
தேவியின் அருளில் திளைத்திடுங்கள்
உங்களது ஒட்டுமொத்த நல்வாழ்விற்காக 2023 மார்ச் 22 ஏப்ரல் 14 & 15 ஆகிய நாட்களில் சிறப்பு அர்ப்பணங்களைச் செய்வதன் மூலம் தேவியின் அருளைப் பெற்று புத்தாண்டை தொடங்குங்கள்!
சந்திர நாள்காட்டியின் படி இந்து புத்தாண்டு கலாச்சார ரீதியாக மட்டுமல்ல, அறிவியல் ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் நமது பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பையும், மனித உடலமைப்பில் அந்நாள் ஏற்படுத்தும் தாக்கத்தையும் கணக்கில் கொண்டு இது கொண்டாடப்படுகிறது. எனவே, புத்தாண்டு தேதி ஜனவரி 1 அல்ல, அது புதிய விவசாயப் பருவத்தின் தொடக்கத்தையும் வசந்த காலத்தை வரவேற்பதையும் குறிக்கும் விதமாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்தியாவில், ஒவ்வொரு மாநிலமும் சந்திர நாள்காட்டியின் படி இந்து புத்தாண்டைக் கொண்டாட ஒரு தனித்துவமான வழியைக் கொண்டுள்ளன. லிங்கபைரவியில் நிகழும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள், தேவியின் அருளைப் பெறுவதற்காக பல்வேறு அர்ப்பணங்களை வழங்க முடியும். இந்த வாய்ப்பு மூன்று நாள் கொண்டாட்டங்களிலும் (2023 மார்ச் 22 ஏப்ரல் 14 & 15) திறந்திருக்கும்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் பாரம்பரியமான புத்தாண்டு கொண்டாடப்பட்டாலும், நம் கலாச்சாரத்தின் அடிப்படையாக விவசாயம் விளங்குவதால், அடிப்படையில் இவை புதிய அறுவடை காலத்தின் துவக்கத்தைக் குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய புத்தாண்டு, தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு என்றும், பஞ்சாபில் வைசாகி என்றும், மஹாராஷ்டிரத்தில் குடி பட்வா என்றும், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகத்தில் உகாதி என்றும், சிந்தி மக்களால் சேடி சன்ட் என்றும், கேரளாவில் விஷு என்றும், மைதிலி மக்களால் ஜுர் ஷீதல் என்றும், அஸ்ஸாமில் போஹாக் பிஹு என்றும், வங்காளத்தில் பொயேலா பொயிசாக் என்றும், ஒடிசாவில் பானா சங்கராந்தி என்றும், வடகிழக்கு இந்தியாவில் சங்கேன் என்றும் கொண்டாடப்படுகிறது.
தேவியின் அருளைப் பெற்று புத்தாண்டை தொடங்குங்கள்
| நாள் | புத்தாண்டு கொண்டாட்டம் - மாநிலம் | அர்ப்பணங்கள் |
| 22 மார்ச் | சஜிபு செய்ரொபா - மணிப்பூர் உகாதி - கர்நாடகா, தெலுங்கானா & ஆந்திரா குடி பட்வா - மஹாராஷ்டிரம், கோவா மற்றும் டாமன் (யூனியன் பிரதேசம்) நவ்ரே- காஷ்மீர் சேடி சன்ட் - ராஜஸ்தான் சைத்ரா சுக்லாதி - வட இந்தியாவின் முக்கிய மாநிலங்கள் | தேவி அபிஷேகம் – ரூ.330 |
| 14 ஏப்ரல் | புத்தாண்டு - தமிழ்நாடு பைசாக்கி - பஞ்சாப் போஹக் பிஹு - அஸ்ஸாம் வைசாகு - போடோலாந்து பிஸூ பார்பா - கர்நாடகாவின் துலுநாடு & கேரளா ஜுர் ஷீதல் - பீகார் & ஜார்கண்ட் பைஸூ - திரிபுரா பிஹூ – மிசோரம், அருணாச்சல பிரதேசம், திரிபுரா & அஸ்ஸாம் சங்கென் - அருணாச்சல பிரதேசம் & அசாமின் சில பகுதிகள் நேபாளம் சம்பத் - நேபாளம் | தேவி அபிஷேகம் – ரூ.330 சுபல அர்ப்பணம் – ரூ.770 தீபம் அர்ப்பணம் – ரூ.770 |
| 15 ஏப்ரல் | விஷூ - கேரளா போஹேலெ பைஷாக் – மேற்கு வங்காளம் | தேவி அபிஷேகம் – ரூ.330 |
தேவியின் அருள் வேண்டி செய்யப்படும் 11 அர்ப்பணங்களின் ஓர் தொகுப்பு
தேவியின் அருளுடன் புத்தாண்டை பிரகாசமாய் துவங்கிட நெய் விளக்குகளை அர்ப்பணித்திடுங்கள்
வாழ்வின் முழுமையைக் குறிக்கும் பழங்களின் ஓர் அர்ப்பணிப்பு
தேவியின் அருளில் திளைத்திடுங்கள்
மேலும், சிறப்பு அபிஷேகத்தை (ஏப்ரல் 14, மாலை 6:30-8:00) லிங்கபைரவியில் இருந்து வழங்கப்படும் நேரலையில் கண்டு தேவியின் அருளைப் பெறலாம்.
தொடர்புகொள்ள
இமெயில்: lb.events@lingabhairavi.org
அலைபேசி: +91 83000 83111













