
About the Book
ஆண், பெண் என்பதெல்லாம் நாம் ஏற்றிருக்கும் கதாபாத்திரங்கள்தான். நாம் ஏற்றிருக்கும் சுதாபாத்திரத்தின் அடையாளங்களில்லாமல் வாழும்போதுதான் தனி மனிதனுடைய திறமைக்குத் தக்கவாறு வாழமுடியும். இது தான் சமூக வளர்ச்சி, இதுதான் உலக வளர்ச்சி. ஆண்தன்மையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பெண் சற்று மென்மையான உயிர்தான். படைத்தலில் ஆண்மை என்பது உறுதியான உருவாக்கம். பெண்மை என்பது மென்மையான உருவாக்கம். நாம் உறுதியான தன்மைகளோடு மட்டும் வாழ முடியாது. மென்மை, உறுதி என இரண்டுதன்மைகளும் நமக்குள் இருந்தால்தான் வாழ்க்கை ஒரு முழுமையான நிலையில் இருக்கும். பெண்ணின் பங்களிப்பு இல்லாத ஒரு சமூகம், மலரில்லாத ஒரு செடியைப் போல சமூகத்தில் பெண்களுக்கும் சமநிலையான பங்களிப்பினை உருவாக்கிக் கொடுக்கவில்லையென்றால், ஒரு பூவில்லாத செடியைப் போலக்தான் சமூகம் இருக்கும். மென்மையும், அழகும் சமமான சமூகமாகவே அந்த சமூகம் வளரும். -சத்குரு
More Like This