அன்பு பற்றி சத்குருவின் பார்வை குருவாசகங்களாக... (Love Quotes in Tamil)

கடவுளோ வேறொன்றோ உங்கள் மீது அன்பு செலுத்துவது உங்களுக்கு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது. நீங்கள் அன்பாக இருப்பதே உங்களை மிக மிக இனிமையாக்கும்.

wishes download message

 

அன்பு என்பது சௌகரியத்திற்காக பயன்படுத்தும் கருவியல்ல. அன்பு என்பது சுயம் அழிந்துவிடும் ஒரு நிலை.

Love Quotes in Tamil, அன்பு

wishes download message

 

அன்பு - நீங்கள் அதை கற்க முடியாது, நீங்கள் பழகவும் முடியாது, நீங்கள் வழங்கவும் முடியாது. அன்பு என்பது மலர்தல்!

wishes download message

 

கடவுள் உங்களிடம் எதையும் கேட்காததால், அனைவராலும் கடவுளை விரும்ப இயல்கிறது. ஆனால், உங்களுக்கு அடுத்துள்ள நபரிடம் அன்பாய் இருப்பதற்கோ உயிரே போகிறது.

wishes download message

 

உங்கள் இதயத்தில் அன்பு இருந்தால், அது உங்கள் வாழ்க்கை முழுக்க வழிகாட்டும். அன்பிற்கு என்று ஒரு புத்திசாலித்தனம் உள்ளது.

wishes download message

 

அன்பு என்பது இன்னொருவரை உங்களின் ஒரு பாகமாக ஏற்றுக்கொள்வதற்கான ஏக்கம். ஒருவரை இணைத்துக்கொள்வதன் மூலம் உங்களை விட மேலானவராக ஆவதற்கான சாத்தியம் அது.

wishes download message

 

உங்கள்‌ அன்பை பெருக்கிடுங்கள்! மொத்த பிரபஞ்சத்தையே உங்களால் நேசிக்க இயலும்போது, ஒருவரை மட்டுமே நேசிப்பதேன்!

wishes download message

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

 

அன்பிற்கு காப்பீடு எதுவும் கிடையாது. அதனை உயிரோட்டமாய் வைத்திருக்க விழிப்புணர்வாய் இருப்பது அவசியம்.

wishes download message

 

உங்கள் மீது அனைவரும் காதலில் விழவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், முதல் விஷயம், நீங்கள் அனைவர் மீதும் காதலில் விழவேண்டும்.

wishes download message

 

அன்புக்காக ஏங்குபவர்கள் மட்டுமே கடவுள் என்பவர் அன்பு மயமானவர் என்று கற்பனை செய்துகொள்கிறார்கள். அன்பு என்பது மனித உணர்வு.

wishes download message

 

இங்குள்ள 750 கோடி மக்களில் ஒருவர் இல்லாததால் நீங்கள் தனிமையாக உணர்வதற்கு பேர்‌ அன்பல்ல, சிக்கிப் போயிருத்தல்.

wishes download message

 

வரையறைக்கு உட்பட்ட அன்பு, வரையறைக்கு உட்படாத அன்பு என்று எதுவுமே கிடையாது - நிபந்தனைகள் உள்ளன, அன்பும் உள்ளது.

wishes download message

 

பெரும்பாலான மக்கள் அன்பு என்றால், "எனக்கு என்ன தேவையோ அதை நீ செய்ய வேண்டும்," என்று நினைக்கிறார்கள். அன்பு என்றால்,‌ அவர்களுக்கு விருப்பமானதை அவர்கள் செய்யலாம், இருந்தும் நாம் காதலிப்போம் என்பதுதான்.

wishes download message

 

சரி-தவறு, விருப்பு-வெறுப்பு எனும் சாம்ராஜ்யத்திற்குள் சிக்கிப் போயிருப்பவருக்கு அன்பின்‌ சுவை தெரியாது.

wishes download message

 

உங்களால் காதலில் எழ முடியாது, காதலில் பறக்க முடியாது - காதலில் விழ மட்டுமே முடியும். உணர்வின் மாயாஜாலத்தை நீங்கள் உணர விரும்பினால், உங்களின் ஏதோவொன்று விழுந்தாக வேண்டும்.

wishes download message

 

காமம் என்பது பலமான தேவை, அன்பு என்பது தேவையல்ல. அன்பு வசப்படும்போது நீங்கள் தனிந்துபோய் விடுவீர்கள்,‌ வேறெதுவுமே தேவையிருக்காது. அன்பில் இருக்கும்போது, இங்கேயே ஆயுளுக்கும் உட்கார்ந்திருக்க முடியும்.

wishes download message

 

தங்கள் மனக் குப்பைகளை ஒருபுறமாக வைக்கக் கூடியவர்களுக்கு மட்டுமே உண்மையில் அன்பாகவும் கருணையுடனும் இருக்கக்கூடிய ஆற்றல் இருக்கும்.

wishes download message

 

அன்பு செய்யவும், பிறரை அணுகவும், உயிரை அனுபவித்து உணரவும் கூடிய உங்களது ஆற்றலுக்கு எல்லையில்லை. உடல் சார்ந்த, மனம் சார்ந்த செயலுக்கு மட்டுமே எல்லைகள் உள்ளன.

wishes download message

 

உங்கள் சிந்தனைகளும் உணர்வுகளும், உங்கள் விருப்புகளும் வெறுப்புகளும், உங்கள் தத்துவங்களும் கோட்பாடுகளும், அனைத்துமே நீங்கள் காதலில் விழுந்தால் உருகியோடிவிடும்.

wishes download message

 

காரணங்களுக்கு அப்பாற்பட்ட பிரதேசம் ஒன்றிருக்கிறது. நீங்கள் அதனை அடைந்திடும் வரை, அன்பின் இனிமையையோ அல்லது தெய்வீகத்தையோ உணர்ந்திட மாட்டீர்கள்.

wishes download message

 

யோகா என்பது பிரம்மாண்ட காதல் விவகாரம். உயிரின் ஒவ்வொரு வடிவையும் பரிமாணத்தையும் தனக்குள் இணைத்துக்கொள்ளும் செயல்முறை அது.

wishes download message