
About the Book
“மரம் ஒன்றை நடுவதன் மூலம் உங்களினும் உயர்ந்த ஒன்றை, உங்களுக்குப் பிறகும் வாழும் ஒன்றை உருவாக்குகிறீர்கள்.” - சத்குரு
பல இலட்சம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சிக்குப் பிறகு, மனித இனமே உச்சநிலையில் வளர்ச்சியுற்ற, மென்மையான இனமாக இருக்குமென ஒருவர் எதிர்பார்ப்பது ஒருவர் எதிர்பார்ப்பது இயல்பே. துரதிர்ஷ்டவசமாக, மனித இனமே சுற்றுச்சூழலுக்கு முடிவில்லாத அழிவை விளைவித்திருக்கிறது. நமது சௌகரியத்திற்காக நவீன விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் ஆற்றலைக்கொண்டு இந்த கிரகத்தில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் சொல்லொணாத் துயரை நாம் விளைவித்திருக்கிறோம்.
உலகின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு மரங்களை வளர்ப்பதுதான் பயன்தரக்கூடிய, எளிய தீர்வு என்பதை தற்போது உணர்ந்துள்ளோம். மரங்கள், அவை வளரும் இடத்தின் சுற்றுச்சூழலுக்கு நேரடிப் பங்களிப்பினை வழங்குவதோடு, மற்ற உயிரினங்களின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு பெரும் ஆதாரமாகத் திகழ்கின்றன. ""பூமியைக் காத்தல்"" என்ற உயரிய செயல், மரங்களைப் பெருமளவில் நட்டு வளர்ப்பதன் மூலம் மட்டுமே நிறைவுபெறும்.
மரங்கள் குறித்த விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்த ஈஷா அறக்கட்டளை, “மரங்கள் வரங்கள்"" என்ற இந்தப் புத்தகத்தினை வெளியிடுகிறது.
More Like This