கடந்து, ஒருவர் தன்னளவில் வாழ்க்கையை சுதந்திரமாக, அதேசமயம் பிறருடன் மோதல் இல்லாமல் வாழும் வாழ்க்கை முறையே தர்மம் என நிலவிய அன்றைய காலகட்டத்தைப் பற்றி சத்குரு நமக்கு இங்கே விளக்குகிறார்.

மஹாபாரதம் பகுதி 14: தர்மா மற்றும் கர்மா - என்ன சம்மந்தம்?

தர்மம் மற்றும் கர்மா இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி இந்தப் பகுதியில் பேசுகிறார் சத்குரு. தனக்கான தர்மத்தை நிறுவுவதன் மூலமாக மட்டுமே ஒருவர் தாம் விரும்பும் திசையில் தன் வாழ்க்கையை எடுத்துச்செல்லும் செயலை மேற்கொள்ள முடியும் என்பதைப் பற்றி நமக்கு இந்தப் பகுதியில் விளக்குகிறார்.

மஹாபாரதம் பகுதி 15: ஹஸ்தினாபுரத்தில் கால்தடம் பதிக்கும் பாண்டவர்கள்

மஹாபாரதம் தொடரின் இந்தப் பகுதியில், தந்தையை இழந்த பாண்டவ சகோதரர்கள் ஹஸ்தினாபுரம் வருவதையும், அது துரியோதனனை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்குவதையும் பார்க்க இருக்கிறோம். மேலும், துரியோதனின் தாய்மாமனான சகுனி, குரு வம்சத்தை பழிவாங்க துடிப்பதற்கான பின்புலத்தையும், சகுனியின் ஆயுதமாகும் பகடைக்காய்களின் பிண்ணனியையும் நமக்கு விளக்குகிறார் சத்குரு.

மஹாபாரதம் பகுதி 16: துரியோதனின் கொலை பாதக சதித்திட்டங்கள்

மஹாபாரதம் தொடரின் இந்தப் பகுதியில், துரியோதனின் கோபம், சகுனியின் தந்திரங்களின் உதவியுடன் பீமனை கொல்லும் வஞ்சகமான திட்டமாக உருவாவதைப் பற்றி விளக்குகிறார் சத்குரு. ஆனாலும்கூட, துரியோதனின் அளவுக்கதிகமான பொறாமையாலேயே அந்த விஷமத்தனமான திட்டம் நீர்த்துப் போவதையும் பார்க்க இருக்கிறோம்.

மஹாபாரதம் பகுதி 17: கர்ணன் - பிறந்ததிலிருந்து துரத்தும் சாபம்

மஹாபாரதம் தொடரின் இந்தப் பகுதியில், குறிப்பிடத்தக்க வகையில் நிகழ்ந்த கர்ணனின் பிறப்பிலிருந்து தொடரும் நாம், புகழுக்கு ஏங்கும் கர்ணன் அபாரமான திறமையை அடைவதுடன், இரட்டை சாபங்களின் கண்ணியில் சிக்குவதையும் பார்க்க இருக்கிறோம்.

மஹாபாரதம் பகுதி 18 : ஏகலைவனை எதிர்கொள்ளும் அர்ஜுனன்

அர்ஜூனன், ஏகலைவன் மற்றும் துரோணர் , Arjunan Ekalaivan Dronar, மஹாபாரதம், மகாபாரதம், Mahabharatham in Tamil

 

மஹாபாரதம் தொடரின் இந்த பகுதியில், மிகச்சிறந்த வில்லாளியாக வேண்டும் என்பதில் எந்த சமரசமும் வைத்துக்கொள்ளாத அர்ஜுனனின் ஆர்வத்தையும், அதனால் ஏற்படும் பாதுகாப்பின்மை அவனை கொடூரமான, உறைய வைக்கும் ஒரு முடிவை எடுக்கத் தூண்டுவதையும் பார்க்க இருக்கிறோம்.

மஹாபாரதம் பகுதி 19: கௌரவர்களுக்கு கிடைத்த புதிய நட்பு

பாண்டவர்களுக்கு எதிராக திட்டம் தீட்டும் கௌரவர்கள், செயலில் இறங்க ஆயத்தமாகிறார்கள். திறமையும் ஆற்றலும் மிக்க கர்ணனுடன் துரியோதனனின் நட்பு பிறப்பதையும், பாண்டவ சகோதரர்கள் சதி வலைக்குள் இழுக்கப்படுவதையும், இந்தப் பகுதியில் விளக்குகிறார் சத்குரு.

மஹாபாரதம் பகுதி 20: சதி, அவமானம் - பழிதீர்க்க சபதம்

மஹாபாரதம் தொடரின் இந்த பகுதியில், கௌரவர்களின் நெருப்பு வலையில் இருந்து துணிவுடன் பாண்டவர்கள் தப்புவதை பார்க்க இருக்கிறோம். அத்துடன், பல ஆண்டுகளுக்கு முன் துரோணருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் துருபதன் அவமானம் செய்வதையும், அதனால் கோபமுற்ற துரோணர் பழிவாங்க சபதமேற்பதையும் நமக்கு விளக்குகிறார் சத்குரு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

மஹாபாரதம் பகுதி 21: பழிவாங்க பிறந்த திரௌபதி

மஹாபாரதம் தொடரின் இந்தப் பகுதியில், குரு வம்சத்தையும், துரோணரையும் பழிவாங்க, தனது தந்தைக்கு உதவும் ஒரு கருவியாக திரௌபதி பிறப்பெடுப்பதை விளக்குகிறார் சத்குரு.

மஹாபாரதம் பகுதி 22: திரௌபதியின் இக்கட்டான நிலை

திரௌபதி மற்றும் பஞ்ச பாண்டவர்கள், Draupadi and Pancha Pandavas, மஹாபாரதம், மகாபாரதம், Mahabharatham in Tamil

மஹாபாரதம் தொடரின் இந்த பகுதியில், சுயம்வரத்தில் வெற்றி வீரனாகி அர்ஜுனன் திரௌபதியின் மணாளனாவதையும், குந்தியின் ஒரு கட்டளையால் மணமகள் திரௌபதி ஐந்து கணவர்களை அடையும் சூழ்நிலை ஏற்படுவதைப் பற்றியும் விளக்குகிறார் சத்குரு.

மஹாபாரதம் பகுதி 23: அகோரியிடம் இறக்கவிருந்த பீமன்

மஹாபாரதம் தொடரின் இந்தப் பகுதியில், பாண்டவர்களுக்கு எல்லாமே நல்லபடியாகவே நடப்பதுபோல் இருந்தது, மீண்டும் அரியணையும் அவர்கள் வசமாகவிருந்தது. இப்படி இருக்கையில், முக்கியமான கட்டத்தில், தர்மத்தை நெறி தவறாது பின்பற்ற வேண்டும் என்ற யுதிஷ்டிரனின் உறுதி எதிர்பாராத குழப்பத்தை உருவாக்குகிறது. இதற்கிடையே...

மஹாபாரதம் பகுதி 24: துரியோதனன் - எந்த காரணமும் கொடுக்க முடியாதவன்

மஹாபாரதத்தில் வில்லனாக நாம் பார்க்கும் துரியோதனின் பின்புலத்தில் கர்ம வினையின் தாக்கம் ஏதும் இருந்ததா? இந்த கேள்விக்கு, வேத வியாசர் துரியோதனைப் பற்றி கணித்திருந்ததை விளக்கும் சத்குரு, சில நேரங்களில் குற்றவாளிகள் கதாநாயகர்களையே மிஞ்சுவது - சற்று பாதுகாப்பான தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு மட்டும் ஏன் அப்படித் தோன்றுகிறது என்பதையும் விளக்குகிறார்

மஹாபாரதம் பகுதி 25: துரியோதனன் - அழிவின் வழியில்

மஹாபாரதம் தொடரின் இந்தப் பகுதியில், யுதிஷ்டிரனின் நற்குணம் அவனது புத்திசாலித்தனத்தை விஞ்சுவதால் நாடே அவதிப்படுகிறது. அதேநேரம், கூட்டாட்சியில் விருப்பமில்லாத துரியோதனன் பல வஞ்சகத் திட்டங்களை தீட்டினாலும்‌, குரு அரசவையில் அதற்கு ஆதரவு கிடைக்காமல் போகிறது.

மஹாபாரதம் பகுதி 26: பாண்டவர்களின் புதிய தொடக்கம்

மஹாபாரதம் தொடரின் இந்த பகுதியில், இராஜ்யத்தை பிரிப்பது என்பது தவிர்க்க முடியாததாகிறது. திருதராஷ்டிரன் பாண்டவர்களுக்கு சபிக்கப்பட்ட நிலத்தை பரிசளிக்க, அந்த பாலைவனத்தை அழகான இந்திரப்பிரஸ்த நகரமாக இரவோடு இரவாக உருமாற்றுகிறது இந்திரனின் மாயாஜாலம்.

மஹாபாரதம் பகுதி 27: ராஜசுய யாகம் - அதிகாரத்திற்கு வழி

 

ராஜசுய யாகம், Rajasuya Yagam, மஹாபாரதம், மகாபாரதம், Mahabharatham in Tamil

 

மஹாபாரதம் தொடரின் இந்த பகுதியில் பாண்டவர்கள் அதிகார பலத்தை நோக்கி தொடர்ந்து முன்னேறுகிறார்கள். அருகிலிருந்த வனப்பகுதியை தீக்கிரையாக்கி நகரை விரிவுபடுத்த அர்ஜுனனை சம்மதிக்கச் செய்கிறார் கிருஷ்ணர். அப்படிச் செய்யும் போது இருவரும் மாயாசுரனை சந்திக்க நேர்கிறது. இந்திரபிரஸ்த நகருக்கு அழகும் பிரமாண்டமும் சேர்க்கும் அரசவையை அமைத்துத் தருவதாகக் கூறி உயிர் பிச்சை பெறுகிறான் மாயாசுரன். இங்கே பாண்டவ சகோதரர்கள் ராஜசுய யாகத்தை நிறைவு செய்து சக்கரவர்த்தி பட்டத்திற்கு தங்களை உயர்த்திக் கொள்ள தயாராகிறார்கள், அங்கே துரியோதனனின் ஆத்திரமும் பொறாமையும் கொதி நிலையை அடைகிறது.

மஹாபாரதம் பகுதி 28: ஜராசந்தன் - பிரிந்து பிறந்தவன்

மஹாபாரதம் தொடரின் இந்தப் பகுதியில், பாண்டவர்களின் ராஜசுய யாகத்தின்‌ வெற்றிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக 100 ஷத்ரிய அரசர்களை பலி கொடுக்கும் யாகத்தை மகத தேச‌ அரசன் ஜராசந்தன் திட்டமிடுகிறான். ஜராசந்தனின் பிறப்பே அசாதாரணமானதாக, இரு சதைத் துண்டுகளாக பிறந்த கதையை இந்த பகுதியில் விவரிக்கிறார் சத்குரு.

மஹாபாரதம் பகுதி 29: பீமனும் ஜராசந்தனும் மோதுகிறார்கள்

பீமன், Bhiman, மஹாபாரதம், மகாபாரதம், Mahabharatham in Tamil

 

பாண்டவர்கள் சக்கரவர்த்தி பட்டத்திற்கு உயர்வதை தடுப்பதற்காக, நூறு ஷத்ரிய அரசர்களை பலி கொடுக்கும் யாகத்தை திட்டமிடுகிறான்‌ ஜராசந்தன். ஜராசந்தனை தடுக்கும் ஒரே வழி அவனை கொல்வது மட்டுமே. கிருஷ்ணரின் திட்டப்படி, அவருடன் பீமனும், அர்ஜுனனும் பிராமண வேடத்தில் ஜராசந்தனின் மகத தேசம் செல்கிறார்கள்.

மஹாபாரதம் பகுதி 30: துரியோதனனை விழுங்கும் அவமானம்

கடுமையான மோதலில் ஜராசந்தனை பீமன் தோற்கடித்துக் கொன்ற பிறகு‌, பாண்டவர்களின் ராஜசுய‌ யாகத்திற்கான தடைக்கல் அகல்கிறது. ஆனால் அமைதி நீண்ட நாள் நீடிக்கவில்லை. யாகத்தில் கௌரவ விருந்தினர் யார் என்பதில் உடன்பட‌ முடியாமல் மீண்டும் ரத்தம் சிந்தப்படுகிறது. யாகத்தை தொடர்ந்து, தன் அகங்காரத்தால் தவறான ஒரு அடியை எடுத்து வைக்கும் துரியோதனன், பெரும் அவமானத்தை சந்திக்கிறான்.

மஹாபாரதம் பகுதி 31: தாய‌ விளையாட்டு

தாய‌ விளையாட்டு, Game of Dice, மஹாபாரதம், மகாபாரதம், Mahabharatham in Tamil

 

மஹாபாரதம் தொடரின் இந்த பகுதியில், இந்த மாபெரும் இதிகாசத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டத்திற்கு நாம் வருகிறோம். இதில், மிக நுட்பமாக பின்னப்பட்ட வலை எளிமையான தாய விளையாட்டு வடிவில் வந்து நிற்கிறது. யுதிஷ்டிரன் தனது சொத்து, தனது ராஜ்ஜியம், தனது சகோதரர்கள், தன் சுதந்திரம் என எல்லாவற்றையும் உருட்டி எறிகிறான். இறுதியாக ஆபத்பாந்தவனாக கிருஷ்ணர் பாதுகாப்பளித்து அவனது மனைவியை அவமானத்தில் இருந்து காக்கிறார்.

மஹாபாரதம் பகுதி 32: திரௌபதியை முன்னிறுத்தி கிருஷ்ணரின் சபதம்

மஹாபாரதம் தொடரின் இந்தப் பகுதியில், அடுத்து நடக்கப்போகும் சம்பவங்களுக்கான அச்சு வார்த்தெடுக்கப்படுகிறது. ஆவேசத்திலிருக்கும் திரௌபதிக்காக கிருஷ்ணர் மேற்கொள்ளும் சபதம் பதின்மூன்று ஆண்டுகளுக்கு பிறகு போர் மேகங்கள் கவியும் சூழலுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

மஹாபாரதம் பகுதி 33: வனவாச வாழ்க்கை

மஹாபாரதம் தொடரின் இந்தப் பகுதியில், பாண்டவர்களும் திரௌபதியும் கானகம் செல்கிறார்கள். அதுவரை கிடைத்து வந்த நகர வாழ்வின் நாகரீகம் மற்றும் சௌகர்யங்களிலிருந்து விலகி, காட்டில் நிலவும் இயற்கையின் விதிமுறைகளுக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கை முறையை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மஹாபாரதம் பகுதி 34: வேட்டையை தடுக்கும் விதுரர்

ஆயுதமின்றி நிராயுதபாணிகளாக கானகத்தில் வாழும் பாண்டவர்களை வேட்டையாட துடிக்கும் துரியோதனன் மற்றும் கர்ணனின் திட்டத்தை தடுக்க தன் சகோதரனை சந்திக்க வருகிறார் விதுரர்.

மஹாபாரதம் பகுதி 35: துர்வாசர் வருகை - கோபத்தையும் சாபத்தையும் தவிர்த்தல்

பாண்டவர்களை வனவாசத்திற்கு அனுப்பியதில் திருப்தி அடையாத துரியோதனன், அவர்கள் இன்னும் துன்பப்பட வேண்டும் என்பதற்காக ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி, பாண்டவர்களுக்கு சாபம் நிகழும்படி வழி ஏற்படுத்த முயல்கிறான்.

மகாபாரதம் பகுதி 36: துரியோதனனை மீட்கும் பாண்டவர்கள்

பாண்டவர்களை அவமானப்படுத்த புதிய திட்டமொன்றை தீட்டுகிறான் துரியோதனன். ஆனால் அது அவன் மீதே திரும்புகிறது.

மகாபாரதம் பகுதி 37: அர்ஜுனனின் அஸ்திரங்கள்

எவ்வளவு முயற்சி செய்தும், திரௌபதியால் யுதிஷ்டிரனுக்குள் பழிவாங்கும் உணர்வை ஏற்படுத்த முடியாமல் போகிறது. போர் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்பதை உணரும் அர்ஜுனன், போருக்கு தேவையான அஸ்திரங்களை பெற தன் பயணத்தை துவங்குகிறான்.

மஹாபாரதம் பகுதி 38: பீமனுக்கு பணிவை பாடமெடுக்கும் ஹனுமன்

பீமன் அனுமனின் வாலைத் தூக்க முயற்சி செய்தல்,  , Bhiman lifting Hanuman’s tail, மஹாபாரதம், மகாபாரதம், Mahabharatham in Tamil

 

பாண்டவர்களின் 12 வருட வனவாசம் முடிவை நெருங்குகிறது. போர் வரும் என்பதை உணர்ந்த அர்ஜுனன் தவத்தில் ஈடுபட்டு தேவையான அஸ்திரங்களைப் பெறுவதற்காக இமாலயம் செல்கிறான். தங்களைப் பிரிந்து நீண்ட காலமாகியும் தகவல் ஏதும் இல்லாததால் அர்ஜுனனை தேடிக்கொண்டு இமாலயத்தின் அடிவாரமான பத்ரிநாத் வரை வருகிறார்கள் பாண்டவர்கள். அங்கு, பீமனின் பெரும் குறையாக இருந்த கர்வத்தை களைவதற்காக ஒரு சோதனை‌ நடத்தி பாடம் புகட்டுகிறார் ஹனுமன்.

மகாபாரதம் பகுதி 39: யட்சனின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் யுதிஷ்டிரன்

யுதிஷ்டிரனுக்கு யட்சனுக்கும் இடையேயான இந்த ஆழமான உரையாடல் மூலம் யுதிஷ்டிரனின் நீதியுணர்வு, தர்ம உணர்வு ஆகியவை வெளிப்படுகிறது. தர்மராஜன் என்று அழைக்கப்படுவதற்கு தான் முற்றிலும் தகுதியானவனே என்பதை யுதிஷ்டிரன் மீண்டும் ஒருமுறை நிரூபிப்பது போல் அமைகிறது இந்நிகழ்வு.

மஹாபாரதம் பகுதி 40: பாண்டவர்களின் அஞ்ஞானவாசம்

பாண்டவர்களும் திரௌபதியும் 12 வருட கால வனவாச வாழ்க்கையைப் பூர்த்தி செய்கிறார்கள். அடுத்ததாக, தங்கள் சுய அடையாளத்தை மறைத்துக்கொண்டு ஏதாவது ஒரு நகரில் மக்களோடு மக்களாக ஒரு வருட காலம் வாழ வேண்டும் என்பதே அவர்களுக்கான அடுத்த சவால். இதில் வெற்றி பெறுவதற்காக தங்கள் அடையாளம் மறையும்படி அனைவரும் மாறுவேடம் பூணுகிறார்கள்.

மஹாபாரதம் பகுதி 41: கௌரவர்களை தனி ஒருவனாக வீழ்த்தும் அர்ஜுனன்

பாண்டவர்களும் திரௌபதியும் தங்களது பன்னிரண்டு வருட வனவாசத்தை முடித்துவிட்டு இப்போது அரசர் விராடரின் ராஜ்ஜியத்தில் அஞ்ஞான வாசம் மேற்கொள்கிறார்கள். அஞ்ஞானவாச காலம் பூர்த்தியடையும் நிலையில் குரு படை அவர்களை தேடிக்கொண்டு வருகிறது. அடையாளம் காணப்பட்டுவிடும் சூழலை பீமன் ஏற்படுத்தவே, துரியோதனன், கர்ணன், துச்சாதனன் மற்றும் பீஷ்மர் என அனைவருடனும் அர்ஜுனன் மோத வேண்டியதாகிறது.

மஹாபாரதம் பகுதி 42: மஹாபாரதத்தின் மாபெரும் வீரன்

மஹாபாரத இதிகாசத்தில் மிக பலம் வாய்ந்த போர்வீரன் யார்? கிருஷ்ணரா, அர்ஜுனனா? ஒருவேளை துரோணாச்சாரியார் அல்லது கர்ணனோ? இல்லை, இவர்களை விட பலசாலி ஒருவன் இருக்கிறான், அதுவும் தெற்கிலிருந்து வந்தவன். அந்த மாவீரன் யார் என்பதை வாசித்து அறியுங்கள்.

மஹாபாரதம் பகுதி 43: அனைத்திலும் மோசமான குற்றம்

குருஷேத்திரத்தில் மகாயுத்தம் துவங்குகையில், அர்ஜுனனுக்கு சில சந்தேகங்கள் ஏற்படுகிறது. எக்காலத்திலும் நிலையான புகழ் பெற்று திகழும் பகவத்கீதையை உபதேசிக்கும் கிருஷ்ணர், தயக்கமே அனைத்திலும் மோசமான குற்றம் என்பதை விளக்குகிறார்.