Login | Sign Up
logo
Inner Engineering
Login|Sign Up
Country

ஆயிரம் ஜன்னல்

About the Book

சத்குரு ஜக்கி வாசுதேவ் மதங்களும், முந்தின தலைமுறைக்காரர்களும் சொன்னதையே தன் போதனைகளாக திருப்பிச் சொல்லும் வழக்கம் இல்லாதவர். எதையும் நேரடியாக வேர் வரை உணர்ந்து அனுபவித்து அவற்றையே மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்பவர். அன்பும் அமைதியும் மனித இனத்தின் இரண்டு அடிப்படை குணங்கள் என்பதை உணர்த்த, உலக நாடுகள் பலவற்றிலும் தன் பாதங்களைப் பதித்து, கருத்துகளை விதைத்தவர். ஒவ்வொரு தனி மனிதனும் எல்லை இல்லா ஆனந்த நிலையை அனுபவித்து உணர. கோவை - வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 'ஈஷா யோக மையத்தை நிறுவியவர், உலகெங்கும் பல லட்சம் மனிதர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய சத்குருவாக முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். ஆயிரம் ஜன்னல் வாழ்க்கையில் நீ எது வேண்டுமானாலும் விரும்பிச் செய். ஆனால், செய்ததை நினைத்து நீயே பிற்பாடு அவமானமாக உணரக்கூடும் என்று நினைத்தால், அதைச் செய்யாதே! அன்பின் ஆளுமை. கருணையின் வீரம். தியானத்தின் ஆதிக்கம், சரணடைதலின் வல்லமை, தன்னலமற்ற மகத்துவம், மனிதநேய சக்தி.. இவற்றைப் புரிந்துகொண்டால், அரசியல் அதிகாரத்துக்கும். பொருளாதாரம் மூலம் கிடைக்கும் தலைமைக்கும் ஆசைப்படுவது எவ்வளவு குறைபாடுள்ளது என்பது புரியும்! ...இதுபோன்ற ஞானம் தரும். சுவையான, தேவாமிர்த பொன்மொழிகள் உள்ளே உங்களுக்காக.

More Like This