உயிர்நோக்கம்

உயிர்நோக்கம் என்றால் நமது உயிரின் மேன்மையை நோக்கமாகக் கொள்வது. உங்கள் எண்ணம் மற்றும் உணர்ச்சிகளிலிருந்து உங்களுள் உள்ள உயிரை மையமாக்கி உங்கள் நோக்கத்தை சீரமைத்துக் கொண்டால், பிறகு நீங்கள்தான் உங்கள் வாழ்க்கையின் இயக்குனராக இருப்பீர்கள் - சத்குரு

 

உயிர்நோக்கம்

உயிர்நோக்கம் என்றால் நமது உயிரின் மேன்மையை நோக்கமாகக் கொள்வது. உங்கள் எண்ணம் மற்றும் உணர்ச்சிகளிலிருந்து உங்களுள் உள்ள உயிரை மையமாக்கி உங்கள் நோக்கத்தை சீரமைத்துக் கொண்டால், பிறகு நீங்கள்தான் உங்கள் வாழ்க்கையின் இயக்குனராக இருப்பீர்கள் - சத்குரு

seperator
 

'உயிர்நோக்கம்' என்பது யோகப் பாதையில் ஒரு சிறிய, அதே நேரம் மாற்றத்தை வழங்கவல்ல முதல்படியாகும். சத்குருவால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த யோகப் பயிற்சி நமது உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்திநிலைகள் மற்றும் நமக்குள் இருக்கும் ஐம்பூதங்களை நமது நன்மைக்காக செயல்படும்படி செய்கிறது.

உயிர்நோக்கம் வகுப்பு, 2 அல்லது 3 நாட்களில் 6 மணிநேர நிகழ்ச்சியாக தமிழில் வழங்கப்படுகிறது.

 
பலன்கள்
seperator
 
benefits
உடல் ஆரோக்கிய மேம்பாடு.
benefits
மன அழுத்தம் இல்லா வாழ்க்கை.
benefits
தனிப்பட்ட உறவு முறைகளில் முன்னேற்றம்
benefits
சூழ்நிலைகளை அதிக திறனுடன் கையாள்தல்
benefits
இயல்பாகவே அன்பான மற்றும் ஆனந்தமான மனிதராக மாறுவது

 

Upcoming Programs for Uyirnokkam

seperator
 
Sorry, we don't have upcoming programs or events in Hosur. You can search for any city in the above search field or try again later.
 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

seperator
 

Sadhguru:சத்குரு: ஒரு அம்சம் உடல்நிலையில் உள்ளது. உங்கள் உடல் ஆரோக்கியமாக இல்லையென்றால், நான் உங்களிடம் ஞானோதயம் பற்றி பேசினால் நீங்கள் ஆர்வம் காட்டுவீர்களா? நீங்கள் நோய் வாய்ப்பட்டு இருந்தால், ஏதோ ஒரு உடல்சார்ந்த அவதியில் நீங்கள் இருந்தால், நான் ஏதேனும் உயர்நிலை பரிமாணம் பற்றி பேசினால் நீங்கள் என்ன புரிந்துகொள்ளப் போகிறீர்கள்? நீங்கள் எதையும் புரிந்துகொள்ள மாட்டீர்கள். எனவே உடல் நலம் என்பது முக்கியமானது.

 

இன்னொரு அம்சம், உங்களது வெளி சூழ்நிலை உகந்ததாக இல்லை என்றால், அது உங்களது பொருளாதார சூழ்நிலையாகவோ அல்லது பிறருடன் கொண்டுள்ள உறவு நிலையாகவோ இருக்கலாம், அப்போதும் அது பிரச்சனைதான். உங்களிடம் பணம் இல்லாததாலோ அல்லது உங்கள் வீட்டில் ஏதேனும் பிரச்சினையினாலோ நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், அப்போது நான் ஞானோதயம் பற்றி பேசினால், நீங்கள் அதில் ஆர்வம் காட்ட மாட்டீர்கள். இந்த சிக்கல் நீங்கினால் போதும் என்று நீங்கள் நினைப்பீர்கள். அதே சமயம், இவையனைத்தும் சரியாக நடக்க வேண்டுமானால், நமது உயிர் சக்திகள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் செயல்பட வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், நீங்கள் என்னதான் செய்தாலும் அது நிகழாது.

 

நம் உயிர் சக்திகள் நமக்குள் மிகுந்த உத்வேகத்துடன் செயல்படவில்லை என்றால், இது நம்முடைய உயிர் நமக்கு எதிராகத் திரும்புவது போன்றது. இதுதான் பலரின் பிரச்சனையாக உள்ளது. அவர்கள் பதற்றம், மன அழுத்தம் மற்றும் துன்பத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். இதன் பொருள் என்னவென்றால், உங்கள் புத்திசாலித்தனம் உங்களுக்கு எதிராக செயல்படுகிறது, அவ்வளவுதான்.

 

நான் வந்து உங்களைக் குத்தினால், அது ஒரு வெளிப்புற சூழ்நிலை. உங்கள் சொந்த மனம் உங்களைக் குத்துகிறதென்றால், அதன் அர்த்தம் என்ன? உங்கள் சொந்த மனம் உங்கள் எதிரியாகிவிட்டது. உங்கள் சொந்த மனம், உடல் அல்லது உயிர் சக்திகள் உங்கள் எதிரியாக மாறினால், யார் வந்து உங்களைக் காப்பாற்ற முடியும்?

 

உங்கள் உடல், மனம் மற்றும் உயிர் சக்திகள் உங்கள் நல்வாழ்விற்காக வேலை செய்யவேண்டும். அவை உங்களுக்கு எதிராக செயல்படத் தொடங்கினால், நீங்கள் என்ன செய்தாலும் அது பயன் தராது. எனவே, இந்த உயிர்நோக்கம் என்பது, நம் உடல், மனம், உணர்ச்சிகள், சக்திகள் மற்றும் இந்த உடலமைப்பில் உள்ள ஐம்பூதங்கள் நமது நல்வாழ்விற்காக வேலை செய்வதற்கான ஒரு சிறிய பயிற்சியாகும்.

சத்குரு: நாம் ஒரு ஆன்மீகப் பயிற்சியைக் கற்பிக்க வேண்டுமானால், அது நமக்கு சரியான வழியில் செயல்பட வேண்டுமானால், ஒரு குறிப்பிட்ட அளவு முன்தயாரிப்புக்கு நாம் உட்பட வேண்டியது அவசியம். நமது மன நிலை, உடல் நிலை மற்றும் உணர்ச்சி நிலை ஆகியவற்றை நாம் கொஞ்சம் தயார் செய்யவேண்டும். இதைத் தயாரிக்க, ஆறு மணி நேர வகுப்பு உள்ளது. ஒவ்வொரு நாளும் 2 மணி நேரம் வீதம் இது 3 நாட்களுக்கு நடக்கிறது.

 

இது ஒரு சிறிய படி. நீங்கள் ஒரு சிறிய படியை எடுக்கும்போது, ஒரு மாற்றம் நிகழ்ந்திருப்பதை நீங்கள் அனுபவபூர்வமாகக் கண்டால், நீங்கள் ஒரு பெரிய படியை எடுக்க ஆர்வமாக இருப்பீர்கள்.

12 வயதுக்கு மேற்பட்ட எவரும் தகுதியுடையவர்கள்.

சத்குரு: கடந்த காலங்களில், 14 நாட்களில் ஒவ்வொரு நாளும் 3 மணி நேரம் வீதம் கற்பிக்கப்பட்டவை, இப்போதும் கற்பிக்கப்படுகின்றன. ஆனால், இப்போது அது முதல் கட்டமாக வழங்கப்படவில்லை. அது ஒரு மேல்நிலை வகுப்பாக வழங்கப்படுகிறது. அந்த நாட்களில் நானே எல்லாவற்றையும் கற்பித்தேன். எனவே நாங்கள் அதை முதல் படியாக வைத்திருந்தோம். பல ஆசிரியர்கள் இதைக் கற்பிக்கத் தொடங்கியபோது, அனைவருக்கும் கொண்டு செல்வது கொஞ்சம் கடினமாக இருந்தது. நாம் ஒரு ஆசிரியருக்கு பயிற்சி அளிக்க வேண்டுமானால், அதற்கு 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும். எனவே இதை இரண்டாவது படியாக அமைத்து, மற்றொரு சிறிய படியான 7 நாட்கள் ஷாம்பவி மஹாமுத்ராவை உருவாக்கினோம்.

இது உலகம் முழுவதும் அற்புதமாக நடக்கிறது. இப்போது அந்த படியைக் கூட ஏற முடியாத சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்காக நாங்கள் அதனை 3 நாட்களுக்கு தினசரி 2 மணிநேர கால அளவில் உருவாக்குகிறோம் - அவர்களுக்கு 6 மணிநேரம் போதுமானது. அதைக் கூட ஏற முடியாத மற்றவர்களும் இருப்பார்கள். அவர்களுக்கு வெறும் 2 மணி நேரம், ஈஷா கிரியா போதுமானது!

சத்குரு: இந்த வகுப்பு அடிப்படை ஈஷா யோகா வகுப்பிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? இந்த இரண்டு பயிற்சியும் செய்வது பரிந்துரைக்கப்படுகிறதா? அப்படியானால் இவற்றை எந்த வரிசையில் செய்வது?

பயிற்சிகளைச் செய்வதற்கான வரிசையின் அடிப்படையில், உயிர்நோக்கம் பயிற்சியை முதலில் செய்துவிட்டு, அதைத் தொடர்ந்து ஷாம்பவி பயிற்சியைச் செய்யலாம். இருப்பினும், போதுமான நேரம் இல்லாத பட்சத்தில், ஷாம்பவி மஹாமுத்ராவுக்கு முன்னுரிமை கொடுத்தல் நல்லது.

அனைத்து உள்ளூர் யோகா மையங்களிலும் பதிவு மையங்கள் உள்ளன.

ஆமாம், 3 நாட்கள் ஒவ்வொரு நாளும் 2 மணிநேரம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஈடுபாடுள்ளவர்கள் இருக்கும்பட்சத்தில், வகுப்பை, திறந்தவெளியாக இல்லாமல், அடைக்கப்பட்டுள்ள ஒரு இடத்தில் வைத்து நடத்தலாம். ஒரு வகுப்பை நடத்துவதற்கு குறைந்தபட்சம் 11 பேர் பதிவுசெய்தல் வேண்டும்.

ஆம், மேலும் விவரங்களை அறிய உங்கள் பகுதியின் உள்ளூர் ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்.

இல்லை, இது ஒரு கட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சியாகும். ஒரு வகுப்பை நடத்துவதற்கான ஒரு சூழலில், பயிற்சி பெற்ற ஒரு ஆசிரியரால், இது கற்பிக்கப்பட வேண்டும்.

பயிற்சிகளை மீண்டும் துவங்குவதற்கு, பயிற்சியை புதுப்பிக்கவும் வலுப்படுத்தவும் நீங்கள் மீண்டும் வகுப்பிற்கு வரலாம். மீண்டும் இதற்காக பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை.

ஆம், இவை எளிய மற்றும் சக்திவாய்ந்த பயிற்சிகள். அவை ஒருவருக்கு பல்வேறு உடல் நோய்களைக் கடக்க உதவும். ஆனால், நீங்கள் எந்தவொரு பயிற்சியை தொடங்குவதற்கு முன்பும் உங்கள் மருத்துவரை அணுகுவது எப்போதும் நல்லது.

இல்லை. உயிர் நோக்கம் பயிற்சிகளைக் கற்றுக்கொள்ள, வகுப்பு நடக்கும் இடத்திற்கு சென்று கலந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு அருகிலுள்ள இடத்தை கண்டறிய, தயவுசெய்து தேடிப்பார்க்கவும்.

சத்குரு: தியானம் என்பது நீங்கள் செய்யும் பிற செயல்களைப் போலவே உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறக்கூடிய ஒரு செயல். இது பல் துலக்குவது போன்றது; ஆரம்பத்தில், நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்று யாராவது தினசரி வலியுறுத்த வேண்டியிருந்தது. ஆனால், அதன் மதிப்பை நீங்கள் புரிந்துகொண்டவுடன், அது தானாக எந்த சிந்தனையும் இல்லாமல் நடந்தது. தியானத்திலும் இதைப்போலத்தான். அதன் மதிப்பை நீங்கள் பார்த்தவுடன், அது இயற்கையாகவே அதிக முயற்சி இல்லாமல் உங்கள் வாழ்க்கையின் அன்றாட பகுதியாக மாறும். இருப்பினும், இது நிகழ்வதற்கு, ஆரம்பத்தில் கொஞ்சம் விடாமுயற்சி தேவை. முதல் 48 நாட்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யப்பட வேண்டும் என்பதற்கு இதுவும் ஒரு காரணம்!

48 நாட்கள் என்பது பொதுவாக ஒரு மண்டலம் என அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட கால அளவாகும். நம் உடல்,மனக் கட்டமைப்பு ஒரு குறிப்பிட்ட சுழற்சியைக் கடக்க ஒரு மண்டலத்தை எடுத்துக் கொள்கிறது. உதாரணமாக, ஆயுர்வேதத்தில் 48 நாட்களுக்கு மருந்து வழங்கப்படுவதற்கும் இதுவே காரணம்.

உங்கள் உடல் கட்டமைப்பில் மருந்து வேரூன்றுவதற்கு தேவைப்படும் காலத்தின் அளவு இது. உயிர்நோக்கம் பயிற்சி பொறுத்த வரையிலும் கூட இதுவே தான் காரணம். அந்தக் காலத்தில் ஒரு நாளும் விட்டுப்போகாமல் நீங்கள் பயிற்சிசெய்வது முக்கியமானது.

இல்லை, சத்குரு இந்த நிகழ்ச்சியை அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு துளி ஆன்மீகத்தையாவது வழங்குவதற்காக உருவாக்கியுள்ளார். பல்வேறு நோய்கள் மற்றும் அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கான ஒரு சக்திவாய்ந்த வாய்ப்பை இந்நிகழ்ச்சி உருவாக்குகிறது. ஷாம்பவி மஹாமுத்ரா என்று அழைக்கப்படும் ஒரு தொன்மையான யோகப் பயிற்சியை வழங்கும் ஈஷா யோகா அல்லது இன்னர் இஞ்சினியரிங் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதுதான் மேல்நிலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கான முதல் முன்தகுதியாகும்.

பகிர்வுகள்