Login | Sign Up
Inner Engineering
Login|Sign Up
Country

ஆள்வதற்குத் தேவையா ஆன்மீகம்

About the Book

ஆள்வதற்குத் தேவையா ஆன்மீகம்?

தெற்காசியாவின் மிகப் பிரபலமான வாரப் பத்திரிகையான இந்தியா டுடே, 2003ம் ஆண்டிலிருந்து ‘21ம் நூற்றாண்டினை வழி நடத்தப்போகும் தலைவர்கள்' என்ற தலைப்பில் உலகின் மிக முக்கியத் தலைவர்களைக் கொண்டு கலந்துரையாடல் மற்றும் விவாதங்களை நடத்தி வருகின்றது. இந்த மாமன்றத்தில் சத்குரு அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரையும் கேள்வி பதில்களும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

பொருள்நிலை மற்றும் அறிவுநிலையில் மட்டும் செயல்பட விரும்பினால் நீங்கள் ஒரு மோசமான தலைவர். ஏனென்றால் உங்கள் உடலும், மனமும் கடந்த காலங்களோடு இறுக்கமாய் பிணைக்கப்பட்டவை.

ஒரு தலைவர் முன்னோக்கிப் பார்க்க வேண்டும். பழையவற்றை திரும்பச் செய்பவரை நாம் தேடவில்லை. முன்னோக்கிப் பார்க்கும் தலைவரால் மற்றவர்கள் நினைத்துப் பார்க்காத, புரிந்து கொள்ளாத ஒன்றைச் செய்ய முடியும். மற்றவர்களால் பார்க்க முடியாத ஒன்றைப் பார்ப்பவர்தான் தலைவர். அவருடைய புரிதல் ஐம்புலன்களின் எல்லையில் அகப்பட்டிருந்தால் அவரால் புதிதாய் எதையும் பார்க்கமுடியாது. கடந்தகாலத்தில் நடந்ததைக் கொஞ்சம் அழகூட்டலாம். ஆனால் புதிய சாத்தியங்கள் நிகழாது.

எனவே ஆன்மீக அம்சம் ஏதுமற்ற ஒரு தலைவர் நிச்சயமாக ஊனமானவர்தான். அவர் அரசியல் தலைவரோ அல்லது பொருளாதாரத் தலைவரோ அல்லது வேறு எந்தவகைத் தலைவரானாலும், உண்மையிலேயே தனித்தன்மையான, புதிதான ஒன்று நிகழ வேண்டுமென நீங்கள் விரும்பினால், மனிதகுல நலவாழ்விற்கு உச்சபட்ச தீர்வாய் ஏதேனும் நடக்க வேண்டுமென்றால் ஒருவர் வாழ்க்கையை அப்படியே பார்ப்பவராக இருக்கவேண்டும்.

சத்குரு

More Like This