சத்குருவின் ஞானோதய தினம்

நேரலையில் இணையுங்கள் | மாலை 6 மணி
seperator
 

செப்டம்பர் 23 சத்குரு ஞானோதயமடைந்த நாள். 38 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், மைசூரிலுள்ள சாமுண்டி மலையில், சத்குருவுக்குள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஓர் அற்புத அனுபவம் ஏற்பட்டது - இப்படிப்பட்ட ஒரு தீவிரத்தின் அழகும் ஆனந்தப் பரவசமும் எல்லா மனிதர்களும் அனுபவித்து உணர்வதற்கான ஒரு செயல்திட்டத்தை அவர் வகுத்தார்.

இந்த நிகழ்வு சத்குருவின் சொந்த வாழ்க்கையில் எத்தகையதொரு மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதைப்போலவே, உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு ஓர் ஆன்மீக சாத்தியத்தைத் திறந்து கொடுத்துள்ளது.

ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் குறைந்தது "ஒரு சொட்டு ஆன்மீகம்" இருப்பதை உறுதிசெய்வதற்கான இம்முயற்சி, 38 ஆண்டுகளாக ஓர் அற்புத சகாப்தமாக தொடர்ந்து வருகிறது.

 
 
நிகழ்ச்சி விவரங்கள்
seperator
 
 

சத்குருவுடன் சக்திவாய்ந்த தியானம்

Powerful Meditation with Sadhguru

சத்குரு தரிசனத்துடன் கேள்வி-பதில்

Sadhguru Darshan with Q&A

சிறப்பு இசை நிகழ்ச்சிகள்

Special Musical Performances
 
 

தயார்ப்படுத்திக் கொள்ளும் சாதனா

seperator

சத்குரு வழங்கும் தியானத்திற்கு உங்களை தயார்ப்படுத்திக் கொள்ளும் சாதனா

சத்குரு ஒரு சக்திவாய்ந்த தியானத்திற்கான குறிப்புகளை வழங்கி நமக்கு வழிகாட்டுவார். தயார்ப்படுத்தும் சாதனாவைக் கற்றுக்கொள்வதன் மூலம் இந்த மகத்தான வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்:

 
 

பக்தி சாதனா என்பது, ஒருவர் அருளை கிரகிக்கும் விதமாக மாறுவதற்கும், தெய்வீக சாத்தியத்திற்கு அழைப்பு விடுப்பதற்குமான ஒரு எளிய செயல்முறை.

 

 

செயல்முறை: உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் உங்களை விடப் மிகப் பெரியதாக, பக்தி உணர்வோடு பாருங்கள். நீங்கள் சுவாசிக்கும் காற்று, அருந்தும் நீர், நீங்கள் உண்ணும் உணவு, மரங்கள், சூரியன், புழுப் பூச்சிகள் என சுற்றியுள்ள எல்லாவற்றையும் பக்தி உணர்வோடு பாருங்கள்.

 

இதனை நீங்கள் தினமும் 12 நிமிடங்கள், 20 நிமிடங்கள் அல்லது 40 நிமிடங்களுக்கு செய்யலாம்.

 
 

சத்குரு வழங்கியுள்ள யோக யோக யோகேஷ்வராயா மந்திரம், முதல் யோகியாம் ஆதியோகி மனிதகுலத்திற்கு வழங்கியுள்ள ஈடுஇணையற்ற பங்களிப்பை அங்கீகரித்துப் போற்றுவதாக அமைந்துள்ளது. இந்த மந்திரத்தை உச்சாடனம் செய்வது உடலமைப்பில் உஷ்ணத்தை அதாவது வெப்பத்தை உருவாக்குகிறது. ஆன்மீகப் பாதையில் உள்ள ஒருவருக்கு, போதுமான உஷ்ணத்தை உருவாக்குவது அவர்களின் வளர்ச்சியை மிகப்பெரிய அளவில் துரிதப்படுத்த உதவும்.

 

செயல்முறை: கண்களை மூடியபடி, சற்று முகத்தை மேல்முகமாக வைத்து உட்கார்ந்து, குறைந்தபட்சம் 12 முறை, 21 முறை (அல்லது நீங்கள் விரும்பும் வரை) உச்சரிக்கலாம்.

 

 
 

எந்தவொரு ஈஷா யோகா வகுப்பிலும் பங்கேற்காதவர்கள், நீங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள வரிசைக்கிரமத்தில் பின்வரும் பயிற்சிகளைச் செய்யலாம்:

 
 

ஒரு எளிய மற்றும் சக்திவாய்ந்த பயிற்சியான யோக நமஸ்காரம், முதுகெலும்பின் அடிப் பகுதியை தூண்டி, இயக்கம்பெறச் செய்கிறது, முதுகெலும்புடன் கூடிய தசைகளை வலுப்படுத்துகிறது. வயது முதிர்ச்சியின் காரணத்தால் முதுகெலும்பு உடைவதை தடுக்கிறது. மேலும், யோக நமஸ்காரம் முழு உடலுக்கும் பல நன்மைகளை வழங்கக் கூடியதாக உள்ளது.

 

தினமும் குறைந்தபட்சம் 3 சுற்று யோக நமஸ்காரம் நீங்கள் செய்யலாம்.

 

 
 

நாடிசுத்தி பயிற்சி, உயிர்சக்தி பாயும் பாதைகளான நாடிகளை சுத்தப்படுத்துகிறது. இதன் விளைவாக ஒரு சீரான உடலமைப்பும் உளவியல் ரீதியில் நல்வாழ்வும் பலனாக கிடைக்கிறது.

 

கால அளவு: குறைந்தபட்சம் 4 நிமிடங்களுக்கு செய்யுங்கள்.

 

 
 

யோகா - ஒலி அல்லது ஒலியதிர்வின் யோகா – உங்கள் உள்நிலையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் தரக்கூடிய ஒலிகளை உச்சரிப்பதன் மூலம் இது சிறப்பான பலனளிக்கிறது.

 

 
 

மிக எளிமையான பயிற்சியான ஷாம்பவி முத்ரா, உங்கள் உள்வாங்கிக் கொள்ளும் திறனை மேம்படுத்துகிறது. அருள் எனும் வாழ்வின் உன்னத பரிமாணத்தை கிரகிக்கும் திறனுடையவராக உங்களை மாற்றுகிறது.