Login | Sign Up
Inner Engineering
Login|Sign Up
Country

உனக்காகவே ஒரு ரகசியம்

About the Book

படிப்பு, தொழில், விளையாட்டு, குடும்பம் என்று வாழ்க்கையில் எல்லாவற்றிலும் முதன்மையானவனாக இருக்க விரும்புகிறேன். ஐ மஸ்ட்'பி த பெஸ்ட்! இந்தத் தன்னம்பிக்கையைப் பெற, என் வெற்றித் தாரக மந்திரம் என்னவாக இருக்க வேண்டும்? ஒரே ஒரு அறிவுரையை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்!"" "கடவுள்கள் பிறந்த இடங்கள் புனிதத் தலங்கள் அல்லவா? ஆனால், அங்கேயே பல கலவரங்கள் வெடிக்கும்போது, கடவுள் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மாதானே இருக்கிறார்? அப்படியானால், கடவுளைவிட மனிதன்தான் பெரியவனா?" "இருபது வயது இளைஞன் நான். சுற்றி நடக்கும் அக்கிரமங்கள் என்னை உறுத்துகின்றன. இந்தச் சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று விரும்புகிறேன். நான் என்ன செய்யவேண்டும்?" "ராமன், கிருஷ்ணன் போன்ற பல கடவுள்கள் புராண காலத்தில் வாழ்ந்திருக்கிறார்களே, இன்றைக்கு ஏன் யாரும் அப்படி அவதரிப்பது இல்லை? கடவுள்கள் வாழும் அளவுக்குப் பூமி இன்று புனிதமாக இல்லையா?” "மருந்துகள் இல்லாமல், அறுவை சிகிச்சைகள் இல்லாமல், தீராத நோய்களையும் தீர்த்துவைக்கும் சக்தி சிலரிடம் இருப்பதாகச் சொல்கிறார்களே. அதில் உண்மை இருக்கிறதா? அவ்வப்போது கடற்கரை போன்ற இடங்களில் பெரிய அளவில் கூட்டம் கூட்டி, இப்படி 'நம்பிக்கை சிகிச்சை'கள் அளிக்கிறார்களே... அவர்களால் என் நெடுநாள் நோயைக் குணப்படுத்த முடியுமா?" இதுபோன்ற கேள்விகளுக்கு பயனுள்ள பதில்கள் அளிக்கிறார்.

More Like This