Login | Sign Up
Inner Engineering
Login|Sign Up
Country

மூன்றாவது கோணம்

About the Book

சத்குரு ஜக்கி வாசுதேவ் மதங்களும், முந்தின தலைமுறைக்காரர்களும் சொன்னதையே தன் போதனைகளாக திருப்பிச் சொல்லும் வழக்கம் இல்லாதவர். எதையும் நேரடியாக வேர் வரை உணர்ந்து அனுபவித்து அவற்றையே மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்பவர். அன்பும் அமைதியும் மனித இனத்தின் அடிப்படை இரண்டு குணங்கள் என்பதை உணர்த்த, உலக நாடுகள் பலவற்றிலும் தன் பாதங் களைப் பதித்து, கருத்துகளை விதைத்தவர். ஒவ்வொரு தனி மனிதனும் எல்லை இல்லா ஆனந்த நிலையை அனுபவித்து உணர, கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 'ஈஷா - யோக மையத்தை நிறுவியவர். உலகெங்கும் பல லட்சம் மனிதர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய சத்குருவாக முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். மூன்றாவது கோணம் ஒரு காலத்தில், தன் நாட்டை விரிவுபடுத்திக் கொள்ள விரும்பும் அரசன், போர்த் தந்திரமாக அடுத்த நாட்டுக்கு ஒற்றர்களை அனுப்புவான். ஒற்றனின் வேலையே எதிரியிடம் நட்பை சம்பாதிப்பதுதான். அந்த நட்பையும். உறவையும் பயன்படுத்தி, எதிரியைப் பற்றி அறிந்து தன் நாட்டுக்கு உளவு சொல்வான். அந்த அடிப்படையில் இந்த அரசன் நட்பு கொள்வான் அல்லது போர் தொடுப்பான். ஆக, எதிரியை வெற்றி கொள்வான். உங்கள் எதிரியை அழித்துவிட வேண்டும் என்று நீங்கள் புறப்பட்டால், அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெறுவீர்கள் என்று சொல்ல முடியாது. யார் கண்டது, அந்த முயற்சி. எதிரியை அழிப்பதற்கு பதிலாக உங்களையே அழித்துவிடக் கூடும். எல்லா உயிரினங்களிடத்திலும் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் இருக்கும் நீங்கள் பகைவனாக நினைப்பவனிடமும் அந்த எதிர்ப்பு இருக்கும். அவனை அழிக்கப் பார்த்தால், அவன் கடைசி வரை உங்களை அடக்கிவிடப் போராடுவான். வாழ்வா சாவா என்று வந்து விட்டால், அவனுடைய எதிர்ப்பு வலிமை மிக்கதாகி விடும். அதனால், பகைவனை அழிப்பதற்கு பதிலாக அவன் மீது நீங்கள் பாராட்டும் பகையுணர்ச்சியை அழித்து விடுங்கள். ஒருவர் மீது பகைமை இல்லாதபோது, அவர் அதற்குமேல் பகைவனாகத் தொடர இயலாமல் போகிறது. அடிப்படையில் இருக்கும் பகைமையை ஒழித்து விட்டால், ஒரு வேளை அவன் உங்களுக்கு நண்பனாகி விடலாம். உங்களுக்கு பலம் சேர்க்கலாம்.

More Like This