யோகா குறித்த சத்குருவின் குருவாசகங்கள் (Yoga Quotes in Tamil)
யோகா என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல, அது மனிதர்கள் தங்கள் உச்சபட்ச ஆற்றலை உணர்வதற்கான ஒரு செயல்முறை, ஒரு வழிமுறை.
யோகா என்பது ஒரு டெக்னாலஜி. உங்கள் புரிதல் என்னவாக இருந்தாலும், நீங்கள் நம்புவது எதுவாக இருந்தாலும், நீங்கள் நம்பாதது எதுவாக இருந்தாலும் – அவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல – யோகாவை பயன்படுத்தக் கற்றுக்கொண்டால் அது வேலைசெய்யும்.
யோகா என்பது உங்களுக்குள் ஆனந்தத்தின் ரசாயன நிகழ்வை உருவாக்க ஒரு வழி. நீங்கள் இயல்பாகவே ஆனந்தமாக ஆகிவிட்டால், வெளிசூழ்நிலைகளை உங்களால் சிரமமில்லாமல் கையாள முடியும்.
சாதனாவை வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டாம், இன்றைக்கு மட்டும் செய்யுங்கள்.
ஒரு ஆன்மீகப் பயிற்சி எவ்வளவு எளிமையானதாக இருந்தாலும், அதை தினமும் தொடர்ந்து செய்து வரும்போது, மெதுமெதுவாக, படிப்படியாக, உங்களுக்குள் புது நிலையிலான சுதந்திரத்தை அது உருவாக்கும்.
யோகா என்றால் தலைகீழாக நிற்பதும், மூச்சைப் பிடித்துவைப்பதும் மட்டுமல்ல. யோகா என்றால் வாழ்க்கையை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்வது என்று அர்த்தம்.
யோகா என்பது சொர்க்கத்துக்கு போவது பற்றியதல்ல, உங்களுக்குள் நீங்கள் சொர்க்கத்தை உருவாக்கிக்கொள்வது ஆகும்.
யோகா - உலகிற்கு இந்தியா வழங்கியிருக்கும் கொடை. தனிமனிதர்கள் தங்களுக்குள் பூரண மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டால், உலகமும் மாற்றம் அடையும்.
வயது கூடும்போது உங்கள் மூளைத்திறன் குறையவேண்டிய அவசியமில்லை. எளிய யோகப் பயிற்சிகள் மூலமாக மூளையின் திறனை நீங்கள் தொடர்ந்து மேம்படுத்த முடியும்.

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
யோகா என்றால் பிரபஞ்சத்தின் வடிவ அமைப்புடன் பொருந்தும்படி நாம் அமைந்துகொள்வது. இப்படி ஒன்றி அமைவதன் மூலம் எல்லையற்ற சக்தியும், புத்திசாலித்தனமும், நல்வாழ்வும் உதயமாகும்.
யோகா என்பது உங்கள் எல்லைகளைக் கடந்து, பிரபஞ்சத்தின் ஒருமைத்தன்மையை அனுபவத்தில் உணர்வதைப் பற்றியது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் - இதுதான் மனிதகுலம் முன்னோக்கி போவதற்கான வழி.
யோகா என்பது உறுதியாக வாழ்வது பற்றியது, வெறுமனே காய்கறிகள் சாப்பிடுவதும், உடலை நெளித்து வளைப்பதும், கண்களை மூடி உட்காருவதும் மட்டும் அல்ல.
ஹடயோகா என்பது உடலை வளைப்பது பற்றியதல்ல. அது, நீங்கள் சிந்திக்கும் விதத்தை, உணரும் விதத்தை, வாழ்க்கையை கிரகித்துக் கொள்ளும் விதத்தை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்வது ஆகும்.
யோகா என்பது மேம்பட்ட விதத்தில் வாழ்வதற்காக மட்டுமல்ல. யோகா உயிரின் மூலத்தையே ஆராய்ந்து உணர்வது பற்றியது.
யோகப் பயிற்சிகள் உணவைப் போன்றதாகும். உணவு, அதை சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே வேலைசெய்கிறது. யோகப் பயிற்சி அதைச் செய்பவர்களுக்கு மட்டுமே வேலைசெய்கிறது.
யோகப் பயிற்சிகள் மிகவும் உயிரோட்டமான நிலையை உருவாக்கும். உங்கள் சக்தி உடல் உயிர்ப்பாக, சமநிலையாக இருந்தால், உடல்நலமும் மனநலமும் அதன் இயல்பான விளைவாகும்.
ஹடயோகா இதைத்தான் வழங்குகிறது - விழிப்புணர்வுடன் ஒரு ஆசனத்தில் உடலை வைத்திருக்கும்போது, நீங்கள் சிந்திக்கும் விதத்தையும் வாழ்க்கையை அனுபவித்து உணரும் விதத்தையும் மாற்றியமைக்க முடிகிறது.
யோகா என்பது முழுமையான சமநிலை, ஊடுருவும் விதமான தெளிவு, ஓயாத உற்சாகம் ஆகியவற்றை அடைவதற்காகவே - இதன்மூலம், வாழ்க்கைக்கு முழு தகுதியுடையவர் ஆகிறீர்கள்.
யோகநிலையில் இருப்பது என்றால், பிரபஞ்சத்தின் ஒருமைநிலையை அனுபவத்தில் உணர்வது ஆகும்.
ஒரே நேரத்தில் பரிபூரண தீவிரத்துடனும், முழு தளர்வுடனும் இருப்பதுதான் யோகத்தின் அடிப்படை.
யோகாவை நீங்கள் தவறான காரணங்களுக்காக செய்தாலும், அதை சரியாக செய்தால் அது வேலை செய்யும்.
ஹடயோகா என்பது உடற்பயிற்சியாக அல்லாமல் ஒரு உயிரோட்டமான முறையாக கற்றுத்தரப்பட வேண்டும்; அப்போது யோகாசனங்கள் பரவச நிலைகளுக்கு கொண்டு செல்லும்.
யோகா எனும் முறையே, மனத்தை எப்படி கடப்பது என்று பார்ப்பதற்குத்தான். மனத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் இருந்தால் மட்டும்தான் உண்மையாகவே நீங்கள் நீங்களாக இருக்கமுடியும்.
யோகா என்ற வார்த்தைக்கு சங்கமம் என்று அர்த்தம். அதாவது ஒரு தனிமனிதராக நீங்கள் கொண்டிருக்கும் எல்லைகளை நீங்களாக விழிப்புணர்வுடன் அழித்து, பிரபஞ்சத்துடன் ஒன்றி அதிர்வது.
தேவையான சக்தி இல்லாவிட்டால் விழிப்புணர்வாக இருப்பது மிகவும் கஷ்டம். அதற்குத்தான் ஆன்மீக சாதனா – அதாவது, உயிர்சக்தியைத் தூண்டுவதற்காகவே யோகப் பயிற்சிகள்.
தொடர்புடைய பதிவுகள்:
யோகா - முழுமையான தகவல்களும், பயிற்சிகளும்
நீங்கள் விரும்பும்படி உங்கள் மனம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா - உங்கள் உடலையும், மனதையும் எப்போதுமே துடிதுடிப்புடன், உற்சாகமாக, ஆரோக்கியமாக வைத்திருக்க வழி தேடுகிறீர்களா? யோகா, தியானம் செய்ய துவங்கலாம்னு நினைக்கிறேன், ஆனா எப்படி ஆரம்பிக்கறதுனு யோசிக்கறீங்களா? நீங்கள் வந்திருப்பது சரியான இடம். இந்த உடலையும் மனதையும் நமக்கு தேவையானபடி பயன்படுத்தும் இந்த யோக விஞ்ஞானம் எப்படி துவங்கியது, நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றிய முழுமையான தொகுப்புதான் இந்த பதிவு.
யோகா செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டியவை என்ன?
யோகப் பயிற்சிகள் செய்ய வேண்டுமென்றால், உடலளவிலும், வெளிநிலையிலும் சில விதிமுறைகள் நாம் கடைப்பிடிக்க வேண்டியது மிக மிக முக்கியம். அந்த விதிமுறைகள் என்னென்ன என்பதை சத்குரு இதில் தெளிவுபடுத்துகிறார்.