Login | Sign Up
Inner Engineering
Login|Sign Up
Country

ஆனந்தமாய் வாழவே ஆன்மீகம்

About the Book

ஆனந்தமாய் வாழவே ஆன்மீகம்

ஆனந்தத்தினால் நான் அழ முடியும். ஆனந்தத்தினால் நான் அமைதியாக உட்கார முடியும். ஆனந்தத்தினால் உலகில் நான் சுறுசுறுப்பாக இயங்கமுடியும். ஒரு குறிப்பிட்ட நடத்தையையோ செயலையோ ஆனந்தம் அறிவுறுத்துவதில்லை. ஆனந்தம் உங்களுக்கு நிலையான, அழியாத அடிப்படைத் தளத்தை மட்டுமே அமைத்துக் கொடுக்கிறது.

பக்தி என்பது உங்கள் உணர்ச்சிகளின் இனிப்புப் பகுதி, அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் உணர்ச்சிகளின் இனிமையைப் பற்றி மட்டும் பேசவில்லை. உங்கள் உடல் இனிமையாக மாற வேண்டும். உங்கள் மனம் இனிமையாக மாற வேண்டும். உங்கள் உணர்ச்சிகளும் இனிமையாக மாற வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் சக்தி நிலையும் இனிமையாக மாற வேண்டும். ஏனெனில் அதுவே ஒவ்வொன்றிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

உங்கள் வாழ்க்கையில் அழகான சூழ்நிலைகளை சந்தித்தாலும் சரி, கொடுமையான சூழ்நிலைகளை சந்தித்தாலும் சரி, உங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்புதான். அந்த சூழ்நிலைகளைப் பயன்படுத்தி நீங்கள் மேலும் சிறந்தவராக, வலிமையானவராக மாறலாம் அல்லது உடைந்து போய் நொறுங்கிப் போகலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு ஷணத்திலும் இந்த வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. சத்குரு

More Like This