
About the Book
கடவுள் எங்கே இருக்கிறார்? சத்குரு மதங்களும் முந்தின தலைமுறையினரும் சொன்னதையே தன் போதனைகளாகத் திருப்பிச் சொல்லாமல், எதையும் நேரடியாக வேர் வரை உணர்ந்து அனுபவித்து அவற்றையே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்பவர். ஒவ்வொரு தனி மனிதனும் எல்லையில்லா ஆனந்த நிலையை அனுபவித்து உணர, கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோக மையத்தை நிறுவியவர். உலகெங்கும் பல இலட்சம் மனிதர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய சத்குருவாக முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். இந்த நூலில்... தெய்வீகத்தை எப்படி உணர்வது? ஆசையும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று முரணானதா? சாமியார் என்றால் யார்? யோகத்திற்கும் காமத்திற்கும் அடிப்படை ஒன்றுதான் என்கிறார்களே? போன்ற பல கேள்விகளுக்கு சத்குரு அவர்களின் தீர்க்கமான பதில்கள் இடம் பெற்றுள்ளன. 'கடவுள் எங்கே இருக்கிறார்? அவரை நான் பார்க்க முடியுமா?' போன்ற கேள்விகளுக்கு விடை காணும் ஆவல் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அவர்களுக்கு இந்த நூல் சரியான தேர்வாக நிச்சயம் இருக்கும்,
More Like This