கேதார்நாத் யாத்திரை செல்வது எப்படி?
ஈஷாவுடன் இமயமலைப் பயணம் சென்று கேதார்நாத், பத்ரிநாத், மானா கிராமம், கங்கோத்ரி, கோமுக் ஆகிய புனித ஸ்தலங்களை தரிசித்த அனுபவத்தை சுவாரஸ்யமாக விளக்குகிறார் எழுத்தாளர் அஜயன் பாலா.

இமயமலை யாத்திரை - ஒரு சுவாரஸ்யமான அனுபவப் பகிர்வு
இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா

‘தியான யாத்திரை - ஈஷாவுடன் இமாலயா’ எனும் பெயரில் புத்தகமாக வெளிவந்த எழுத்தாளர் அஜயன் பாலா அவர்களின் இமயமலை பயண அனுபவங்களை, உங்களுக்காக இங்கே தொடராக வழங்கவுள்ளோம். ஈஷா புனிதப் பயண குழுவில் இணைந்து திரு. அஜயன் பாலா அவர்கள் பெற்ற அந்த சுவாரஸ்ய அனுபவங்களை அறிய தொடர்ந்து படியுங்கள்!
இரயில், பேருந்து, உணவு... கூடவே அகண்ட கங்கையின் பிரம்மாண்டமும்...

சென்ற முறை கிடைத்த அந்த அனுபவம் இந்த முறையும் அமையுமா? எனது பேருந்தினுள் திரும்பி நோட்டமிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் இவர்கள் யார் யார் என தெரிந்துவிடும். அதன் பின் இனி பதினைந்து நாட்களும் இவர்கள்தான் அப்பா, அம்மா, நண்பர்கள், உற்றார் உறவுகள் எல்லாம்.
இனிப்பை தேடி ஓடாமல் இனிப்பை வழங்கும் ஈஷா எறும்புகள்!

இமாலய பயணத்தின் ஆரம்பமாக ஹரித்துவார் விடுதியில் தங்கிய தருணத்தை விவரிக்கும் எழுத்தாளர் அஜயன்பாலா, ஈஷாவில் இனிப்பை தேடி ஓடாமல் இனிப்பை வழங்கக் கூடிய எறும்புகள் இருப்பதாக சொல்கிறார்! அவர் சொல்வது யாரை... தொடர்ந்து படித்தறியுங்கள்!
பள்ளிநாட்களை நினைவூட்டிய ஹரித்துவார் சண்டிதேவி கோயில் அனுபவம்!

ஹரித்துவாரில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சண்டிதேவி கோயிலுக்கு சென்ற அந்த சுவாரஸ்ய அனுபவத்தை விவரிக்கும் எழுத்தாளர், மனதில் குதூகலம் பொங்கும்விதமாக ஈஷாவில் யோகப் பயிற்சிகளோடு ஒருங்கிணைக்கப்படும் விளையாட்டுகள் குறித்தும் பகிர்ந்துகொள்கிறார்!
ஹரித்துவாரிலிருந்து குப்தகாசிக்கு சென்ற அனுபவம்!

இமாலயத்தின் அடிவாரமான ஹரித்துவாரிலிருந்து இயற்கை எழில்மிகுந்த வழித்தடத்தின் வழியாக குப்தகாசியை சென்றடைந்த அனுபவத்தையும், பேருந்து பயணத்தின் நடுவில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களையும் விவரித்து சுவைகூட்டுகிறார் எழுத்தாளர்!
குப்தகாசியில் சத்குரு பெற்ற அனுபவங்கள்!

Subscribe
இமாலய பயண தடத்தில் ஒரு குட்டி நகராக விளங்கும் குப்தகாசி, தன்னகத்தே மறைத்து வைத்துள்ள பிரம்மாண்டங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் நாம் அறிந்துகொள்ளலாம்! குப்தகாசியில் சத்குரு பெற்ற அனுபவங்களையும் இதன்மூலம் அறியமுடிகிறது!
தலைமேல் விழுந்த நீர்பாறைகள்!

குளிர், மழை போன்ற புறச்சூழல்களை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தாலும், உடல் மற்றும் உள்நிலையில் முன்னேற்பாடுகள் செய்திராதநிலையில், கேதார் நடைபயணத்தை மேற்கொண்ட எழுத்தாளர் சந்தித்த தடைகள் என்னென்ன என்பதை அவரே விவரிக்கிறார். கொட்டும் மழையில் குதிரை சவாரி... எப்படி தடைபட்டது என்பது சுவாரஸ்யம்! தொடர்ந்து படித்தறியுங்கள்!
கேதார்நாத் ஜோதிர்லிங்க தரிசனம்... மகத்துவமும் தனித்துவமும்!

கேதார்நாத் ஜோதிர்லிங்க தரிசனம் தனக்கு வழங்கிய பரவச அனுபவத்தை விவரிக்கும் எழுத்தாளர், அக்கோயிலின் வரலாற்றுப் பின்னணி குறித்தும் தனித்துவங்கள் குறித்தும் பேசுவதோடு, ஆதிசங்கரர் பற்றி சத்குரு சொன்ன வியக்க வைக்கும் செய்திகளையும் பகிர்ந்துகொள்கிறார்!
பச்சை மலைகளை அடுத்து வந்த முதல் பனிச்சிகரம்

பத்ரிநாத் நோக்கி செல்லும் வழியில் தனக்கு மீண்டும் கிடைத்த ஜன்னல் சீட் பற்றியும் வழியில் தாங்கள் கண்ட காட்சிகளின் அழகியல் குறித்தும் விவரிக்கும் எழுத்தாளர், பத்ரிநாத் கோயிலுக்குள் நுழையும் முன் கடைப்பிடிக்கப்படும் ஒரு ஐதீகம் என்ன என்பது பற்றியும் குறிப்பிடுவது சுவாரஸ்யம்!
பத்ரிநாத் கோயில் பற்றி சத்குரு சொன்ன புராணக் கதை!

பத்ரிநாத் கோயில் முன் உள்ள வெந்நீர் ஊற்று பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவலையும், மலை உச்சிக்கு சென்றபோது வழிமறித்த குரங்கு கூட்டத்திடமிருந்து தப்பித்து வந்த நிகழ்வினையும் தாங்கியபடி சுவைகூட்டுகிறது இந்த பதிவு! மேலும், பத்ரிநாத் கோயில் பற்றி சத்குரு சொன்ன புராணக் கதையை நமக்காக வழங்குகிறார் எழுத்தாளர்.
சிவனும் பார்வதியும் பத்ரிநாத்திலிருந்து கேதார்நாத்துக்கு இடம்பெயர்ந்த காரணம்...?

சிவனும் பார்வதியும் குடியிருந்ததாக கூறப்படும் பத்ரிநாத் கோயிலை விஷ்ணு தந்திரமாக கைப்பற்றியது எப்படி என்ற புராண கதையின் சுருக்கத்தை இங்கே விளக்கியுள்ள எழுத்தாளர், பத்ரிநாத்தில் விற்பனையாகும் சாலகிராம கற்கள் பற்றியும் அதன் தன்மையை பரிசோதிக்க ஈஷா அன்பர்கள் பயன்படுத்திய சுவாரஸ்ய வழிமுறை என்ன என்பது பற்றியும் விவரிக்கிறார்!
இந்தியாவின் கடைசி கிராமம் மானாவைப் பற்றி...

இந்தியாவின் கடைசி கிராமம் என அழைக்கப்படும் மானாவிற்குச் சென்ற அனுபவங்களைப் பற்றி சுவைபடப் பகிர்கிறார் எழுத்தாளர் அஜயன் பாலா. பொன்னிறமாக மாறிய மலைச்சிகரம் பற்றி குறிப்பிடும் விவரிப்பு அந்த காட்சியைக் கண்முன் நிறுத்துகிறது!
கங்கோத்ரிக்குப் புறப்படும் முன் நிகழ்ந்த குருபூஜை... புரிந்துகொண்ட உண்மை!

பத்ரிநாத்திலிருந்து கங்கோத்ரிக்குப் புறப்படும் தருணத்தில் நிகழ்ந்தவற்றை விவரிக்கும் எழுத்தாளர், அங்கே லக்கேஜ்களை வாகனங்களில் ஏற்றும் செயல்முறைகூட ஆன்மீகத்தின் திறவுகோலாக அமைகிற அழகை குறிப்பிடுகிறார். குறிப்பாக அங்கே நிகழ்ந்த குருபூஜை பற்றியும் குருபூஜை செய்வதிலுள்ள தத்துவம் குறித்த தனது கருத்தையும் பதிவுசெய்கிறார்!
‘காசி’ என்ற பெயர்கொண்ட உத்தர் காசியின் மகிமைகள்!

உத்தர்காசி எனும் ஊரின் தனிச்சிறப்புகளை தன் எழுத்தின்மூலம் நம் கண்முன் நிறுத்தும் எழுத்தாளர் அஜயன்பாலா, அந்த கோயிலின் வரலாற்று தன்மைகளையும், அந்த இடத்தின் ஆன்மீக முக்கியத்துவங்களையும் எடுத்துரைக்கிறார்!
கோமுக் பயணத்தில் எதிர்கொண்ட நிலச்சரிவு... சுவாரஸ்யமும் மிரட்சியும்!

இமாலயப் பயணத்தின் உச்சமாக கோமுக் செல்லும் வழியில், கங்கையின் பிறப்பிடமாம் கங்கோத்ரி பயணத்தில் எதிர்கொண்ட நிலச்சரிவு குறித்தும், அப்போது வழித்தடத்தில் கண்ட அப்பகுதி மக்களின் தனித்துவங்கள் குறித்தும் சுவைபட விவரிக்கிறார் எழுத்தாளர்.
கங்கை பிறக்கும் இடத்தில் கிடைத்த உன்னத அனுபவம்!

கங்கையின் பிறப்பிடமான கங்கோத்ரியின் சிறப்புகள் குறித்து விவரிக்கும் எழுத்தாளர், மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கங்கையில் நீராட வேண்டுமென்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறார். அதற்கான காரணம் என்ன என்பதையும், கடுமையான மலையேற்றமான கோமுக் பயணத்தில் தான் எதிர்கொண்ட இடர்பாட்டையும் இதில் கூறுகிறார்!
பாதை முடிகிறது பயணம் தொடர்கிறது!

கடும் சவால்கள் நிறைந்த பயணமாக அமைந்த கோமுக் பயணத்தை பற்றியும், வழிநெடுகில் தான் அனுபவித்த மறக்கமுடியாத தருணங்கள் பற்றியும் பகிர்ந்துகொள்ளும் எழுத்தாளர், இமாலயப் பயணம் மேற்கொள்பவர்களுக்கான சில முக்கிய பயணக்குறிப்புகளைத் தந்து தொடரை நிறைவு செய்கிறார். மயங்கி விழுந்துகிடந்த மனிதர், கோமுக்கை அடைந்தது எப்படி சாத்தியமானது என்பதைத் தொடர்ந்து படித்தறியுங்கள்!

