சத்குரு : நீங்கள் கோயம்புத்தூரிலிருந்து டெல்லிக்கு விமானப்பயணம் மேற்கொண்டு, அவ்வப்போது கீழே பார்த்தால், மேற்குத்தொடர்ச்சி மலையைத் தவிர, நீங்கள் பார்ப்பதெல்லாம் ஒரே பழுப்பு நிறப் பாலைவனம்தான். இதற்குக் காரணம், யோசனை இல்லாமல் செய்யப்பட்டு வரும் விவசாயம். இன்றைக்கு, இந்தியாவின் 84% நிலத்தை விவசாயம் ஆக்கிரமித்துள்ளது. நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது, ஏறக்குறைய 93% மக்கள் விவசாயத் தொழிலில் இருந்தனர். அவர்கள் பாரம்பரியமாக விவசாயிகளாகவோ அல்லது பயிர்தொழிலில் இருந்ததோ இதற்குக் காரணம் அல்ல.

நூற்று நாற்பதுக்கும் அதிகமான வித்தியாசமான நெசவு முறைகளை நாம் வளர்த்தெடுத்தோம். இந்த உற்பத்தியினால் ஒட்டுமொத்த உலகத்தையே வசீகரிக்கும் அளவுக்கான மந்திர ஜாலங்களை அதில் செய்தோம்.

இந்த நாட்டின் வரலாற்றை நீங்கள் திரும்பிப் பார்த்தால், இருநூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்பு, நாம்தான் உலகத்திற்கே மிகப்பெரும் ஜவுளி ஏற்றுமதியாளர்களாக இருந்ததை நீங்கள் காண்பீர்கள். உலகத்தின் 33% ஏற்றுமதி இந்தியாவிலிருந்து சென்றது. நமது நாட்டின் சுமார் நாற்பதிலிருந்து நாற்பத்தி ஐந்து சதவிகித ஜனத்தொகையினர் ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டு இருந்தனர். நாம் ஒருபோதும் மூலப் பருத்தியை ஏற்றுமதி செய்யவில்லை, ஏனென்றால் நமது பருத்தி அதற்கான தரத்தில் இல்லை. ஆனால், மிகவும் குறைந்த தரத்திலான அந்தப் பருத்தி மற்றும் பட்டு, சணல், நார் மற்றும் வெவ்வேறு விதமான இழையிலிருந்தும் பற்பல துணி வகைகளின் வடிவத்தில் நாம் அற்புதம் செய்தோம். நூற்று நாற்பதுக்கும் அதிகமான வித்தியாசமான நெசவு முறைகளை நாம் வளர்த்தெடுத்தோம். இந்த உற்பத்தியினால் ஒட்டுமொத்த உலகத்தையே வசீகரிக்கும் அளவுக்கான மந்திர ஜாலங்களை அதில் செய்தோம்.

ஆனால், 1800 மற்றும் 1860-க்கு மத்தியில் நமது ஏற்றுமதிகள் தொண்ணூற்று நான்கு சதவிகிதத்துக்கும் குறைவாகிவிட்டன. இது தற்செயலானதோ அல்லது அமைப்பின் தொய்வு காரணமாகவோ ஏற்பட்டதல்ல. பிரிட்டிஷ் அரசாங்கம் தறி எந்திரங்களை உடைத்தெறிந்தது, அவர்கள் ஜவுளி சந்தையை அழித்தனர், அது தொடர்பான எல்லாவற்றுக்கும் மூன்று மடங்கு அதிகமாக வரி விதித்தனர். இத்தனைக்கும் பிறகு, அவர்கள் இறக்குமதி துணிகளை உள்ளே கொண்டு வந்தனர். பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் கூறினார், “பருத்தி நெசவாளர்களின் எலும்புகள் இந்திய சமவெளிகளை வெண்மையாக்கிக் கொண்டிருக்கின்றன.” அவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டதற்குப் பிறகு, இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறந்தனர். எஞ்சியவர்கள் எப்படியாவது பிழைப்பு தேடுவதற்காக நிலத்தைச் சுரண்டத் தொடங்கினர். ஜீவனத்துக்கான விவசாயம் நாடெங்கிலும் நிகழ்ந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
“பருத்தி நெசவாளர்களின் எலும்புகள் இந்திய சமவெளிகளை வெண்மையாக்கிக் கொண்டிருக்கின்றன.” அவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டதற்குப் பிறகு, இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறந்தனர்.

இவர்கள் பாரம்பரிய விவசாயிகள் அல்ல. ஆனால், ஜவுளித் தொழிலின் வெவ்வேறு பரிமாணங்களில் ஈடுபட்டு, இறுதி முயற்சியாக பயிர்த்தொழிலுக்குச் சென்ற மக்கள் இவர்கள். 1947-ல் நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது, 90% மக்களுக்கும் அதிகமான இந்திய மக்கள்தொகையினர் விவசாயிகளாக இருந்தனர். இன்றைக்கு அது 70% குறைந்துள்ளது. இதன் பொருள், பத்து பேர் சாப்பிடுவதற்கு, ஏழு பேர் சமைப்பதைப் போன்றது இது. மிகவும் திறனில்லாத சூழல், அப்படித்தானே? ஏனென்றால், மிகச் சிறிதளவு உற்பத்தி செய்வதற்கே நாம் ஒவ்வொரு துண்டு நிலத்தையும் சுரண்டிக்கொண்டிருக்கிறோம். ஏதோ ஒரு வழியில் நாம் விவசாயத்தில் புதிய மாற்றம் கொண்டுவரவில்லையென்றால், இதிலிருந்து வெளியேறுவதற்கு வேறு வழி இல்லை.

மண் வளத்தைப் புதுப்பிக்க

இந்த நாட்டில் நல்ல மண் இருக்கும் இடத்திற்குச் சென்று, ஒரு க்யூபிக் மீட்டர் மண்ணை எடுத்து ஆய்வு செய்தாலும், தோராயமாக 10,000-க்கும் அதிகமான உயிரினங்கள் அந்த ஒரு க்யூபிக் மீட்டர் மண்ணிலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது. உயிரினங்களின் இந்த வீர்யமான திரட்சி பூமியின் மீது வேறு எங்கும் காணப்படாதது.

இந்தியாவில், ஆயிரக்கணக்கான தலைமுறைகளாக மக்கள் ஒரே நிலத்தை உழுதுகொண்டுள்ளனர். ஆனால் கடந்த ஒரு தலைமுறையில்தான், அது பாலைவனமாகும் அளவுக்கு, மண்ணின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இது ஏனென்றால், எல்லா மரங்களும் வெட்டப்பட்டுவிட்டதுடன், இலட்சக்கணக்கான கால்நடைகள், நாட்டிலிருந்து ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கின்றன. இவைகள் கால்நடைகள் அல்ல – வேறொரு நாட்டிற்குச் செல்லும் நம்முடைய மேல்மண் இது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது நிகழும்போது, மண்ணை எப்படி நீங்கள் வளமாக்குவீர்கள்? மண்ணைக் காப்பதற்கு நீங்கள் விரும்பினால், இயற்கைப் பொருட்கள் அதற்குள் செல்லவேண்டும். காய்ந்த இலைகளும், கால்நடைக் கழிவும் இல்லையென்றால், மண் வளத்தைப் புதுப்பிக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவுடைய நிலம் இருந்தால், எத்தனை கால்நடைகள் மற்றும் எத்தனை மரங்கள் உங்களுக்கு வேண்டும் என்ற இந்த எளிய அறிவை அன்றைக்கு ஒவ்வொரு விவசாயக் குடும்பமும் கொண்டிருந்தது.

இந்தியாவின் 33% நிலம் நிழலின் கீழ் இருக்கவேண்டும் என்ற தேசிய அளவிலான நோக்கம் ஒன்று ஏற்கெனவே பழைய திட்டக் கமிஷனில் அமைக்கப்பட்டிருந்தது. ஏனென்றால், உங்களுக்கு மண்ணைப் பாதுகாக்க வேண்டுமென்றால், அதுதான் ஒரே வழியாக இருக்கிறது. உங்களுக்குச் சொந்தமாக ஒரு ஹெக்டேர் நிலம் இருந்தால், குறைந்தபட்சம் ஐந்து காளைகள் உங்களிடம் இருக்கவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும்படியான ஒரு சட்டம் இயற்றுவதற்கு நான் முயற்சி செய்துவருகிறேன். இல்லையென்றால், உங்களுக்கு நிலம் சொந்தமில்லை, ஏனென்றால் நீங்கள் நிலத்தைக் கொல்கிறீர்கள்.

உயிர்ப்புள்ள மண்ணுக்கு ஒரு சிறிதளவு ஆதரவு

இந்திய நிலப்பரப்பின் மண் குறித்த ஒரு அற்புதமான விஷயத்திற்கு அறிவியல்பூர்வமான விபரம் இருந்தாலும், இதுவரை அதற்கு அறிவியல்பூர்வமான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. அதாவது, இந்த நாட்டில் நல்ல மண் இருக்கும் இடத்திற்குச் சென்று, ஒரு க்யூபிக் மீட்டர் மண்ணை எடுத்து ஆய்வு செய்தாலும், தோராயமாக 10,000-க்கும் அதிகமான உயிரினங்கள் அந்த ஒரு க்யூபிக் மீட்டர் மண்ணிலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது. உயிரினங்களின் இந்த வீர்யமான திரட்சி பூமியின் மீது வேறு எங்கும் காணப்படாதது. இது எதனால் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆகவே இவ்வளவு உயிர்ப்புள்ள மண்ணுக்கு ஒரு சிறிதளவு ஆதரவு மட்டும்தான் தேவைப்படுகிறது. அதற்கு அந்தச் சிறிதளவு ஆதரவை நீங்கள் கொடுத்துவிட்டால், அது விரைவில் திருப்பி வழங்கும். ஆனால், இந்தத் தலைமுறையின் மக்களாக, அந்தச் சிறிதளவு ஆதரவை வழங்குவதற்குத் தேவையான அறிவு நம்மிடம் இருக்கிறதா அல்லது வெறுமனே உட்கார்ந்துகொண்டு அது மடிந்துபோவதை பார்க்கப்போகிறோமா?

அனைவரும் தங்களது நிலத்தின் மூன்றில் ஒரு பகுதியை வேளாண்காடாக மாற்றிவிட்டால், அவர்களது வருவாய் அதிகரிப்பதுடன், மண்ணும் வளமாகும்.

உதாரணத்திற்கு, காவேரி படுகை 85000 சதுர கிலோமீட்டர் பரப்பு உடையது. கடந்த ஐம்பது ஆண்டுகளில், எண்பத்தி ஏழு சதவிகித பசுமைப் போர்வை அகற்றப்பட்டுள்ளது. ஆகவே, நதிக்குப் புத்துயிரூட்டுவதற்காக காவேரி கூக்குரலை நான் கையில் எடுக்கிறேன். காவிரிப் படுகையில் மூன்றில் ஒரு பகுதியைப் பசுமையாக்குவதற்கு, இருநூற்று நாற்பத்தி இரண்டு கோடி மரங்களை நாம் நடவேண்டியிருக்கிறது. அதாவது 2.42 பில்லியன் மரங்கள். இதை ஈஷா அறக்கட்டளை நடப்போகிறது என்பதல்ல. வேளாண்காடு வளர்ப்பு இயக்கத்தை கொண்டுவந்து, இது விவசாயிகளுக்கான மிகச் சிறந்த பொருளாதாரத் திட்டம் என்பதை அவர்களுக்குக் காண்பிக்க நாம் விரும்புகிறோம்.

 

கர்நாடகத்தில் ஒரு சராசரி விவசாயி, ஒரு ஹெக்டேருக்கு சுமார் 42,000-ரூபாய் சம்பாதிக்கிறார், தமிழ்நாட்டில் ஒரு விவசாயி, ஒரு ஹெக்டேருக்கு சுமார் 46,000 ரூபாய் சம்பாதிக்கிறார். வேளாண்காடு மூலம், முதல் ஐந்து வருடங்களில், இந்த சராசரி வருமானத்தை நாம் மூன்றிலிருந்து எட்டு மடங்கு அதிகரிக்க முடியும். இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார நன்மைகளை மக்கள் கண்டுகொண்டால், அதன்பிறகு அவர்களை நீங்கள் சம்மதிக்கச் செய்யவேண்டாம். எப்படியும் அவர்களே அதைச் செய்துவிடுவார்கள். அனைவரும் தங்களது நிலத்தின் மூன்றில் ஒரு பகுதியை வேளாண்காடாக மாற்றிவிட்டால், அவர்களது வருவாய் அதிகரிப்பதுடன், மண்ணும் வளமாகும்.

ஆசிரியர் குறிப்பு : காவேரி கூக்குரல் எனும் இந்த ஒரு முன்னெடுப்பு, காவேரி நதிக்கரையோரங்களில் 242 கோடி மரக்கன்றுகளை அங்குள்ள விவசாயிகளை நடச்செய்வதன்மூலம் காவேரி நதியை மீட்பதற்கான ஒரு தீர்வாகிறது. விவசாயிகளின் வருமானத்தை 5 மடங்கு அதிகரிக்கச் செய்வதாகவும், காவேரி வடிநிலப் பகுதிகளில் நீர்பிடிப்பை அதிகரிப்பதாகவும் அமையும் இந்த முன்னெடுப்பிற்கு ஆதரவு தாருங்கள்! #CauveryCalling மரம்நடுவதில் பங்களிக்க, வாருங்கள்: Tamil.CauveryCalling.Org அல்லது அலைபேசி: 80009 80009

CC-ISO-WebBanner-650x120-Tam