சிம்ம கிரியா குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
6 வயது
70 வயது
6 வயதிற்குட்பட்டவர்களும் 70 வயதிற்கு மேற்பட்டவர்களும் கூட இந்த பயிற்சியைச் செய்யலாம், ஆனால் அவர்கள் 12 முறை மட்டுமே பயிற்சியில் குறிப்பிடும் முறையில் சுவாசம் எடுக்க வேண்டும் (21 முறை அல்ல).
தாராளமாக செய்யலாம்.
பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்திலும், மாதவிடாய் காலத்திலும் மற்றும் நாட்பட்ட நோய்கள் (ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், நுரையீரல் தொடர்பான நோய்கள், கண் அழுத்த நோய், கண்புரை, விழித்திரை விலகல், குடலிறக்கம் போன்ற நோய்கள்) உள்ள எவரும் இந்த பயிற்சியைச் செய்யலாம்.
மூளையில் இரத்தக்கசிவு அல்லது மூளையில் கட்டி உள்ளவர்களும் இந்த பயிற்சியைச் செய்யலாம், ஆனால் அவர்கள் 12 முறை மட்டுமே பயிற்சியில் குறிப்பிடும் முறையில் சுவாசம் எடுக்க வேண்டும் (21 முறை அல்ல).
பெரிய அறுவை சிகிச்சைக்கு பிறகு - 6 மாதங்கள் காத்திருக்கவும்
சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு - 6 வாரங்கள் காத்திருக்கவும்
தரையில் அமர்ந்து பயிற்சி செய்வது நல்லது. நீங்கள் தரையில் அமர உதவியாக சிறிய தலையணை அல்லது மென்மையான போர்வைகளை மடித்து வைத்தும் பயன்படுத்தலாம். அப்படியும் தரையில் அமர்வது உங்களுக்கு சிரமமாக இருந்தால், நீங்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து உங்கள் கணுக்கால்கள் குறுக்காக (இடத்தின் மீது வலது) இருக்கும் நிலையில் அமர்ந்து பயிற்சி செய்யலாம்.
ஆனால் இது சிறந்த முறை இல்லை. நீங்கள் தரையில் அமர்ந்து பயிற்சி செய்யும் போதுதான் பயிற்சி உங்களில் இன்னும் சிறப்பாக செயலாற்றும்.
உணவு உண்ட உடனேயே பயிற்சியை செய்ய வேண்டாம். உணவுக்குப் பிறகு குறைந்தது 2.5 மணிநேரம் இடைவெளி கொடுக்கவும்.
அருந்தலாம், பயிற்சி முடிந்தவுடனேயே உணவு அருந்தலாம் அல்லது அறையின் வெப்பநிலையில் இருக்கும் பானத்தைப் பருகலாம். ஆனால் குளிரூட்டப்பட்ட எதையும் உட்கொள்வதற்கு 10-15 நிமிடங்கள் காத்திருக்கவும்.
கூடாது, கிரியா என்பது மிகவும் நுட்பமான அறிவியல். சவாலான இந்நேரத்தில் யோக அறிவியலின் சாரமாக இது உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சரியாக செய்தால் யோகாசனங்கள் உங்கள் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் ஆற்றலை தம்மில் கொண்டுள்ளன. எனவே யோகாசனங்களை சரியான வழியில்தான் நாம் மற்றவர்களுக்கு பரிமாறுகிறோமா என்பதை உறுதி செய்துகொள்ள, பொதுவாக பல ஆண்டுகள் பயிற்சி தேவைப்படுகிறது. கிரியாவை மற்றவர்களுக்கு வழங்க நீங்கள் வீடியோவை கருவியாக பயன்படுத்தலாம். இந்த பயிற்சி, இதுபோன்ற மற்ற பயிற்சிகளை கற்றுத்தருவதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், ஆசிரியர் பயிற்சி வகுப்பு பற்றிய விவரங்களை அறிய எங்களை தொடர்புகொள்ளவும்.
பயிற்சிக்குப் பிறகு, சூடான நீரில் குளிப்பது என்றால் 15-20 நிமிடம் காத்திருக்கவும். குளிர் நீரில் குளிப்பது என்றால் 25-30 நிமிடம் காத்திருக்கவும்.
ஒரு நாளில் 2-3 முறை, வீடியோவில் குறிப்பிட்டுள்ளபடி.
இரண்டு பயிற்சிகளுக்கும் இடையில் குறைந்தது 4 மணிநேர இடைவெளியை பராமரிக்கவும்.
கூடாது, அறிவுறுத்தப்பட்டபடி பயிற்சியை செய்வது மிகவும் முக்கியம். நீங்கள் எண்ணிக்கையை அதிகரித்தால், அதனால் உடலமைப்பிற்கு கடுமையான சேதம் ஏற்படக்கூடும் என்று சத்குரு கூறியிருக்கிறார்.
கூடாது.
ஆம், நீங்கள் 12 முறை செய்யலாம்.
ஆம், உங்கள் தலையை சற்று மேல்நோக்கிய நிலையில் வைத்திருக்க வேண்டும்.
ஆம்.
செய்யலாம்.
குறிப்பிட்ட வரிசை முறை எதுவும் இல்லை.
குறிப்பிட்ட முன்னெச்சரிக்கைகள் என எதுவும் இல்லை. நீங்கள் இருக்குமிடத்தில் காற்று சுத்தமாகவும், இடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், நன்கு காற்றோட்டமாகவும் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
அறையில் வேறு நபர்கள் இருந்தால், உங்களைச் சுற்றிலும் நல்ல இடைவெளி ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
கூடாது.