பிரத்யேகமாக! தமிழக மக்களுக்கு சத்குருவால் அர்ப்பணிக்கப்பட்ட 3 நாள் இலவச ஆன்லைன் யோகா வகுப்பு
பிரத்யேகமாக! தமிழக மக்களுக்கு சத்குருவால் அர்ப்பணிக்கப்பட்ட 3 நாள் இலவச ஆன்லைன் யோகா வகுப்பு
'உயிர்நோக்கம்' என்பது யோகப் பாதையில் ஒரு சிறிய, அதே நேரம் மாற்றத்தை வழங்கவல்ல முதல்படியாகும். சத்குருவால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த யோகப் பயிற்சி நமது உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்திநிலைகள் மற்றும் நமக்குள் இருக்கும் ஐம்பூதங்களை நமது நன்மைக்காக செயல்படும்படி செய்கிறது.
உயிர்நோக்கம் வகுப்பு, 3 நாட்கள் தினமும் 2 மணிநேர நிகழ்ச்சியாக இலவசமாக தமிழில் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சி விவரங்கள்
ஆகஸ்ட் 30 - செப்டம்பர் 1, 2024
3 நாள் இலவச ஆன்லைன் யோகா வகுப்பு
காலை - 6:30 - 8:30 AM;
நண்பகல் - 11:00 AM - 1:00 PM;
மாலை - 6:30 - 8:30 PM
இவ்வகுப்பின் முக்கிய அம்சம்
ஒவ்வொரு மனிதனும் தெய்வமாய் பரிணமிக்கும் யோக அறிவியலின் சாரலில் உருவாகியது , ஈஷா யோகாவின் 3-நாள் 'உயிர் நோக்கம்' வகுப்பு.
வாழ்வில் பயம், பதற்றம், எரிச்சல், கோபம் போன்ற எதிர்மறை உணர்வுகளில் சிக்கி தடுமாறும் நமக்கு, சரியான திசையை வழங்க வழிகாட்டியாய் 'உயிர்நோக்கம்' விளங்கும்.
பலன்கள்
உயிர்நோக்கம் நிகழ்ச்சி வழிமுறைகள்
இந்நிகழ்ச்சியில் 3 நாட்களும் தாங்கள் பங்குபெறுவது அவசியம்.
இந்நிகழ்ச்சியில் தினமும் 2 மணி நேரம் முழுமையாக கலந்து கொள்வது அவசியம்.
நிகழ்ச்சிக்கு முன்பு நடைபெறும் ஆயத்த அமர்வு நிகழ்வில் கலந்துகொள்வது அவசியம்.
குறைந்தது 15 நிமிடங்களுக்கு முன்பு, நீங்கள் இணைவது சிறந்தது.
நிகழ்ச்சி தொடங்கிய பின் கலந்து கொள்ள இயலாது.
நிகழ்ச்சி துவங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பிலிருந்து லிங்கில் இணைய முடியும்.
நீங்கள் எந்த Batch தேர்ந்தெடுத்துள்ளீர்களோ, அதே Batch ல் தினமும் கலந்து கொள்ளும் வகையில் பார்த்து கொள்ளவும். அதற்கேற்ப, உங்கள் வேலைகளை திட்டமிட்டு கொள்ளவும்.
உயிர்நோக்கம் நிகழ்ச்சி வழிமுறைகள்
சாப்பிட்டதிலிருந்து குறைந்தது 1.5 மணி நேரம் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
இந்நிகழ்ச்சியை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள ஒரு ஏதுவான சூழலை நீங்கள் உருவாக்குவது அவசியம்.
தனி அறையில், தரையில் அமர்வது சிறந்தது. (தரையில் அமர முடியாதவர்கள் மட்டும், ஒரு நாற்காலியில்/மெத்தையில் உட்காரலாம்).
நிகழ்ச்சிக்கு இடையே எழுந்து கொள்வது, சாப்பிடுவது, பருகுவது, பாத்ரூம் செல்வது - இவைகளையெல்லாம் தவிர்க்க வேண்டும்.
இந்நிகழ்ச்சி முடியும் வரை குழந்தைகள் அல்லது செல்லப் பிராணிகளால் இடையூறு ஏற்படாத விதத்தில் பார்த்து கொள்ளவும்.
உயிர்நோக்கம் நிகழ்ச்சி வழிமுறைகள்
கணினி/லேப்டாப் மூலம் இணைவது சிறந்தது. நீங்கள் செல்போன் மூலம் இணையும்பட்சத்தில், எஸ்எம்எஸ் / அழைப்புகளால் தொந்தரவு ஏற்படாமல் இருக்க DO NOT Disturb Mode Activate செய்துகொள்ளவும்.
தினமும் 2 மணிநேரம் நிகழ்ச்சியில் பங்குபெற 2GB Data & நிலையான இன்டர்நெட் வசதி இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
ஹெட்-போன் பயன்படுத்துவது சிறந்தது.
நிகழ்ச்சி முழுக்க தங்களது வீடியோவை ON செய்து வைக்கவும்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவதற்கான லிங்க் உங்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளது. இதனை வேறு யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Sadhguru: சத்குரு: ஒரு அம்சம் உடல்நிலையில் உள்ளது. உங்கள் உடல் ஆரோக்கியமாக இல்லையென்றால், நான் உங்களிடம் ஞானோதயம் பற்றி பேசினால் நீங்கள் ஆர்வம் காட்டுவீர்களா? நீங்கள் நோய் வாய்ப்பட்டு இருந்தால், ஏதோ ஒரு உடல்சார்ந்த அவதியில் நீங்கள் இருந்தால், நான் ஏதேனும் உயர்நிலை பரிமாணம் பற்றி பேசினால் நீங்கள் என்ன புரிந்துகொள்ளப் போகிறீர்கள்? நீங்கள் எதையும் புரிந்துகொள்ள மாட்டீர்கள். எனவே உடல் நலம் என்பது முக்கியமானது.
இன்னொரு அம்சம், உங்களது வெளி சூழ்நிலை உகந்ததாக இல்லை என்றால், அது உங்களது பொருளாதார சூழ்நிலையாகவோ அல்லது பிறருடன் கொண்டுள்ள உறவு நிலையாகவோ இருக்கலாம், அப்போதும் அது பிரச்சனைதான். உங்களிடம் பணம் இல்லாததாலோ அல்லது உங்கள் வீட்டில் ஏதேனும் பிரச்சினையினாலோ நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், அப்போது நான் ஞானோதயம் பற்றி பேசினால், நீங்கள் அதில் ஆர்வம் காட்ட மாட்டீர்கள். இந்த சிக்கல் நீங்கினால் போதும் என்று நீங்கள் நினைப்பீர்கள். அதே சமயம், இவையனைத்தும் சரியாக நடக்க வேண்டுமானால், நமது உயிர் சக்திகள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் செயல்பட வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், நீங்கள் என்னதான் செய்தாலும் அது நிகழாது.
நம் உயிர் சக்திகள் நமக்குள் மிகுந்த உத்வேகத்துடன் செயல்படவில்லை என்றால், இது நம்முடைய உயிர் நமக்கு எதிராகத் திரும்புவது போன்றது. இதுதான் பலரின் பிரச்சனையாக உள்ளது. அவர்கள் பதற்றம், மன அழுத்தம் மற்றும் துன்பத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். இதன் பொருள் என்னவென்றால், உங்கள் புத்திசாலித்தனம் உங்களுக்கு எதிராக செயல்படுகிறது, அவ்வளவுதான்.
நான் வந்து உங்களைக் குத்தினால், அது ஒரு வெளிப்புற சூழ்நிலை. உங்கள் சொந்த மனம் உங்களைக் குத்துகிறதென்றால், அதன் அர்த்தம் என்ன? உங்கள் சொந்த மனம் உங்கள் எதிரியாகிவிட்டது. உங்கள் சொந்த மனம், உடல் அல்லது உயிர் சக்திகள் உங்கள் எதிரியாக மாறினால், யார் வந்து உங்களைக் காப்பாற்ற முடியும்?
உங்கள் உடல், மனம் மற்றும் உயிர் சக்திகள் உங்கள் நல்வாழ்விற்காக வேலை செய்யவேண்டும். அவை உங்களுக்கு எதிராக செயல்படத் தொடங்கினால், நீங்கள் என்ன செய்தாலும் அது பயன் தராது. எனவே, இந்த உயிர்நோக்கம் என்பது, நம் உடல், மனம், உணர்ச்சிகள், சக்திகள் மற்றும் இந்த உடலமைப்பில் உள்ள ஐம்பூதங்கள் நமது நல்வாழ்விற்காக வேலை செய்வதற்கான ஒரு சிறிய பயிற்சியாகும்.
சத்குரு: நாம் ஒரு ஆன்மீகப் பயிற்சியைக் கற்பிக்க வேண்டுமானால், அது நமக்கு சரியான வழியில் செயல்பட வேண்டுமானால், ஒரு குறிப்பிட்ட அளவு முன்தயாரிப்புக்கு நாம் உட்பட வேண்டியது அவசியம். நமது மன நிலை, உடல் நிலை மற்றும் உணர்ச்சி நிலை ஆகியவற்றை நாம் கொஞ்சம் தயார் செய்யவேண்டும். இதைத் தயாரிக்க, ஆறு மணி நேர வகுப்பு உள்ளது. ஒவ்வொரு நாளும் 2 மணி நேரம் வீதம் இது 3 நாட்களுக்கு நடக்கிறது.
இது ஒரு சிறிய படி. நீங்கள் ஒரு சிறிய படியை எடுக்கும்போது, ஒரு மாற்றம் நிகழ்ந்திருப்பதை நீங்கள் அனுபவபூர்வமாகக் கண்டால், நீங்கள் ஒரு பெரிய படியை எடுக்க ஆர்வமாக இருப்பீர்கள்.
12 வயதுக்கு மேற்பட்ட எவரும் தகுதியுடையவர்கள்.
சத்குரு: கடந்த காலங்களில், 14 நாட்களில் ஒவ்வொரு நாளும் 3 மணி நேரம் வீதம் கற்பிக்கப்பட்டவை, இப்போதும் கற்பிக்கப்படுகின்றன. ஆனால், இப்போது அது முதல் கட்டமாக வழங்கப்படவில்லை. அது ஒரு மேல்நிலை வகுப்பாக வழங்கப்படுகிறது. அந்த நாட்களில் நானே எல்லாவற்றையும் கற்பித்தேன். எனவே நாங்கள் அதை முதல் படியாக வைத்திருந்தோம். பல ஆசிரியர்கள் இதைக் கற்பிக்கத் தொடங்கியபோது, அனைவருக்கும் கொண்டு செல்வது கொஞ்சம் கடினமாக இருந்தது. நாம் ஒரு ஆசிரியருக்கு பயிற்சி அளிக்க வேண்டுமானால், அதற்கு 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும். எனவே இதை இரண்டாவது படியாக அமைத்து, மற்றொரு சிறிய படியான 7 நாட்கள் ஷாம்பவி மஹாமுத்ராவை உருவாக்கினோம்.
இது உலகம் முழுவதும் அற்புதமாக நடக்கிறது. இப்போது அந்த படியைக் கூட ஏற முடியாத சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்காக நாங்கள் அதனை 3 நாட்களுக்கு தினசரி 2 மணிநேர கால அளவில் உருவாக்குகிறோம் - அவர்களுக்கு 6 மணிநேரம் போதுமானது. அதைக் கூட ஏற முடியாத மற்றவர்களும் இருப்பார்கள். அவர்களுக்கு வெறும் 2 மணி நேரம், ஈஷா கிரியா போதுமானது!
சத்குரு: இந்த வகுப்பு அடிப்படை ஈஷா யோகா வகுப்பிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? இந்த இரண்டு பயிற்சியும் செய்வது பரிந்துரைக்கப்படுகிறதா? அப்படியானால் இவற்றை எந்த வரிசையில் செய்வது?
பயிற்சிகளைச் செய்வதற்கான வரிசையின் அடிப்படையில், உயிர்நோக்கம் பயிற்சியை முதலில் செய்துவிட்டு, அதைத் தொடர்ந்து ஷாம்பவி பயிற்சியைச் செய்யலாம். இருப்பினும், போதுமான நேரம் இல்லாத பட்சத்தில், ஷாம்பவி மஹாமுத்ராவுக்கு முன்னுரிமை கொடுத்தல் நல்லது.
அனைத்து உள்ளூர் யோகா மையங்களிலும் பதிவு மையங்கள் உள்ளன.
ஆமாம், 3 நாட்கள் ஒவ்வொரு நாளும் 2 மணிநேரம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஈடுபாடுள்ளவர்கள் இருக்கும்பட்சத்தில், வகுப்பை, திறந்தவெளியாக இல்லாமல், அடைக்கப்பட்டுள்ள ஒரு இடத்தில் வைத்து நடத்தலாம். ஒரு வகுப்பை நடத்துவதற்கு குறைந்தபட்சம் 11 பேர் பதிவுசெய்தல் வேண்டும்.
ஆம், மேலும் விவரங்களை அறிய உங்கள் பகுதியின் உள்ளூர் ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்.
பயிற்சிகளை மீண்டும் துவங்குவதற்கு, பயிற்சியை புதுப்பிக்கவும் வலுப்படுத்தவும் நீங்கள் மீண்டும் வகுப்பிற்கு வரலாம். மீண்டும் இதற்காக பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை.
ஆம், இவை எளிய மற்றும் சக்திவாய்ந்த பயிற்சிகள். அவை ஒருவருக்கு பல்வேறு உடல் நோய்களைக் கடக்க உதவும். ஆனால், நீங்கள் எந்தவொரு பயிற்சியை தொடங்குவதற்கு முன்பும் உங்கள் மருத்துவரை அணுகுவது எப்போதும் நல்லது.
இல்லை. உயிர் நோக்கம் பயிற்சிகளைக் கற்றுக்கொள்ள, வகுப்பு நடக்கும் இடத்திற்கு சென்று கலந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு அருகிலுள்ள இடத்தை கண்டறிய, தயவுசெய்து தேடிப்பார்க்கவும்.
சத்குரு: தியானம் என்பது நீங்கள் செய்யும் பிற செயல்களைப் போலவே உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறக்கூடிய ஒரு செயல். இது பல் துலக்குவது போன்றது; ஆரம்பத்தில், நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்று யாராவது தினசரி வலியுறுத்த வேண்டியிருந்தது. ஆனால், அதன் மதிப்பை நீங்கள் புரிந்துகொண்டவுடன், அது தானாக எந்த சிந்தனையும் இல்லாமல் நடந்தது. தியானத்திலும் இதைப்போலத்தான். அதன் மதிப்பை நீங்கள் பார்த்தவுடன், அது இயற்கையாகவே அதிக முயற்சி இல்லாமல் உங்கள் வாழ்க்கையின் அன்றாட பகுதியாக மாறும். இருப்பினும், இது நிகழ்வதற்கு, ஆரம்பத்தில் கொஞ்சம் விடாமுயற்சி தேவை. முதல் 48 நாட்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யப்பட வேண்டும் என்பதற்கு இதுவும் ஒரு காரணம்!
48 நாட்கள் என்பது பொதுவாக ஒரு மண்டலம் என அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட கால அளவாகும். நம் உடல்,மனக் கட்டமைப்பு ஒரு குறிப்பிட்ட சுழற்சியைக் கடக்க ஒரு மண்டலத்தை எடுத்துக் கொள்கிறது. உதாரணமாக, ஆயுர்வேதத்தில் 48 நாட்களுக்கு மருந்து வழங்கப்படுவதற்கும் இதுவே காரணம்.
உங்கள் உடல் கட்டமைப்பில் மருந்து வேரூன்றுவதற்கு தேவைப்படும் காலத்தின் அளவு இது. உயிர்நோக்கம் பயிற்சி பொறுத்த வரையிலும் கூட இதுவே தான் காரணம். அந்தக் காலத்தில் ஒரு நாளும் விட்டுப்போகாமல் நீங்கள் பயிற்சிசெய்வது முக்கியமானது.
இல்லை, சத்குரு இந்த நிகழ்ச்சியை அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு துளி ஆன்மீகத்தையாவது வழங்குவதற்காக உருவாக்கியுள்ளார். பல்வேறு நோய்கள் மற்றும் அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கான ஒரு சக்திவாய்ந்த வாய்ப்பை இந்நிகழ்ச்சி உருவாக்குகிறது. ஷாம்பவி மஹாமுத்ரா என்று அழைக்கப்படும் ஒரு தொன்மையான யோகப் பயிற்சியை வழங்கும் ஈஷா யோகா அல்லது இன்னர் இஞ்சினியரிங் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதுதான் மேல்நிலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கான முதல் முன்தகுதியாகும்.
பகிர்வுகள்
இந்தப் பயிற்சியின் ஒவ்வொரு நிலையையும் கவனித்து செய்யும்போது, என் உடலின் சக்தி நிலையை உணர முடிகிறது. என் உடல் மற்றும் மனதிற்கும் எனக்கும் ஒரு இடைவெளி இருப்பதை கவனிக்க முடிவதால், இப்போதெல்லாம் சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதை மட்டும் என்னால் செய்ய முடிகிறது.
இந்தப் பயிற்சி செய்ய ஆரம்பித்த பின், முன்பு இருந்ததை விட, இப்போது எனது முதுகுத்தண்டில் வலி குறைந்துள்ளது. செய்யும் வேலைகளில் நிதானமும் தெளிவும் இருக்கிறது. மனதளவிலும் உடலளவிலும் நல்ல மாற்றம் உணர முடிகிறது. இதனால் என் வாழ்க்கை மட்டுமின்றி என்னை சுற்றியுள்ளவர்களின் நலனையும் பார்க்க இந்த வகுப்பு ஒரு கருவியாக உள்ளது.
யோக நமஸ்காரம் பயிற்சி செய்ததிலிருந்து என்னுள் பொறுமையும், வளைந்துகொடுக்கும் தன்மையும் அதிகரித்துள்ளதை காணமுடிகிறது. என்னுடைய முதுகுத்தண்டு எளிதாக வளைகிறது, மிகவும் சுறுசுறுப்பாக உணர்கிறேன்.
வகுப்பிற்குப் பிறகு வீட்டில் எதைப் பார்த்தாலும், குடும்பத்தில் யாரைப் பார்த்தாலும் நன்றியுணர்வு, அன்பு, ஆனந்தக் கண்ணீர் வருகிறது. மூட்டு வலி இல்லை. பாதிப்பு இல்லாமல் மிகவும் லேசாக உணர்கிறேன். வாழ்க்கை தானாக நடக்கிறது.
இந்தப் பயிற்சியின் ஒவ்வொரு நிலையையும் கவனித்து செய்யும்போது, என் உடலின் சக்தி நிலையை உணர முடிகிறது. என் உடல் மற்றும் மனதிற்கும் எனக்கும் ஒரு இடைவெளி இருப்பதை கவனிக்க முடிவதால், இப்போதெல்லாம் சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதை மட்டும் என்னால் செய்ய முடிகிறது.
இந்தப் பயிற்சி செய்ய ஆரம்பித்த பின், முன்பு இருந்ததை விட, இப்போது எனது முதுகுத்தண்டில் வலி குறைந்துள்ளது. செய்யும் வேலைகளில் நிதானமும் தெளிவும் இருக்கிறது. மனதளவிலும் உடலளவிலும் நல்ல மாற்றம் உணர முடிகிறது. இதனால் என் வாழ்க்கை மட்டுமின்றி என்னை சுற்றியுள்ளவர்களின் நலனையும் பார்க்க இந்த வகுப்பு ஒரு கருவியாக உள்ளது.
யோக நமஸ்காரம் பயிற்சி செய்ததிலிருந்து என்னுள் பொறுமையும், வளைந்துகொடுக்கும் தன்மையும் அதிகரித்துள்ளதை காணமுடிகிறது. என்னுடைய முதுகுத்தண்டு எளிதாக வளைகிறது, மிகவும் சுறுசுறுப்பாக உணர்கிறேன்.
வகுப்பிற்குப் பிறகு வீட்டில் எதைப் பார்த்தாலும், குடும்பத்தில் யாரைப் பார்த்தாலும் நன்றியுணர்வு, அன்பு, ஆனந்தக் கண்ணீர் வருகிறது. மூட்டு வலி இல்லை. பாதிப்பு இல்லாமல் மிகவும் லேசாக உணர்கிறேன். வாழ்க்கை தானாக நடக்கிறது.
இந்தப் பயிற்சியின் ஒவ்வொரு நிலையையும் கவனித்து செய்யும்போது, என் உடலின் சக்தி நிலையை உணர முடிகிறது. என் உடல் மற்றும் மனதிற்கும் எனக்கும் ஒரு இடைவெளி இருப்பதை கவனிக்க முடிவதால், இப்போதெல்லாம் சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதை மட்டும் என்னால் செய்ய முடிகிறது.