உங்களது ஈஷா யோகா அனுபவத்தை ஆழமாக்கிக்கொள்வதற்கும், பயிற்சியைத் திருத்திக் கொள்வதற்குமான ஒரு வாய்ப்பு.
7:30 AM IST, ஜனவரி 5, 2025
(ஒவ்வொருமாதமும் முதலாவது ஞாயிறு)
ஆன்லைனிலும் நேரிலும் வழங்கப்படுகிறது
இலவசமாக வழங்கப்படுகிறது
"சத்சங்கம் என்றால் உண்மையுடன் தொடர்புகொள்வது. மூலத்துடன் தொடர்புகொள்ள இது ஒரு வாய்ப்பு."
Highlights
ஈஷாங்கா (பயிற்றுவிப்பாளர்) ஒருவரின் வழிகாட்டுதலுடன், ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவைப் பயிற்சி செய்திடுங்கள்
பயிற்சி தொடர்பான உங்கள் கேள்விகளுக்கான பதில்களை பெறுங்கள்
சத்குருவின் வழிகாட்டலுடன் சக்திவாய்ந்த தியானங்களை அனுபவித்திடுங்கள்
சத்குருவின் கருத்தாழமிக்க உரைகளைக் காணுங்கள்
சத்சங்கத்தில் பங்கேற்பதற்கான வழிமுறை
உங்களுக்கு அருகிலுள்ள மையத்தில் மாதாந்திர சத்சங்கத்தில் கலந்துகொள்ளுங்கள்
நாள்: ஜனவரி 5, 2025
நேரம்: காலை 7:30 மணி
வழிகாட்டுதல்கள்
இந்த சத்சங்கம், ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவிற்கு தீட்சை பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
காலி வயிறுநிலையில் இருப்பதை உறுதிசெய்யவும்
தயவுசெய்து 15 நிமிடங்களுக்கு முன்பாக, வந்து அமரவும்.
நேரில் பங்கேற்கும் சத்சங்கத்தைப் போலவே, ஆன்லைன் சத்சங்கமும் ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவிற்கு தீட்சை பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
உங்கள் குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும், தீட்சை பெறாத எவரும் இந்த சத்சங்கத்தில் கலந்துகொள்ளாமல் பார்த்துக் கொள்ளவும்.
காலி வயிறுநிலையை பராமரிப்பதை உறுதி செய்யவும்.
சத்குருவின் புகைப்படத்தை வைத்து, அதன் முன்பு ஒரு விளக்கையும் ஏற்றி வைப்பதன் மூலம் நீங்கள் இருக்கும் இடத்தில் உகந்த ஒரு சூழ்நிலையை உருவாக்குவது சிறந்தது. தரையில் உட்காருவது நல்லது.
இந்த நேரத்தை சத்சங்கத்திற்காக பிரத்யேகமாக ஒதுக்குங்கள். மேலும், கழிவறையைப் பயன்படுத்துவது, அலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பது அல்லது குறுஞ்செய்திகளைச் சரிபார்ப்பது போன்ற எந்த குறுக்கீடும், இடையூறும் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்யுங்கள்.
உங்களிடம் நிலையான இணையத் தொடர்பு இருப்பதை உறுதிசெய்யவும்.
அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு, மடிக்கணினி மூலம் இணைவது சிறந்தது.
காலை 7:30 மணிக்கு நிகழ்வு தொடங்கும் என்பதால், தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏதேனும் ஏற்பட்டால் சரிசெய்ய ஏதுவாக, குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்கு முன்னதாக log in செய்யுமாறு பரிந்துரைக்கிறோம்.