
About the Book
சத்குரு ஜக்கி வாசுதேவ் மதங்களும், முந்தின தலைமுறைக்காரர்களும் சொன்னதையே தன் போதனைகளாகத் திருப்பிச் சொல்லும் வழக்கம் இல்லாதவர். எதையும் நேரடியாக வேர் வரை உணர்ந்து அனுபவித்து அவற்றையே மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்பவர். அன்பும் அமைதியும் மனித இனத்தின் இரண்டு அடிப்படை குணங்கள் என்பதை உணர்த்த, உலக நாடுகள் பலவற்றிலும் தன் பாதங்களைப் பதித்து, கருத்துகளை விதைத்தவர், ஒவ்வொரு தனி மனிதனும் எல்லை இல்லா ஆனந்த நிலையை அனுபவித்து உணர, கோவை - வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 'ஈஷா - யோக மையத்தை நிறுவியவர். உலகெங்கும் பல லட்சம் மனிதர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய சத்குருவாக முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். செய்... செய்யாதே! "எனக்கு ஒரே மகன். 16 வயது. அவனுடைய தனிப்பட்ட செலவுகளுக்கு தாராளமாக பாக்கெட் மணி தருவேன். ஆனால், கையில் பணம் புரள்வதால், சில தீய பழக்கங்களுக்கு அவன் அடிமையாவதாகத் தெரிகிறது. அவனைக் கூப்பிட்டுக் கண்டிக்கவா? அல்லது எதுவும் சொல்லாமல், பணம் கொடுப்பதை நிறுத்திவிடலாமா?” "வக்கீல் தொழில் புரிகிறேன். விவாகரத்து கோரி என்னிடம் இளம் தம்பதிகள் வருவது அதிகரித்துவிட்டது. கலங்கிப் போகிறேன். காதல் என்பது உடல் இச்சையை அடிப்படையாகக் கொண்டதுதானா? இச்சை தீர்ந்ததும் காதலும் காய்ந்துவிடுகிறதா? அல்லது இளைஞர்களிடம் புரிந்துகொள்ளுதல் குறைந்துவிட்டதா?" "நான் என் இளமைக்காலத்தில் வெளியில் சொல்லமுடியாத சில தவறுகளைச் செய்திருக்கிறேன். நெருக்கமானவர்களிடம்கூடப் பல பொய்களைச் சொல்லி ஏமாற்றி இருக்கிறேன். இப்போது, உடல் ஓய்ந்துவிட்டது. என்னைப் பற்றி முழுமையாகத் தெரியாத என் குடும்பத்தார் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் மரியாதையும் என்னை உறுத்துகின்றன. எவ்வளவுதான் முயன்றாலும், இறந்தகாலத்தில் செய்த தவறுகள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து தாங்கமுடியாத வருத்தத்தில் தள்ளுகின்றன. இதிலிருந்து மீள வழி இல்லையா?" - இது போன்ற பல கேள்விகளுக்கு சத்குருவின் சுவையான பதில்கள் உள்ளே...
More Like This