Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
நன்றியுணர்வு என்பது ஒரு மனப்பான்மை இல்லை. நன்றியுணர்வு என்பது நீங்கள் பெற்றிருப்பதன் மகத்துவம் உணர்ந்து பிரமிக்கும்போது உங்களுக்குள் ஊற்றெடுப்பது.
நீங்கள் எந்த அளவு விசேஷமானவராக இருக்க முயல்கிறீர்களோ, அந்த அளவு காயப்படுவீர்கள். வெறுமனே இருங்கள், கரைந்திடுங்கள், காற்றுடனும் மண்ணுடனும் அனைத்துடனும் ஒன்றாகக் கலந்திடுங்கள். இந்த படைப்பு விரும்புவதும் அதைத்தான்.
நீங்கள் கட்டாயத்தினால் எதிர்செயல் செய்தால், நீங்கள் தற்போது இருக்கும் நிலையை வெளிசூழ்நிலைகள் நிர்ணயிக்கும். நீங்கள் விழிப்புணர்வுடன் பதில்செயல் செய்தால், உங்கள் நல்வாழ்வு முற்றிலும் உங்கள
ஆனந்தமாகவும், பொறுப்பாகவும், சிறிதளவு புத்திசாலித்தனத்துடனும் இருக்கும் ஒரு மனிதரால், அனைத்தையும் மிகவும் சீரியஸாக அணுகும் ஒருவரை விட, சவாலான சூழ்நிலைகளை வெகுசிறப்பாக கையாளமுடியும்.
இந்த நாளும் காலமும், உள்வாங்கிக்கொள்ளவும், அருள்பெறவும், ஞானமடையவும், முக்தியடையவும் உகந்தது. அனைத்திலும் உயர்ந்ததை அடைய ஊக்கம் பெறுவீர்களாக!
போட்டியாளர்கள் எதிரிகள் இல்லை. அவர்கள் உங்கள் குறைகளை தொடர்ந்து நினைவுபடுத்துபவர்கள், உங்களை தரம் பரிசோதிப்பவர்கள்.
ஒரு ஆனந்தமான முகம் எப்போதும் அழகான முகமே.
வாழ்க்கையுடன் நீங்கள் சற்றே விளையாட்டாக இருந்தால், ஒவ்வொரு கணப்பொழுதும் கொண்டாட்டமாக இருக்கும்.
ஒரு மனிதராக, நீங்கள் ஒரு குறிப்பிட்ட விதமாக இல்லை, நீங்கள் மாற்றமடைந்துகொண்டே இருக்கிறீர்கள், தொடரும் ஒரு செயல்முறையாக இருக்கிறீர்கள். எதுவும் வரையறுக்கப்படவில்லை, நீங்கள் எப்படி இருக்க விரும்பினாலும் அப்படி இருக்கமுடியும்.