Login | Sign Up
Inner Engineering
Login|Sign Up
Country

கம்பனில் யோக ரகசியங்கள்

About the Book

மரபின் மைந்தன் முத்தையா மழலைக் கல்வி தொடங்கி முதுகலை வரையில் ஆங்கிலக் கல்வியே கற்றாலும் ஆர்வத்தால் தமிழ் மரபின் ஆழம் தேடி, "மரபின் மைந்தன்” என்ற புனை பெயர் கொண்டவர். பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கொண்டுள்ள "நமது நம்பிக்கை" எனும் சுயமுன்னேற்ற மாத இதழின் பதிப்பாளராகவும், ஆசிரியராகவும் திகழ்பவர். பல்வேறு உலக நாடுகளையும் வலம் வரும் உற்சாகப் பேச்சாளர், பல நிறுவனங்களுக்கு தலைமைப் பண்பு, ஊழியர்கள் தன்னொழுக்கம் மற்றும் செயல்திறன் பயிற்சிகள் வழங்கும் நிபுணர்." இவரது கருத்துருவாக்கத்தில் உருவான எய்ட்ஸ் தடுப்பு விளம்பரம் தேசிய அளவில் இரண்டாம் பரிசு பெற்றது. இவரது கவிதைகள் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் பாடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 49 வயதுக்குள் 66 நூல்களைப் படைத்திருக்கும் படைப்பாளர். கவிஞர் கண்ணதாசனின் தாக்கத்தால் கவிஞராக மலர்ந்து, கவிஞர் வைரமுத்துவின் ஊக்கத்தால் வளர்ந்து, ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்களின் கருணையால் கனிந்து தமிழ்மணமும், ஆன்மீக மணமும் பரப்புவர். தமிழக அரபின் கலைமாமணி விருது, சுழற்சங்கங்களின் உயரிய விருதான பன்முகப் பெருமாண்பு விருது உட்பட பற்பல விருதுகளை இதுவரை பெற்றுள்ளார். பல இசைப் பாடல்களையும், நாட்டிய நாடகங்களையும் எழுதியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களின் எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் அறங்காவலர். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை நிறுவனத் தலைவராகக் கொண்டு இயங்கி வரும், வெற்றித்தமிழர் பேரவையின் மாநிலப் பொதுச்செயலாளர், சத்குரு அவர்களால் உருவாக்கப்பட்ட, கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் திட்டக்குழு உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்படச் செயலாற்றி வருகிறார். இது அவருடைய 61ஆவது நூலாகும். இவர் 28.07.2016 அன்று அமரர் ஏவி.எம். அறக்கட்டளைச் சொற்பொழிவே, தங்கள் கரங்களில் தவழும், "கம்பனில் யோக ரகசியங்கள்" எனும் இந்நூல்.

More Like This