காவேரி கூக்குரல் இயக்கம் காவேரியின் கவலைக்கிடமான நிலை பற்றிய விழிப்புணர்வை ஆயிரமாயிரம் மக்களிடம் ஏற்படுத்தும். பல்லாயிரம் விவசாயிகளைத் தொடர்பு கொண்டு வேளாண் காடு வளர்ப்பு தரும் பலன்களை எடுத்துரைக்கும். அரசாங்கங்களுடன் செயல்பட்டு, விவசாயிகள் வேளாண்காடு வளர்ப்புக்கு மாறுவதற்குத் தேவையான உதவியை பெற்றுத் தரும்.
காவேரியின் அழைப்புக்கு சத்குரு பதிலளிக்கிறார்
வரும் செப்டம்பர் மாதத்தில் காவேரி கூக்குரல் இயக்கத்தை இரண்டு வார "மோட்டார் சைக்கிள் ராலி"யுடன் சத்குரு துவக்கி வைக்கிறார். கர்நாடகத்தில் உள்ள தலைக்காவேரியில் துவங்கி, தமிழகத்தின் கடலருகே இருக்கும் திருவாரூர் வரை சத்குரு மோட்டார் சைக்கிளில் பயணிக்கிறார். இப்பயணத்தின் போது பெரும் நகரங்களில் மாபெரும் நிகழ்ச்சிகளும், காவேரி ஆற்றங்கரைகளில் இருக்கும் சிற்றூர் மற்றும் கிராமங்களில் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளையும் சத்குரு நடத்தவிருக்கிறார்.
மேலும் விபரங்கள் அறிய...
நதிகளை மீட்போம்
இந்தியாவின் உயிர்நாடிகளான நதிகளை மீட்கவும், புத்துயிரூட்டவும் உருவானதுதான் நதிகளை மீட்போம் இயக்கம். 16.2 கோடி மக்களின் ஆதரவுடன் உலகிலேயே மிகப்பெரிய சுற்றுச்சூழல் இயக்கமாக இது வளர்ந்தது. நம் நதிகளின் கவலைக்கிடமான நிலை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த, இந்தியாவின் பல மாநிலங்கள் வழியாக 9300 கி.மீ பயணத்தை தானே கார் ஓட்டிச் சென்று சத்குரு மேற்கொண்டார்.
நதிகளை மீட்பதற்கான 700 பக்கம் கொண்ட திட்டப் பரிந்துரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்ளிடம் அக்டோபர் 2, 2017ல் சத்குரு அவர்கள் ஒப்படைத்தார். அத்தீர்வை பல மாநிலங்களிலும் செயல்படுத்தும் பணிகளில் இப்போது நதிகளை மீட்போம் இயக்கம் இறங்கியுள்ளது.
இதில் நான் எப்படி பங்கெடுப்பது?
"நம் நல்வாழ்விற்கும், செல்வச் செழிப்பிற்கும், அவ்வளவு ஏன் இப்பகுதியில் உயிர் ஜனிப்பதற்குமே மூலமாக இருப்பவள் காவேரி. வருடம் முழுவதும் கரைபுரண்டு ஓடிய, காடு வளர்த்த இந்த நதி, 50 ஆண்டுகளில் 87% மரப்போர்வை இழந்து இன்று ஒருசில மாதங்கள் மட்டும் ஓடும் சிற்றாறாக மாறியிருக்கிறாள். காவேரி கூக்குரல் எழுப்புகிறாள், அதற்கு செவிசாய்க்கும் மனம் இருக்கிறதா உங்களிடம்?" -சத்குரு