கேள்வி:மனச்சோர்வு மற்றும் மன சஞ்சலம் போன்ற மனநோய்கள் தற்போது உலகின் பல பகுதிகளிலும் - இந்தியாவையும் சேர்த்து - அதிகமாக பரவி வருகின்றன. அது பற்றி உங்கள் எண்ணம் என்ன?

சத்குரு: மனநோயோடு இருப்பது வேடிக்கையான விஷயம் அல்ல. அது மிகத் துன்பம் தருகிற ஒன்று. உங்களுக்கு உடளவில் நோய் இருந்தால் மற்றவரின் இரக்கத்தை நீங்கள் பெறுவீர்கள். ஆனால் நீங்கள் மனதளவில் நோயுற்றால் துரதிருஷ்டவசமாக, நீங்கள் கேலிச் சிரிப்பைத்தான் பெறுவீர்கள். இதற்கான காரணம் ஒருவர் எப்போது நோயுற்றிருக்கிறார், எப்போது மூடத்தனமாக நடந்து கொள்கிறார் என்பதை அறிந்து கொள்வது மிகக் கடினம். ஒருவருக்கு தன் குடும்பத்தில் மனநோயால் பாதிக்கப்பட்டவர் இருந்தால் அவருக்கு அதுதான் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். அவர் உண்மையிலேயே துன்பப்படுகிறாரா அல்லது நடிக்கிறாரா என்பதை உங்களால் தெரிந்துகொள்ள இயலாது. எப்போது பரிவோடு இருப்பது, எப்போது சற்று கடினமாக நடந்து கொள்வது என்று உங்களுக்குத் தெரியாது.

மனித மனநலம் என்பது மிக மெலிதான எளிதில் உடையக்கூடிய ஒன்று. மனநலத்துக்கும் பைத்தியத்துக்கும் இடையே ஒரு மெலிதான கோடுதான் உள்ளது. அதை ஒவ்வொரு நாளும் நீங்கள் தள்ளிக்கொண்டே இருந்தால் ஏதோ ஒரு நாள் நீங்கள் அந்த கோட்டை கடந்துவிடுவீர்கள். நீங்கள் கோபம் கொண்டால் என்ன வார்த்தையை உபயோகிக்கிறீர்கள்? "உன் மேல் பைத்தியமாக இருக்கிறேன்," அல்லது, "எனக்கு இப்போது பைத்தியம் பிடிக்கிறது." சிறிதளவு கிறுக்குத்தனத்தை உங்களால் ரசிக்க முடியும் - நீங்கள் அந்தக் கோட்டை கடந்தால் அது ஏதோ ஒரு சுதந்திரத்தையும் சக்தியையும் கொடுப்பது போல் உங்களுக்கு தோன்றலாம். ஆனால் ஒரு நாள் உங்களால் திரும்ப முடியாத நிலை ஏற்படும் போதுதான் வேதனை ஆரம்பிக்கிறது. அது உடல் வலியைப் போல இருக்காது - மிக அதிகமான அளவு வேதனை தரக்கூடியது அது. மனநலம் குன்றியவர்களிடம் அவர்களுக்கு உதவும் வண்ணம் நான் உடன் இருந்திருக்கின்றேன். ஒருவருக்கும் இது வரக்கூடாது. ஆனால் துரதிருஷ்டவசமாக இது ஒரு தொற்றுநோயாக உலகில் பரவி வருகிறது.

ஏன் மனநோய் வெகுவாக பரவி வருகிறது?

மேற்கத்திய சமூகங்களில் இது பெருமளவு நிகழ்ந்து வருகிறது. இதில் இந்தியாவும் பின்தங்கி இருக்கப் போவதில்லை. குறிப்பாக இந்தியாவில் உள்ள நகரத்தில் வாழும் சமூகங்கள் இந்த திசையில் செல்லும். இதற்கு காரணம், பல வழிகளில், இந்திய நகரங்கள் மேற்கைக் காட்டிலும் பெரும் மேற்கத்திய சமூகமாக உள்ளது. அமெரிக்காவைக் காட்டிலும் இங்கு நிறைய மக்கள் ஜீன்ஸ் அணிகிறார்கள்!

முன்னெப்போதும் இல்லாத வகையில் மனநோய் இப்போது மிகவும் வளர்ந்து வருகிறது. ஏனெனில் மக்களிடம் இருக்கும் எல்லா ஆதரவுகளையும் நாம் அகற்றிவிட்டோம், ஆனால் அதற்கு பதிலாக எதையும் நாம் அவர்களுக்கு கொடுக்கவில்லை. மக்கள் மிக விழிப்புணர்வோடு தங்களுக்குள் திறன் கொண்டவர்களாக இருந்தால் நீங்கள் அந்த ஆதரவுகளை அகற்றினாலும் அவர்கள் நன்றாகவே இருப்பார்கள். ஆனால் அந்த திறனை அவர்களுக்கு கொடுக்காமல் அவர்களின் ஆதரவை நீங்கள் பிடுங்கினால் அவர்கள் உடைந்து போவார்கள்.

நீங்கள் செய்யும் சர்க்கஸ்-க்கு, வலை போல இருந்து, உங்களைக் காக்கும் ஒரு குழு உங்கள் குடும்பம். நீங்கள் எந்த வகையில் கீழே விழுந்தாலும் சில கணங்களாவது உங்களை தாங்கிக்கொள்ள யாரோ ஒருவர் இருப்பார்.

நம் மனம் மற்றும் உணர்ச்சியின் ஸ்திரத்தன்மைக்கு சில விஷயங்களை நாம் வெகு காலமாக நாடியிருந்தோம். ஆனால் இன்று அவை அனைத்தும் நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டன. அதில் ஒன்று குடும்பம். குடும்பம் நமக்கு ஒருவித ஆதரவை நல்கும் - எது நடந்தாலும் நம்மை ஆதரிக்க ஒருவர் இருப்பார். நீங்கள் சரியான செயல்களை செய்யும் போது அனைவரும் உங்களுடன் இருப்பார்கள். நீங்கள் ஏதாவது தவறு செய்யும் போது அவர்கள் உங்களை விட்டு விலகிச் சென்றுவிடுவார்கள். நீங்கள் செய்யும் சர்க்கஸ்-க்கு, வலை போல இருந்து, உங்களைக் காக்கும் ஒரு குழு உங்கள் குடும்பம். நீங்கள் எந்த வகையில் கீழே விழுந்தாலும் சில கணங்களாவது உங்களை தாங்கிக்கொள்ள யாரோ ஒருவர் இருப்பார். ஆனால் பலருக்கும் இந்த வலை இப்போது இல்லை. இப்போது நீங்கள் கீழே விழுந்தால் விழுந்ததுதான். இதன் காரணத்தினால் மக்கள் உடைந்து போகிறார்கள்.

இந்திய கலாச்சாரத்தில் ஒரு காலத்தில் 30 சதவிகித மக்கள் துறவிகளாக வாழ்ந்தனர். விழிப்புணர்வோடு அவர்கள் அவ்வாறு குடும்பம் இன்றி வாழ தேர்ந்தெடுத்தனர் - குடும்பம் இல்லாமல், எந்தவித ஆதரவும் இல்லாமல், வீடு இல்லாமல் - ஏதோ ஒன்றை இழந்ததால் அல்ல, தங்கள் விருப்பத்தோடு அந்த வாழ்வை தேர்ந்தெடுத்தனர். அவர்கள் எவருக்கும் மனச்சோர்வு ஏற்படவில்லை. ஏனெனில் பாதுகாப்பு வலை வேண்டும் என்ற தேவையை அவர்கள் கடந்துவிட்டனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் கயிற்றில் தொங்கும் தொங்குகோலில் சாகசம் புரிய நன்றாக கற்றிருந்தால் எந்த பாதுகாப்பு வலையும் இல்லாமல் அந்த சாகசத்தை உங்களால் நிகழ்த்த முடியும். ஆனால் நீங்கள் அதில் திறமை இல்லாதவராக இருந்தால் ஒரு வலையை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. இல்லையெனில் உங்கள் மண்டை உடைந்துவிடக் கூடும். இதுதான் தற்போது நிகழ்கிறது. நமக்கு இருந்த பாரம்பரிய ஆதரவு அமைப்பை நாம் அகற்றுகிறோம்.

மனநலம் குன்றி வருவதற்கான மற்றொரு காரணம் மதம். மனித மனதின் சமநிலையை மதம் வெகு இயல்பாக கையாண்டன. "கடவுள் உங்களோடு இருக்கிறார், கவலை கொள்ளாதீர்கள்." இந்த வாக்கியம் பலரையும் அமைதியுறச் செய்தது. இதனை குறைத்து மதிப்பிடாதீர்கள். இன்று மக்கள் மனநல மருத்துவரிடம் செல்கிறார்கள். இந்தியாவில் 130 கோடி மக்களுக்கு தேவையான அளவு மனநல மருத்துவர்கள் இல்லை. எந்த நாட்டிற்கும் அந்த வசதி இல்லை. அனைத்திற்கும் மேலாக, அவர்கள் திறமை குறைந்தவர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் அவர்களால் ஒரு நேரத்தில் ஒரு வாடிக்கையாளரை மட்டுமே சந்திக்க முடியும். மேலும் அவர்களுக்கு நிறைய இருக்கைகள் தேவைப்படும்! சகல மரியாதையுடன் மதத்தைப் பற்றிய இந்த அம்சத்தை நாம் அங்கீகரிக்க வேண்டும். அது ஒரு மலிவான வெகுஜன மனநல மருத்துவம்.

கேள்வி: கண்டிப்பாக இது நம்மை பாதித்துக் கொண்டிருக்கும் நெருக்கடி. மேலும் அதற்கு சிலர் உதவி நாடிச் செல்கிறார்கள். சில வேளைகளில் இந்த நோய்க்கான காரணம் இரசாயனத்தில் சமநிலை இல்லாமல் இருப்பது. அதற்கு மருந்து கொடுக்கப்படுகிறது. நம் உள்ளுக்குள்ளேயே இனிமையை உணர்ந்து கொள்வது பற்றி நீங்கள் கூறியுள்ளீர்கள். இந்த சூழலில் இது எவ்வாறு உதவும்?

ஒரு இரசாயனக் கலவை

சத்குரு: மனிதனுக்குள் ஏற்படும் இனிமையை வெவ்வேறு வகைகளில் புரிந்து கொள்ளலாம். இதை புரிந்து கொள்வதற்கான ஒரு எளிய வழி என்னவென்றால் எல்லா மனித அனுபவங்களுக்கும் அடிப்படையில் ஒரு இரசாயன மாற்றம் உள்ளது. நீங்கள் அழைக்கும் சமாதானம், மகிழ்ச்சி, அன்பு, கொந்தளிப்பு, அமைதி, வேதனை, பரவசம் - அனைத்திற்கும் இரசாயன அடிப்படை உள்ளது. ஆரோக்கியம் மற்றும் நோய்க்கும்கூட இரசாயன அடிப்படை உள்ளது. ஒரு மருத்துவரின் வேலை அந்த இரசாயனக் கலவையை கையாள்வதே. இன்று முழு மருந்தியலின் நோக்கமே இரசாயனங்களைக் கொண்டு உங்கள் ஆரோக்கியத்தை கையாள்வதுதான்.

அதைப்போலவே மனநோயும் பெரும்பாலும் வெளியில் இருந்து கொடுக்கப்படும் இரசாயனங்களைக் கொண்டே கையாளப்படுகின்றன. ஆனால் இந்த உலகில் நீங்கள் அறிந்துள்ள இரசாயனங்கள் அனைத்தும் ஒரு வகையில் நம் உடலில் ஏற்கனவே உள்ளன.

மனநலத்திற்கு யோகா

அடிப்படையில் ஆரோக்கியம் என்பதை ஒரு நிலையில் இனிமை என்றும் அறியலாம். உங்கள் உடல் இனிமையானதாக மாறினால் அதை ஆரோக்கியம் என்று சொல்வோம். அது மிக இனிமையானதாக மாறினால் அதை இன்பம் என்று சொல்வோம். உங்கள் மனம் இனிமையானதாக மாறினால் அதை அமைதி என்று சொல்வோம். அது மிக இனிமையானதாக மாறினால் அதை மகிழ்ச்சி என்று சொல்வோம். உங்கள் உணர்வு இனிமையானதாக மாறினால் அதை அன்பு என்று சொல்வோம். அது மிக இனிமையானதாக மாறினால் அதை கருணை என்று சொல்வோம். உங்கள் சக்திநிலை இனிமையானதாக மாறினால் அதை ஆனந்தம் என்று சொல்வோம். அது மிக இனிமையானதாக மாறினால் அதை பேரானந்தம் என்று சொல்வோம். உங்கள் சூழல் இனிமையானதாக மாறினால் அதை வெற்றி என்று சொல்வோம்.

உங்களுக்குள் துடித்துக் கொண்டிருக்கும் படைப்பின் மூலத்தை அடைவதற்கான வழியை யோகா வழங்குகிறது. உங்களுக்குள் ஒரு நுண்ணறிவு இருக்கிறது. ஒரு அரிசி மணியை அல்லது ஒரு வாழைப்பழத்தை அல்லது ஒரு ரொட்டித்துண்டை மனிதனாக மாற்றும் வல்லமை அந்த நுண்ணறிவுக்கு உண்டு.

நம் இனிமைத்தன்மையை நாம் இரசாயனங்களை உட்கொள்வதன் மூலம் கையாள நினைக்கிறோம். அமெரிக்காவில் 70 சதவிகித மக்கள் ஏதோ ஒரு பரிந்துரைக்கப்பட்ட மருந்தை உட்கொள்வதாக கூறப்படுகிறது. ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறைக்கு மிகப்பெரிய அளவில் பல வாய்ப்புகளை கொண்ட, அதிக செல்வம் நிறைந்த நாட்டில், 70 சதவிகித மக்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை உட்கொள்பவர்களாக இருக்கிறார்கள். உங்களுடைய மனநலம் மற்றும் ஆரோக்கியத்தை வெளியிலிருந்து கொடுக்கப்படும் இரசாயனங்களை உட்கொண்டு நீங்கள் கையாள முயற்சி செய்கின்றீர்கள்.

மனித உடல் மிகச் சிக்கலான இரசாயனத் தொழிற்சாலை. அதை வெளியில் இருந்து கையாள்வது மிகக் கடினமான ஒன்று. உங்கள் உள்ளிலிருந்து இதை நீங்கள் கையாள முடியும். ஆனால் அதற்கு உங்களுக்கு, உங்கள் உள் செல்லும் வழி தெரிய வேண்டும்! உங்களுக்குள் துடித்துக் கொண்டிருக்கும் படைப்பின் மூலத்தை அடைவதற்கான வழியை யோகா வழங்குகிறது. உங்களுக்குள் ஒரு நுண்ணறிவு இருக்கிறது. ஒரு அரிசி மணியை அல்லது ஒரு வாழைப்பழத்தை அல்லது ஒரு ரொட்டித்துண்டை மனிதனாக மாற்றும் வல்லமை அந்த நுண்ணறிவுக்கு உண்டு. ஒரு சிறு ரொட்டித்துண்டை கொண்டு இந்த உலகின் மிகவும் நுட்பமான அமைப்பை நீங்கள் உருவாக்குகிறீர்கள்! இந்த நுண்ணறிவின் ஒரு துளி உங்கள் தினசரி வாழ்வில் நுழைந்தால் நீங்கள் அதிசயமான வாழ்க்கையை வாழ்வீர்கள், பரிதாபமான வாழ்க்கையை அல்ல.

மக்கள் துன்பப்படுவது அவர்களின் மனரீதியான நாடகத்தினால்தான். இது உங்கள் நாடகம்தான், ஆனால் மிகவும் மோசமாக இயக்கப்பட்ட நாடகம். நீங்கள் அதனால் துன்பப்பட்டால், உங்களை சுற்றி இருப்பவர்களும் அதனால் கட்டாயம் துன்பம் அடைவார்கள். உங்கள் நாடகம் மோசமாக இயக்கப்பட்ட ஒன்றாக இருந்தால், உங்களால்தான் அதை சுவாரஸ்யமான நாடகமாக மாற்ற இயலும். உங்கள் மனதில் நிகழ்வது வெறும் நாடகம்தான். நீங்கள் ஒரு நல்ல இயக்குனராக மாற வேண்டும், அவ்வளவுதான். உங்கள் நாடகம் நீங்கள் விரும்பியபடி நிகழும். இந்த உலகின் நாடகம் உங்கள் வழியில் நடக்காது. ஏனெனில் அது உங்களை விட மிகப் பெரியது. ஆனால் குறைந்தது உங்கள் தலைக்குள் நிகழும் நாடகம் உங்கள் வழியில் நிகழவேண்டும். இதை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய காலம் வந்துவிட்டது.

உங்கள் வெளிச்சூழலை கட்டமைக்கும் திறன் உங்களுக்கு இருப்பது போல, உங்கள் உள்சூழலையும் உங்களால் கட்டமைக்க முடியும். வெளிச்சூழலில் வசதிகளும் சுகங்களும் அமைத்துக்கொள்ள அறிவியலும் தொழில்நுட்பமும் இருப்பது போல, உங்களின் உள்நிலை நல்வாழ்வுக்கான அறிவியலும் தொழில்நுட்பமும் உள்ளது. உங்களின் உள்சூழலை கட்டமைக்கும் வழி உள்ளது. நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்களோ அந்த அடிப்படை இரசாயனத்தையே மாற்றியமைக்க, அறிவியல் பூர்வமான வழிமுறைகள் உள்ளன. அதன் மூலம் ஆனந்தத்தின் இரசாயனத்தை உங்களால் உருவாக்க முடியும். ஆனந்தத்தின் இரசாயனத்தை நீங்கள் உருவாக்கிய பின்னர், இயல்பாகவே நீங்கள் ஆனந்தமாக இருப்பீர்கள், வேறு ஒன்றின் காரணத்தால் அல்ல. இந்த தொழில்நுட்பத்தையே ஈஷா யோகா என்று உங்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.

நீங்கள் மனச்சோர்வு மற்றும் மனக்கவலையிலிருந்து வெளியே வர இணையவழி ஈஷா யோகா உதவும்

இந்தியானா யுனிவர்சிட்டி, பெத் இஸ்ரேல் டியாகோனஸ் மருத்துவ மையம், ரூட்கேர்ஸ் யுனிவர்சிட்டி மற்றும் ஃப்ளோரிடா யுனிவர்சிட்டி ஆகியவற்றில் இருந்து வரும் ஆராய்ச்சியாளர்கள் விரிவான ஆராய்ச்சியை நடத்தியுள்ளனர் - ஈஷா யோகா பயிற்சியை 90 நாட்கள் தொடர்ந்து செய்வதினால் மூளையில் இருந்து பெறப்பட்ட நியூரோட்ரோபிக் காரணி (BDNF) அளவு 300 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று இந்த ஆராய்ச்சியின் மூலம் அவர்கள் கண்டறிந்துள்ளனர். BDNF குறைவாக உள்ள நிலையில் அது மனக்கவலை, மனச்சோர்வு, அல்சைமர், உணர்வுச்சோர்வு மற்றும் அதிகப்படியான களைப்பு போன்ற நோய்களுக்கு இட்டுச் செல்லும் என்பது ஒரு நிறுவப்பட்ட உண்மை. எனவே ஈஷா யோகா மூலம் மக்கள் தங்களின் மனச்சோர்வு நிலையிலிருந்தும் மனக்கவலையான சூழலில் இருந்தும் வெளியே வரும் திறனை பெறுகின்றனர்.

ஈஷா யோகப் பயிற்சி முறை என்பது உடல், மனம், உணர்வு மற்றும் சக்தி நிலையை உட்படுத்தி செய்யப்படும் பயிற்சி. உடல் மற்றும் சக்தி குறித்து நாம் செய்ய வேண்டியவற்றை, நேரடியாகதான் செய்ய வேண்டும். ஏனெனில் அது ஒரு பரிமாற்றம், கற்பித்தல் அல்ல. ஆனால் மனம் மற்றும் உணர்வு குறித்து நாம் செய்வது ஒரு வகையான கற்பித்தல் ஆகும். அதை நீங்கள் இணைய வழியிலும் பெற முடியும்.

ஈஷா யோகா பயிற்சியை 90 நாட்கள் தொடர்ந்து செய்வதினால் மூளையில் இருந்து பெறப்பட்ட நியூரோட்ரோபிக் காரணி (BDNF) அளவு 300 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று இந்த ஆராய்ச்சியின் மூலம் அவர்கள் கண்டறிந்துள்ளனர்

மக்களில் பலருக்கும், அவர்களின் எண்ணம் மற்றும் உணர்வில் மாற்றம் வருவதாலேயே, அவர்களின் வாழ்வு வெகுவாக மாறுவதை நீங்கள் காணமுடியும். நீங்கள் வேண்டுவதைப் பற்றி நீங்கள் எண்ணினால் - ஏதோ ஒரு நிர்பந்தத்தால் அல்ல, நீங்கள் இயல்பாகவே ஆனந்தமாக இருப்பீர்கள். தற்போது உங்கள் உணர்வை நீங்கள் மிக இனிமையாக வைத்துக் கொண்டால், உங்களின் இல்லமும் இனிமையாக இருக்கும். இயல்பாக சமூக நடத்தையாக மாறும் எல்லா மனரீதியான உணர்வுரீதியான நன்மைகளும், இணையவழி ஈஷா யோகப் பயிற்சியில் நிறைந்துள்ளது. சக்தி பரிமாணமும், உடல்ரீதியான அம்சமும், நேரடி பரிமாற்றமாக வழங்கப்பட வேண்டும். அதை இணைய வழியாக கற்பிக்க இயலாது. ஏனெனில் அதற்கு நிறைய தாக்கங்கள் உண்டு. நீங்கள் ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியை தனியாக கற்க வேண்டும். ஆனால் இணையவழி ஈஷா யோகா உங்களின் எண்ணம் மற்றும் உணர்வில் மாற்றம் கொண்டுவரும்

பலரும் இதுவே இறுதியான மாற்றம் என்று எண்ணுகிறார்கள். சிலர் எண்ணம் மற்றும் உணர்வில் வித்தியாசப்பட்டு இனிமையான மனிதராக மாறினர் என்றால் மக்கள் இவ்வாறு கூற தொடங்குகின்றனர், "அவர் ஒரு ஆன்மீகவாதி, அவர் மிக அற்புதமானவர்." இல்லை, அவர் ஒரு சாதாரண மனிதர்தான். மற்றவர்கள்தான் இன்னும் பரிமாணம் அடைந்து வருகிறார்கள்! ஒரு மனிதர் விழிப்புணர்வோடு இருந்தால், அவருக்கு வேண்டியவற்றைப் பற்றி எண்ணம் கொண்டால் - நிர்பந்தத்தினால் அல்ல, அவரின் உணர்வை அவர் விரும்பியவாறு வைத்துக்கொண்டால் அவர் சாதாரண மனிதர்தான். அவர் ஏதோ ஒன்றை அடைந்துவிட்டார் என்று அர்த்தம் அல்ல. அவர் ஒரு சாதாரண மனிதர், அவ்வளவுதான். விரும்பியவாறு எண்ணமும் உணர்வும் கொள்ளாத ஒருவருக்கு பரிமாண சிக்கல் உள்ளது. இந்தப் பரிமாண சிக்கலை இணையவழி ஈஷா யோகா மூலம் சரிசெய்யலாம்.

ஆசிரியர் குறிப்பு: ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பு சுகாதார மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு 50 சதவிகித கட்டணத்தில் வழங்கப்படுகிறது. இன்று பதிவு செய்யுங்கள்!