Login | Sign Up
Inner Engineering
Login|Sign Up
Country

ஞானோதயம் சில இரகசியங்கள்

About the Book

"""ஞானோதயம்

சில இரகசியங்கள்

சத்குரு, மதங்களும் முந்தின தலைமுறைக்காரர்களும் சொன்னதையே தன் போதனைகளாகத் திருப்பிச் சொல்லும் வழக்கம் இல்லாதவர். எதையும் தேரடியாக வேர் வரை உணர்ந்து அனுபவித்து அவற்றையே மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டவர்.

ஒவ்வொரு தனி மனிதனும் எல்லை இல்லா ஆனந்த நிலையை அனுபவித்து உணர, கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், """"ஈஷா யோக மையத்தை நிறுவியவர். உலகெங்கும் பல லட்சம் மனிதர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய சத்குருவாக முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.

90 சதவீத மக்கள் ஞானமடைந்த ஷணமே உடலை விட்டு நீங்கி விடுகிறார்கள். உடலின் தந்திரத்தை, உடலின் தொழில்நுட்பத்தை அறிந்தவர்கள் மட்டுமே உயிரைத் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. அப்படித் தங்கி விட்டவர்களிலும் பெரும்பான்மையோர் தங்கள் மீதி வாழ்க்கையை மௌனத்தில் கழித்து விடுகிறார்கள். ஒரு சிலர்தான் தங்களைச் சுற்றியுள்ள மக்களின் உள் வளர்ச்சிக்காக, ஏதேனும் செய்ய, முயற்சிக்கிறார்கள். ஆனால் மக்கள் எப்போதும் தர்க்கரீதியான அறிவுடன் இருக்கவே முயற்சிக்கிறார்கள். அது எந்தப் பயனையும் தரப்போவதில்லை....

- சத்குரு

ஞானமடைதல் குறித்து சத்குரு பல சத்சங்கங்களில் பேசியவற்றின் தொகுப்பாக இந்த நூல் வழங்கப்படுகிறது. ஞானமடைவது என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? அதற்கு என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? இதற்காகவே ஈஷா யோக மையம் எப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது? - இந்தக் கேள்விகளுக்கு இந்த நூலில் விடை காணலம். இந்த நூலைப் படிப்பதன் மூலம், நம்மிடையே ஒரு ஞானமடைந்த குரு வாழ்ந்து கொண்டிருக்கும்போது. ஞானமடைவது என்பது மிகத் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை உங்களுக்கு மலரும் என்று நம்புகிறோம்."""

More Like This