விண்ணில் ஏற்படும் மாற்றங்களும் குரு பௌர்ணமியும்

சத்குரு:

ஒரு வருடத்தில் வரும் பௌர்ணமி நாட்களில், இந்த ஒரு பௌர்ணமியை மட்டும் ஏன் குருவிற்கு அர்ப்பணிக்கிறோம்? அடிப்படையாக, ஒருவர் அருளை உள்வாங்கிக்கொள்ளும் தன்மையை பொறுத்தவரை, பூமி சூரியனை சுற்றி வரும் பாதையில் இருக்கும் ஒரு சில புள்ளிகள் தனித்துவமான தன்மையோடு இருக்கிறது. ஒரு வருடத்தின் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் பல முனிவர்களும் யோகிகளும் ஞானோதயம் என்னும் மகத்தான தருணத்தை அடைந்துள்ளனர். அந்த குறிப்பிட்ட நாட்களால் மட்டுமே அவர்கள் ஞானோதயம் அடைந்துவிடவில்லை. அவர்கள் அதை நோக்கி தான் போய் கொண்டிருந்தார்கள் - அதை நெருங்கியும் விட்டார்கள் - ஆனால் குறிப்பிட்ட சில நாட்களில் அது எளிதாக மலர்கிறது. இயற்கையே ஒருவர் மலர்வதற்கு துணையாக இருக்கிறது.

குரு பௌர்ணமி அன்று, நிலவுக்கும் கோள்களுக்கும் இடையே குறிப்பிட்ட இணக்கம் ஏற்படுகிறது. இது குரு என்ற பரிமாணத்தை உணரும் வகையில் மக்களுக்குள் உள்வாங்கும் திறனை உருவாக்குகிறது.

பாரம்பரியமாக, மக்கள் அவர்களால் முடிந்த வரை இந்த உள்வாங்கிக்கொள்ளும் காலத்தை சிறப்பான வழியில் பயன்படுத்திக் கொண்டனர். முழுநிலவின் ஒளியில், வாய்ப்பிருந்தால் குருவுடன் இருப்பது இந்தியாவில் வழக்கமாக இருந்தது. முழு இரவும் தியானத்தில் இருந்து, பாடியும் ஆடியும் பெரும் ஆரவாரத்தோடு குரு பௌர்ணமியை கொண்டாடினர்.

Sadhguru with disciples

குரு பௌர்ணமி: அருள் நிறைந்த நாள்

வருடத்தின் இந்த காலகட்டத்தில் தான், தன் ஏழு சீடர்களின் மீதும் ஆதியோகியின் கவனம் விழுந்தது - இவர்களையே நாம் சப்தரிஷிகள் என்று இன்று போற்றி கொண்டாடுகிறோம். யோகக் கலாச்சாரத்தில், சிவன் ஒரு கடவுளாக வணங்கப்படுவதில்லை. சிவன், ஆதியோகியாக - முதல் யோகியாகவும், யோக அறிவியலை தோற்றுவித்த முதல் குரு - ஆதிகுருவாகவும் கருதப்படுகிறார்.

எனவே இந்த மாதம் குருவின் அருளைப் பெறுவதற்கும், அருளை நீங்கள் உள்வாங்கிக்கொள்ளவும் மிகவும் உகந்த காலமாக பார்க்கப்படுகிறது.

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கொஞ்சம் கூட ஈடுபாடு இல்லாமல் துறவறத்தில் இருந்த ஒரு யோகி, மெதுவாக ஈடுபாடு கொள்ளத் துவங்கிய அதே மாதத்தில் நாம் இருக்கிறோம். தனக்குள் உணர்ந்ததை மற்றவர்களுக்கு பகிர வேண்டும் என்ற நோக்கம் ஆதியோகிக்குள் மலரத் துவங்கியது இந்த மாதத்தில் தான்.

எளிமையான சில தயார்நிலை பயிற்சிகளை சப்தரிஷிகள் நீண்ட நாட்களாக 84 ஆண்டுகள் செய்து வந்த போதிலும், ஒரு கணம் கூட ஆதியோகியின் கவனம் அவர்கள் மீது திரும்பவில்லை. அதற்கு பின், சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகரத் துவங்கும்போது - இதை தான் நாம் இந்தியக் கலாச்சாரத்தில் தக்ஷிணாயணம் என்று அழைக்கிறோம் - ஆதியோகி இந்த ஏழு மனிதர்களும் ஜொலிக்கும் உயிர்களாக மாறியிருப்பதை பார்த்தார். அதற்கு பின் 28 நாட்களுக்கு அவர்கள் மீது வைத்த கவனத்தை அவரால் எடுக்க முடியவில்லை. ஆதியோகியின் கவனம் முழுமையாக அவர்கள் மீதே இருந்தது.

பிறகு, கோடை கதிர் திருப்பத்திற்கு அடுத்து வரும் முதல் பௌர்ணமி அன்று அவர் கற்றுக்கொடுக்க முடிவெடுத்தார். அவர் குருவாக மாற தீர்மானித்தார். இந்த பௌர்ணமி தான் குரு பௌர்ணமி என்று குறிப்பிடப்படுகிறது. முற்றிலும் இதயமற்ற யோகியாக இருந்தவர், அந்த ஏழு மனிதர்களை புறக்கணிக்க முடியாமல், கருணைமிக்கவராக மாறிய மாதமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. உலகம் எப்போதுமே தொட முடியாத வகையில் தன்னை கடினமாக வைத்துக் கொண்டிருந்த ஒருவர், இளகினார், கருணை மிக்கவராக மாறினார், அவருக்கு அப்படி ஒரு நோக்கமே இல்லாத போதிலும், குருவாக மாற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

அதனால் தான் இந்த மாதம் குருவின் அருளைப் பெறவும், அருளை உள்வாங்கிக் கொள்ளவும் மிகவும் உகந்த காலமாக பார்க்கப்படுகிறது. அருளிடமிருந்து கவனத்தை பெறுவதற்கு இது நல்ல நேரம்.

குரு பௌர்ணமி - அருளைப் பெற்றுக்கொள்ளும் திறனை மேம்படுத்துங்கள்

“நான் என்ன செய்ய வேண்டும்?” என்பது தான் எப்போதுமே இருக்கும் கேள்வி. நீங்களாக எதுவும் செய்து கொள்ளாமல், “நான்” என்னும் தன்மை குறையும்படி இருந்தால், அது தான் உள்வாங்கிக்கொள்ள உகந்த நிலை. எப்போதுமே சாதனா இப்படித்தான் கட்டமைக்கப்படுகிறது, அது நீங்கள் ஈடுபடும் செயலில் உங்களை ஆழமாக உள்வாங்கிக் கொள்கிறது. எந்த அளவிற்கு என்றால் உங்கள் தினசரி வாழ்க்கையில் நீங்கள் யார், என்னவாக இருக்கிறீர்கள், உங்கள் வாழ்க்கை எதை பற்றியது என்பதை எல்லாம் மறந்துவிடுவீர்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதில் நீங்கள் முழுமையாக இருப்பீர்கள். அருளைப் பெறுவதற்கு இது தான் சிறந்த வழி.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அதற்கு பின், கோடை கதிர் திருப்பத்திற்கு அடுத்து வரும் முதல் பௌர்ணமி அன்று அவர் கற்றுக்கொடுக்க முடிவெடுத்தார். அவர் குருவாக மாற தீர்மானித்தார். இந்த பௌர்ணமி தான் குரு பௌர்ணமி என்று குறிப்பிடப்படுகிறது.

நீங்கள் யார், என்னவாக இருக்கிறீர்கள் என்ற உணர்வு இல்லாதபோது உங்கள் சுவாசம்கூட இன்னும் நன்றாக நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? மனிதர்கள் தூங்கும்போது எவ்வளவு மென்மையாக சுவாசிக்கிறார்கள் என்று பார்த்திருக்கிறீர்களா? ஒரு நாள் முழுவதும் மக்களின் சுவாசத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அது பலவிதமான போராட்டங்களை எதிர்கொள்கிறது. உங்களை எந்த அளவுக்கு எல்லைக்குள் வைத்துக்கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் சுவாசமும் எல்லைக்கு உட்பட்டதாக இருக்கும். நீங்கள் தூங்கும்போது உங்கள் சுவாசம் எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் உங்கள் சுவாசம் எப்போதுமே நடக்க வேண்டும்.

மனித விழிப்புணர்வை வளர அனுமதிக்கும் ஜென்ஜென் அமைப்பில் அழகாக இப்படி சொல்வதுண்டு - ஒரு சீடர் குருவிடம் சென்று, “நான் என் ஆன்மீக வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். “தரையை சுத்தம் செய், விறகு வெட்டு, சமையல் செய், அவ்வளவுதான்.”

ஜென் கதை, Zen Story

“இதை செய்வதற்கு நான் ஏன் இங்கு வரவேண்டும்? இதை நான் வீட்டிலேயே செய்வேனே.” ஆனால் அங்கு, நீங்கள் ‘உங்கள்’ தரையை சுத்தம் செய்கிறீர்கள். பக்கத்து வீட்டு தரை அழுக்காக இருந்தால் கூட நீங்கள் அதை சுத்தம் செய்யமாட்டீர்கள். உங்கள் சொந்த பயன்பாட்டிற்கு விறகு வெட்டுவீர்கள். உங்களுக்கும், உங்களை சேர்ந்தவர்கள் என்று நீங்கள் நினைப்பவர்களுக்கும் மட்டுமே சமையல் செய்வீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் “நான்” என்னும் தன்மையை அதிகப்படுத்திக்கொள்ள தானே தவிர, “நான்” என்பதை கரைப்பதற்கு அல்ல. நம் கர்மாவை பிணைப்பாக மாற்றுவதற்கும், விடுதலைக்கான செயலாக மாற்றுவதற்கும் இடையே உள்ள வித்தியாசம் இதுதான். ஒன்று, நீங்கள் கர்மாவை சேர்த்துக்கொள்கிறீர்கள் அல்லது உங்கள் கர்மா யோகாவாக மாறுகிறது.

குரு பௌர்ணமி அன்று, நிலவுக்கும் கோள்களுக்கும் இடையே குறிப்பிட்ட இணக்கம் ஏற்படுகிறது. இது குரு என்ற பரிமாணத்தை மக்கள் உணரும் வகையில் அவர்களுக்குள் உள்வாங்கும் திறனை உருவாக்குகிறது.

எனவே, வெறுமே தரையைப் பெருக்குவதும், சமைப்பதும், மாமரம் நடுவதும் - உங்கள் எதிரிகளும் அவர் பிள்ளைகளும் அந்த மாம்பழங்களை சாப்பிடக்கூடும், பரவாயில்லை. யார் சாப்பிடுவார்கள் என்பதில் நமக்கு அக்கறை இல்லை. வெறுமே மரத்தை நடுகிறோம் அவ்வளவுதான். இப்போது அந்த செயல் கரைந்து போவதற்கான செயல்முறையாக இருக்கும். இல்லையென்றால் ஒவ்வொரு செயலும் உங்களை நீங்களே சிறைப்படுத்திக் கொள்வதற்கு வழி வகுக்கும். துரதிருஷ்டவசமாக, செயல் தான் மனிதர்களை சிக்கிப்போக வைக்கிறது. செயல் செய்யும் மனிதனின் திறமை தான் அவர்களை அவர்களே சிறைப்படுத்திக்கொள்ளவும் வைக்கிறது. மனித புத்திசாலித்தனமே ஒருவருக்கு துன்பத்தை தருவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

நீங்கள் இப்படி செய்ய ஆரம்பித்துவிட்டால், உங்களை அறியாமலே, திறமைக்கு எதிரியாக மாறிவிடுவீர்கள். அது மிகவும் மோசமான நிலைப்பாடு. மொத்த திறனுக்கும் புத்திசாலித்தனத்திற்கும் எதிராக நீங்கள் இருந்தால், நீங்கள் பின்னோக்கி செல்வதை தான் விரும்புகிறீர்கள், முன்னேறி செல்வதற்கு அல்ல. நீங்கள் வளர வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், திறமை குறைந்த வாழ்க்கையை நோக்கி பின்னுக்கு போகிறீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் வளர்ச்சிக்கு குரு பௌர்ணமி எவ்வளவு முக்கியம்?

இன்றைய காலத்தில், இப்படி சொல்வது நாகரிகமாக கருதப்படுகிறது. “நான் குழந்தையைப் போல் இருக்க விரும்புகிறேன்”. ஆன்மீக தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலர் கூட, “நான் ஒரு குழந்தை மாதிரி” என்று சொல்லிக்கொள்கிறார்கள். நீங்கள் குழந்தையாக இருந்தபோது சீக்கிரம் பெரியவர்களாக ஆகிவிட வேண்டும் என்று நினைத்தீர்கள். ஏன் இப்படி நினைத்தீர்கள் என்றால் பெரியவர்களின் திறன்களை பார்த்தபோது, உங்களை நீங்கள் மிகவும் சிறியதாக, உபயோகமற்று இருப்பதாக நினைத்துக் கொண்டீர்கள். வளர்ந்த பின், இப்படி வளர்ந்ததை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல், மீண்டும் குழந்தையாக விரும்புகிறீர்கள்.

உங்களுக்குள் செய்வதை குறைத்துக்கொண்டு, உங்களுக்கு வெளியே நிறைய செயல்கள் செய்யும்போது, நீங்கள் இன்னும் அதிகமாக அருளுக்கு பத்திரமாக மாறுவீர்கள்.

குழந்தை ஒரு அழகான உயிர், ஏனென்றால் அவர்களின் வளர்ச்சி சீக்கிரமே வர இருக்கிறது, அதனால் தான் இப்போது அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை மதிப்பானதாக பார்க்கிறோம். ஆனால் நீங்கள் எப்போதும் அப்படியே இருக்கப் போகிறீர்கள் என்றால், அதில் எந்த மதிப்பும் இல்லை.

வளர்வதில் தான் மதிப்பு இருக்கிறது. உங்கள் மனத்திலும், உடலிலும் நிறைய விஷயங்கள் செய்யும் திறனோடு இருப்பது தான் மதிப்பு. உங்கள் உடலையும் மனதையும் உபயோகிக்கத் தெரியாமல், அதிலிருந்து துன்பத்தையும் பற்றுதல்களையும் ஏற்படுத்திக்கொள்ளும் போதுதான் குழந்தையாகவே இருந்திருக்கலாமே என்று ஆசைப்படுவீர்கள். இல்லையென்றால் அனைவருமே வளரவேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். பின்னோக்கிப் போவதற்கு யாருமே விரும்புவதில்லை.

ஆகவே தான் இந்த மாதம் அருளின் மாதமாக இருக்கிறது. அருள் என்பது வளர்ச்சிக்கான உரம். மனிதன் தன்னைத்தானே உந்தித்தள்ளி பிரபஞ்சத்தின் வேறொரு பரிமாணத்திற்கு, திறமைக்கு, சாத்தியத்திற்கு தன்னை கொண்டுபோக முடியும். சரி, அருளைப் பயன்படுத்திக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? செய்வதற்கு எதுவும் இல்லை. உங்களுக்குள் செய்வதை குறைத்துக்கொண்டு, உங்களுக்கு வெளியே நிறைய செயல்கள் செய்யும்போது, நீங்கள் இன்னும் அதிகமாக அருளுக்கு பத்திரமாக மாறுவீர்கள்.

குரு பௌர்ணமி: விடுதலைக்கான இரவு

ஆன்மீகப் பாதையில் இருக்கும் மக்களுக்கு, குரு பௌர்ணமி தான் வருடத்தின் மிக முக்கியமான நாள், ஏனென்றால் ஆதிகுருவின் அருளோடு, இதுவரை தோன்றியுள்ள அனைத்து குருமார்களின் அருளையும் அவர்கள் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

15000 ஆண்டுகளுக்கு முன், முழு நிலவின் ஒளி நிறைந்திருந்த அந்த குரு பௌர்ணமி இரவில், ஆதியோகி தன் கவனத்தை சப்தரிஷிகள் மீது திருப்பினார். முதல்முறையாக மனிதகுல வரலாற்றில், மனிதர்கள் ஒரு எல்லைக்குள் வரையறுக்கப்பட்ட உயிர்கள் இல்லை என்பதை அவர்களுக்கு நினைவுப்படுத்திய நாளாக இது அமைந்தது. ஒருவர் முயற்சி செய்ய தயாராக இருந்தால், பிரபஞ்சத்தின் அத்தனை கதவுகளும் திறந்தே இருக்கின்றன. இயற்கையின் சாதாரண விதிகளுக்குள் அடைந்து போக வேண்டிய அவசியம் மனிதனுக்கு இல்லை.

ஆன்மீகப் பாதையில் இருக்கும் மக்களுக்கு, குரு பௌர்ணமி தான் வருடத்தின் மிக முக்கியமான நாள், ஏனென்றால் ஆதிகுருவின் அருளையும், இதுவரை தோன்றியுள்ள குருமார்கள் அனைவரின் அருளையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடைந்திருப்பது தான் மனிதர்களுக்கு இருப்பதிலேயே மிகவும் துன்பமானது. நாம் சிறைச்சாலைகளில் யோகா வகுப்புகள் நடத்துகிறோம், இந்தியாவிலும் கொஞ்சம் அமெரிக்காவிலும். என்னுடைய அனுபவத்தில், ஒவ்வொரு முறை நான் சிறைக்குள் நுழையும் போதும், அந்த காற்றிலே வலி பரவியிருப்பதை உணர்கிறேன். என்னால் இதை விளக்கவே முடியாது. இளகிய மனம் கொண்ட, உணர்ச்சிவசப்படக் கூடிய ஆள் நான் இல்லை என்றாலும், கண்களில் கண்ணீர் இல்லாமல் ஒருமுறை கூட சிறைச்சாலைக்குள் நான் நுழைந்ததே இல்லை. அந்த காற்றில் அவ்வளவு வலி இருக்கிறது. இது தான் அடைத்து வைக்கப்படுவதால் வரும் வலி. இதை தெரிந்துகொண்டதால் தான், மனிதர்களுக்கு இருக்கும் இந்த அடிப்படை இயல்பைப் பற்றி புரிந்துகொண்டதால் தான் ஆதியோகி விடுதலையைப் பற்றி பேசினார்.

இந்த கலாச்சாரம் முக்தியை தன் உச்சபட்ச லட்சியமாகவும் ஒரே லட்சியமாகவும் ஏற்றுக்கொண்டது. நீங்கள் வாழ்க்கையில் செய்யும் எல்லாமே உங்கள் உச்சபட்ச விடுதலையை நோக்கி தான் இருக்கிறது. இது ஏன் என்றால் எந்த மாதிரியான கட்டுப்பாடுகளாக இருந்தாலும் சரி, அது சிறை காவலர்களால் உங்கள் மீது விதிக்கப்பட்டாலும் சரி, திருமணம், பள்ளி ஆசிரியர்கள், அல்லது இயற்கையின் விதிகள் என எதுவாக இருந்தாலும் - கட்டுப்பாடு என்ற ஒரு விஷயத்தை மட்டும் மனிதர்களால் ஏற்க முடியாது, ஏனென்றால் மனிதனுடைய உள்ளார்ந்த ஏக்கம் விடுதலையை - முக்தியை அடையும் ஏக்கம் தான்.

15000 ஆண்டுகளுக்கு முன், முழுநிலவின் ஒளி நிறைந்திருந்த அந்த குரு பௌர்ணமி நாளில் ஆதியோகி தன் கவனத்தை சப்தரிஷிகள் மீது திருப்பினார். மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்ட உயிர்கள் அல்ல என்பதை வரலாற்றிலேயே முதல்முறையாக மனித குலத்திற்கு நினைவூட்டிய நாளாக அது அமைந்தது.

சில ஆயிரம் வருடங்களுக்கு முன், முதல்முறையாக இந்த நாளில், கட்டுப்பாடுகளைத் தாண்டிப்போவது எப்படி என்பதற்கான வழிகளை ஆதியோகி வழங்கினார். அவருடைய தன்மைக்காக நான் ஆதியோகிக்கு தலை வணங்கினாலும், ஆதியோகியை விட இந்த ஏழு ரிஷிகள் மீதும் என்னுடைய நன்றியுணர்வு அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் ஆதியோகி அவர்களை புறக்கணிக்க முடியாத அளவிற்கு அவர்கள் தங்களைத்தாங்களே உருவாக்கி இருந்தார்கள்.

அதற்கு பிறகு எந்த ஒரு குருவோ, யோகியோ தாங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பிய அனைத்தையும் பகிரவும், எதை வழங்கினாலும் புரிந்துகொள்ளும் திறனை உடைய வேறு ஏழு மனிதர்களை பார்த்ததாக நான் நினைக்கவில்லை. பல யோகிகளும் குருமார்களும் மிக அற்புதமான பக்தர்களை கண்டெடுத்தார்கள், அருளை வழங்கி அவர்களை நிறைவாக உணர வைத்தார்கள். ஆனால் எந்த யோகியும் தான் உணர்ந்ததை பரிமாறிக்கொள்ள வேறொரு ஏழு மனிதர்களை கண்டறியவில்லை. அது இன்று வரை நடக்கவில்லை… நாம் இப்போதும் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறோம்.

குறிப்பு:

ஆதியோகி முன்னிலையில் சத்குருவுடன் குரு பௌர்ணமி கொண்டாட வாருங்கள்.