
About the Book
சத்குரு ஜக்கி வாசுதேவ்
மதங்களும், முந்தின தலைமுறைக்காரர்களும் சொன்னதையே தன் போதனைகளாக திருப்பிச் சொல்லும் வழக்கம் இல்லாதவர்.
எதையும் நேரடியாக வேர் வரை உணர்ந்து அனுபவித்து அவற்றையே மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்பவர்.
அன்பும் அமைதியும் மனித இனத்தின் அடிப்படை இரண்டு குணங்கள் என்பதை உணர்த்த, உலக நாடுகள் பலவற்றிலும் தன் பாதங்களைப் பதித்து, கருத்துகளை விதைத்தவர்.
ஒவ்வொரு தனி மனிதனும் எல்லை இல்லா ஆனந்த நிலையை அனுபவித்து உணர, கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ‘ஈஷா - யோக மைய'த்தை நிறுவியவர்.
உலகெங்கும் பல லட்சம் மனிதர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய சத்குருவாக முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்.
கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்
* ""ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்தேன். நாங்கள் காதலித்த நாட்கள் மிக ரம்மியமானவை. அவளையே என் மனைவி ஆக்கிக்கொண்டேன். ஆனால், அந்தப் பழைய காதல் காற்றில் கரைந்தது போல், காணாமல் போய்விட்டது. அப்படியானால், காதல் என்பது உடல் இச்சையை அடிப்படையாகக் கொண்டது தானா? இச்சை தீர்ந்ததால், காதலும் தீர்ந்துபோய்விட்டதா?""
""சாமி கும்பிடுவதற்காகப் போகும் கோயில்களில் எதற்காக காம விளை யாட்டுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன? பருவ வயதில் இருக்கும் மகளுடன் கோயிலுக்குப் போகும் என் போன்ற தாய்மார்களுக்கு எவ்வளவு பெரிய தர்மசங்கடம்?”
""அலங்காரச் சாதனங்களுக்காகப் பெண்கள் செலவு செய்யும் தொகையைக் கண்டு மிரண்டு போகிறேன். பெண்கள் தங்கள் அழகுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? ஆண்களைக் கவர்வதற்காக அவர்கள் இதைச் செய்வது ஒருவிதத்தில் தங்களையே தாழ்த்திக்கொள்ளும் செயல் அல்லவா?""
இன்னும் சுவையான பல கேள்விகளுக்கு சத்குரு பதில் அளிக்கிறார் உள்ளே...
More Like This