
About the Book
ஆன்மீகத்தைப் பற்றி நீங்கள் சிந்தித்துக்கொண்டோ, பேசிக்கொண்டோ இருக்கமுடியாது. ஆன்மீகம் என்பது, வாழ்க்கை என்று நீங்கள் அழைப்பதன் ஆணிவேர். நீங்கள் அதில் ஆழமாய் மூழ்கவேண்டும். நாம் வாழ்க்கையை வாழ முயல்கிறோம், போற்றுதலுக்குரிய அதன் முழுமையான தன்மையில் நிகழ அனுமதிப்பதில்லை. வாழ்வை அதன் உச்சநிலையில் நிகழ அனுமதித்தால், அதுதான் ஆன்மீகம்.
பொருள்நிலையில் உள்ளது வரையறுக்கப்பட்ட எல்லையுடையது. எந்தக் கணத்திலும் பிரபஞ்சத்தின் மற்ற தன்மைகளால் அவற்றை விழுங்கிட இயலும். எனவே தொடர்ந்து பொருள்தன்மை அச்சுறுத்தலுக்கு ஆட்படுகிறது. ஆன்மீகம் என்றால், எதனாலும் அச்சுறுத்தலுக்கு ஆட்படாதவாறு பொருள்தன்மையைக் கடந்த பரிமாணம் உங்களுள் நுழைந்துவிட்டது என்றே பொருள்.
