இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா -பகுதி 3

இமாலய பயணத்தின் ஆரம்பமாக ஹரித்துவார் விடுதியில் தங்கிய தருணத்தை விவரிக்கும் எழுத்தாளர் அஜயன்பாலா, ஈஷாவில் இனிப்பை தேடி ஓடாமல் இனிப்பை வழங்கக் கூடிய எறும்புகள் இருப்பதாக சொல்கிறார்! அவர் சொல்வது யாரை... தொடர்ந்து படித்தறியுங்கள்!

திரு. அஜயன் பாலா:

இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா, writer ajayan balaநான் மதங்களை வெறுப்பவன்.

நமது உடலில் இரத்தம் +, - என்றுதான் வகைப்படுத்தப் பட்டிருக்கிறதே தவிர, இந்து ரத்தம், இஸ்லாம் ரத்தம், கிறித்துவ ரத்தம் என்று வகைப்படுத்தப்பட வில்லை.

அவரவர் புவியியல் அமைப்பு அவரவருக்கான மனஅமைப்பையும் உணர்வு நிலைகளையும் உருவாக்க, அதன் வழியாக மனிதன் இயற்கைக்கும் தனக்குமான தொடர்பை தேடினான்.

ஆன்மீகம் வாழ்வாகி கலாச்சாரமாகி, பின் இறுகி மதம் ஆனது.

ஈஷாவோடு நான் ஈடுபாடு கொள்ள முதல் காரணம் அது மதத்தை முன்னிறுத்தவில்லை.

எனக்கு தெரிந்து பல இஸ்லாமிய நண்பர்கள், கிறித்துவ நண்பர்கள் ஈஷாவின் தீவிர அபிமானிகளாக இருந்து வருகிறார்கள்.

ஈஷா எல்லோருக்கும் பொதுவான ஒரு கதவை திறந்து விடுகிறது. தியானலிங்கம் எனும் அதன் மையப் பொருள் வழியாக மனித மனங்களை சமநிலைப்படுத்துகிறது. ஈஷாவில் என்னை ஈர்த்த இரண்டாவது அம்சம் இரண்டு சொற்கள்.

அண்ணா! அக்கா!

எத்தனை வயதுதான் பெரிய பெண்மணியானாலும் ஒரு இளைஞனை பார்த்து அண்ணா என அழைப்பதும், எவ்வளவு வயதான முதியவரானாலும் ஒரு இளைய பெண்ணை பார்த்து அக்கா என அழைப்பதும், ஆச்சர்யமூட்டும் அழகு.

எத்தனை வயதுதான் பெரிய பெண்மணியானாலும் ஒரு இளைஞனை பார்த்து அண்ணா என அழைப்பதும், எவ்வளவு வயதான முதியவரானாலும் ஒரு இளைய பெண்ணை பார்த்து அக்கா என அழைப்பதும், ஆச்சர்யமூட்டும் அழகு.

ஹரித்துவாரில் ஒரு பிரம்மாண்டமான 300 அறைகள் கொண்ட அந்த நாற்கர விடுதிக்குள் நாங்கள் மூட்டை முடிச்சுகளுடன் இறங்கியவுடன் எங்கு பார்த்தாலும் இதே குரல்கள், அண்ணா ஒரு கை கொடுங்க, அக்கா இங்க பாத்ரூம் எங்க இருக்கு!

அறிமுகமில்லாத ஆட்கள் சட்டென நம் மனதுக்குள் எந்த விகல்பமும் இல்லாமல் உட்கார்ந்து விடுகின்றனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரே நாளில் 200 உறவுகள், புதிய உறவுகள் கிடைத்த மகிழ்ச்சி அங்கு நமக்கு கிடைத்துவிடும். அதன் பிறகு அவர் யார், எவர், என்ன தகுதி, கல்வி போன்ற அனைத்தும் ஒரே நிமிடத்தில் மாயமாய் மறைந்து, அன்பு நிறைந்த மனித இதயங்களாக நம் முன் முகம் மலர்ந்து காட்சியளிப்பர்.

அந்த மலர்ச்சிக்கு காரணம் ஈஷாவின் யோகா வகுப்புகள். அதன் துவக்க வகுப்புக்கு பெயர் ஷாம்பவி மஹாமுத்ரா. இந்த ஏழு நாள் வகுப்பு செய்தாலே போதும் ஒருவருக்குள் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை போன்றவை அடித்து நொறுக்கப்பட்டு, மனதுக்கு சிக்ஸ்பேக் போடப்பட்டு வெளியேற்றப்படுவர். மேலும் மூச்சு பயிற்சி வேறு, ஆற்றலை பெருக்குவதால் இயல்பாக ஈஷா பயின்றவர்களிடம் ஒரு எனர்ஜி இருக்கும். நல்ல எண்ணமும் சிந்தனைகளும் அதன் வழியாக அவர்கள் மனதில் சதா பெருக்கெடுக்கும். அப்படிப்பட்ட 200 பேர் மத்தியில் நாம் இருக்கும்போது நம்மில் தானாக ஊற்றெடுக்கும் மலர்ச்சிக்கும் புத்துணர்வுக்கும் பஞ்சமே இல்லை. அதே சமயம் ஈஷா வகுப்பே எடுக்காமல் நேரடியாக சிலரும் ஆர்வம் காரணமாக பயணத்தில் வந்திருந்தனர், அவர்கள் நிலை?

ஹரித்துவார் விடுதியில் அனைவருக்கும் ஒதுக்கப்பட்ட அறைகளுக்குள் புகுந்து அரை மணி நேரத்தில் புது ஆடைகளுடன் புத்துணர்ச்சி மிக்கவர்களாக வெளிவந்தனர்.

மத்தியிலிருக்கும் பிரமாண்டமான ஹாலில் கூடினோம். ஹாலின் ஒரு பக்கம் சிறிய பளிங்கு கோயில் அதன் எதிரே ஈஷா ஆசிரியர்கள் வரிசையாக நின்றிருந்தனர். தியான யாத்திரையின் துவக்க காலங்களில் பயணத்தில் தலைமையேற்ற சத்குரு அவர்கள், தன் பயண திட்டங்களின் மாறுதல் காரணமாக பிற்பாடு அந்த பொறுப்பை தன் சீடர்களான ஈஷாவின் யோக ஆசிரியர்களிடம் ஒப்படைத்தார்.

எங்களுடன் மொத்தம் எட்டு பேர் வழிநடத்துவதற்காக வந்திருந்தனர்.

அவர்களில் ஆண் பிரம்மச்சாரிகளை ஸ்வாமி என்றும், பெண் பிரம்மச்சாரிகளை மா என்றும் அழைத்தனர்.

ஈஷாவின் முக்கிய சக்கரங்கள் இவர்கள்தான். சுறுசுறுப்புக்கு பொதுவாக எல்லோரும் எறும்பை உதாரணமாக சொல்வார்கள். ஆனால், நான் இவர்களைத்தான் சொல்வேன்.

பார்வைக்கும், அவர்கள் உடை தோற்றம் கூட, நடமாடும் எறும்பை போலத்தான் இருக்கும். ஆனால் என்ன எறும்புகள் இனிப்பை தேடி ஓடும். ஆனால், இவர்களோ இனிப்பை தருவார்கள். தம் சுபாவத்தால் இனிமையை இதயத்துள் உருவாக்குவார்கள்.

அதேபோல இவர்கள் சாதுக்கள் என்றும் சாதாரணமாக அளவிடமுடியாது. எல்லோரும் அனைத்து துறைகளிலும் மிகுந்த பயிற்சியும் திறனும் மிகுந்தவர்கள். ஈஷாவில் வகுப்பெடுத்தாலே மனதுக்கு சிக்ஸ்பேக் எனும்போது அதன் ஆசிரியர்கள் என்றால் சும்மாவா?

ஈஷாவின் முக்கிய சக்கரங்கள் இவர்கள்தான். சுறுசுறுப்புக்கு பொதுவாக எல்லோரும் எறும்பை உதாரணமாக சொல்வார்கள். ஆனால், நான் இவர்களைத்தான் சொல்வேன்.

நாங்கள் கூடியிருந்த கூடலுக்கு சத்சங்கம் என்று பெயர். புத்தர் தன் சீடர்களுடன் உரையாடும் நிகழ்வில் துவங்கிய இந்த சத்சங்கம் குரு சீட மரபின் அஸ்திவாரம். அன்றைய சத்சங்கத்தில் பயணத்தை வழிநடத்தி செல்லும் தலைமை ஆசிரியர் அடுத்த பதினான்கு நாட்களின் பயணத்திட்டத்தை ஆங்கிலத்தில் கூறினார். அவர் ஆங்கிலத்தில் கூறுவதை ஒரு மா தமிழில் உடனடியாக மொழிபெயர்த்தார். இருவரது குரலிலும் அத்தனை கனிவு. ஒளி.

யார்? யார் இதற்கு முன் ஈஷா பயிற்சி எடுக்காதவர்கள்?
ஆங்காங்கு பலர் கை தூக்கினர் அவர்கள் தனியாக வரவழைக்கப்பட்டனர்.
உங்களுக்காக நாளை ஒருநாள் முழுக்க நாம் இங்கேயே தங்கப் போகிறோம்.

ஒருநாள் முழுக்க ஈஷா பயிற்சி வகுப்பு உங்களுக்கு எடுத்த பின்தான் நமது இமயமலை பயணம் என சொன்னார். அதற்குள் ஒருவர் எழுந்து அந்த ஒரு நாள் முழுக்க நாங்கள் என்ன பண்ணுவது என கேட்க, ஹரித்துவார் உங்களுக்காக காத்திருக்கு. இங்கு கங்கையை சுற்றி பல கோயில்கள் இருக்கு நாம எல்லோரும் அதை சுத்தி பாக்க போறோம். உடனே அனைவரது முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் மின்னியது.

இப்போ உங்களுக்காக உணவு காத்திருக்கு, எல்லோரும் சாப்பிடலாம். சட்டெனகூட்டம் கலைந்தது.

இரண்டாவது மாடியிலிருக்கும் எனது அறைக்கு சென்று தொலைபேசியில் சில தவறிய அழைப்புகளை அட்டண்ட் செய்துவிட்டு திரும்புவதற்குள் எனது சென்னை நண்பரான சுந்தர்ராஜன் இரண்டு பேரை அறிமுகப்படுத்தினார். ஒருவர் எனது வாசகர் செந்தில், தேனிக்காரர். இன்னொருவர் துரை. ஆள் நல்ல உயரமாக வாட்டசாட்டமாக இருந்தார். பார்த்தால் ஏதோ ரவுடி மாணவர் போல இருந்தவரை விசாரித்தபோது கல்லூரி பேராசிரியராம், நம்ப முடியவில்லை.

எங்கள் பயணத்தின் மகிழ்ச்சிக்கும் அவர்தான் பேராசிரியர் என்பது அப்போது எனக்கு தெரியவில்லை. கீழே எட்டி பார்த்தபோது உணவு பரிமாறும் இடத்தில் பாம்பு போல பெரும் வரிசைகூட்டம், கையில் தட்டுடன் நகர்ந்து கொண்டிருந்தது. பசி வயித்தை கிள்ளியது.

கீழே ஓடி வரிசையில் நின்று கொண்டிருந்தேன்.

ஒரு அப்பர்கிளாஸ் அப்பா ரோலுக்கு ஏற்ற ஒரு முகம் என்னை நோக்கி நெருங்கியது யார் அவர் என நான் ஊகிப்பதற்குள்

நீங்கதான் அஜயன்பாலாவா?

ஆமாம்!

என் பேரு திலீப் ஷா, என் பையன் உங்களுக்கு நல்லா தெரியுமாமே?

நீங்களும் இங்க வந்திருக்கறதா போன் பண்ணி பேசினான்.

அப்படியா உங்க பையன் பேரு?

நீரவ் ஷா!

அட! நம்ம கேமராமேன். மகிழ்ச்சியுடன் அவரோடு கைகுலுக்கி அவரையும் வரிசையில் நிற்க வைத்து பேசிக்கொண்டிருக்க என் தட்டு நகர்ந்துகொண்டே ஒரு ஆப்பிளுடன் கொஞ்சம் சாதம் சாம்பாருடன் இரண்டு சப்பாத்தியும் குருமாவும் உடன் ஒரு இனிப்பையும் வாங்கிக்கொண்டு நகர கண்கள் அமர இடம் தேடி அலைந்தது.

வரும் பதிவில் ஹரித்துவாரில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சண்டிதேவி கோயிலுக்கு சென்றுவந்த ரோப்கார் அனுபவம் குறித்து சுவைபட விவரிக்கிறார் எழுத்தாளர்!

குறிப்பு: ஈஷாவுடன் இமாலயம் செல்ல வாருங்கள். வரும் செப் 15 அன்று துவங்கவுள்ள இந்த இமாலயப் பயணத்தில் நீங்களும் பங்குகொள்ள முன்பதிவுகள் அவசியம்.

தொடர்புக்கு: 94 88 111 333, 94 88 111 555

வலைதளம்: www.sacredwalks.org