இல்லை, ஈஷா யோக மையத்தில் பெண்கள் துன்புறுத்தப்படுவதோ கடத்தப்படுவதோ இல்லை. அனைத்து பெண் தன்னார்வலர்கள், ஊழியர்கள், பார்வையாளர்கள் மற்றும் துறவிகளுக்கு பாதுகாப்பான, வசதியான சூழலை வழங்குவதற்கு ஈஷா முன்னுரிமை அளிக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் இந்த மையத்திற்கு வருகை தந்த 7.5 கோடி பார்வையாளர்களில், 3 கோடிக்கும் அதிகமானோர் பெண்கள். இத்தனை ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை அல்லது கடத்தல் நடந்ததாக பதியப்படவில்லை. மேலும், அரசு சமூக நலத் துறையின் பரிந்துரைக்கு இணங்க, ஈஷா அறக்கட்டளையில் உள் புகார்கள் குழு உள்ளது, பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டத்திற்கு இணங்கி செயல்படுகிறது.
"ஈஷா மையத்தில்" பாலியல் வன்கொடுமை நடந்த வழக்கு இருப்பதாக சில பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன. காவல்துறை தாக்கல் செய்த வழக்கு விவரங்களின்படி, இலவச மருத்துவ முகாமின் ஒரு பகுதியாக மருத்துவ பரிசோதனையை நடத்துவதற்காக பணியமர்த்தப்பட்ட ஒரு மருத்துவர் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த முகாம் ஈஷா யோக மையத்தில் நடத்தப்படவில்லை. இந்த வழக்கு விசாரணையில் உள்ளது, மேலும் இந்நிறுவனம் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.
ஈஷா யோக மையத்தை கட்டமைக்க ஈஷா அறக்கட்டளை காட்டு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதா?
இல்லை, ஈஷா அறக்கட்டளை காட்டு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை. மேலும் விபரங்களுக்கு
இங்கே பார்க்கவும்.
ஈஷா யோக மையம், யானை வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ளதா?
இல்லை, ஈஷா யோக மையம் யானை வழித்தடத்தில் இல்லை. மேலும் விபரங்களை
இங்கே வாசிக்கலாம்.
யோக மையத்தில் சட்டத்திற்கு புறம்பான கட்டிடங்கள் உள்ளனவா? ஈஷா யோக மையத்திலுள்ள கட்டிடங்கள் அனைத்துக்கும் தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா?
ஈஷா யோக மையத்தில் சட்டத்திற்கு புறம்பான கட்டிடங்கள் எதுவுமில்லை. கட்டிடங்கள் அனைத்திற்கும் முறையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளன. மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால்,
இங்கே வாசிக்கவும்.
(இது சார்ந்த ஆவணங்களும், யோக மையம் சட்டத்திற்கு கட்டுப்பட்டு இயங்கி வருகிறது என்பதை தெளிவுபடுத்தும் எங்களது விளக்கங்களும் பொது தளத்தில் பல ஆண்டுகளாக இருக்கிறது.)
யோக மையத்தை கட்டமைக்க, ஈஷா கட்டாயப்படுத்தி ஆதிவாசிகள் நிலத்தை தன்வசப்படுத்தி உள்ளதா?
இல்லை, ஈஷா எந்த நிலத்தையும் வற்புறுத்தியோ கட்டாயப்படுத்தியோ ஆக்கிரமிக்கவும் இல்லை, தன்வசப்படுத்தவும் இல்லை.
ஈஷா அனைத்து சட்டங்களுக்கும் கட்டுப்படுகிறதா? சுற்றுச்சூழல் விதிகளுக்கும் உட்பட்டு நடக்கிறதா?
சுற்றுச்சூழல் விதிகள் உட்பட இம்மண்ணின் சட்டங்கள் அனைத்திற்கும் ஈஷா கட்டுப்பட்டு, விதிகளை பின்பற்றுகிறது.
சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழுக்கான விண்ணப்பத்தை ஈஷா ஒருமுறை திரும்பப் பெற்றுவிட்டதாக தெரிகிறது, அது உண்மையா?
சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழுக்காக தவறான பிரிவின் கீழ் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்ட காரணத்தால், அந்த விண்ணப்பம் மட்டும் ஒரே ஒருமுறை திரும்பப் பெறப்பட்டது.
ஈஷா யோக மையம் காட்டுக்கு அருகில் இருப்பதால், மனித-விலங்கு மோதல், அல்லது வனவிலங்குகளுக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளதா?
ஈஷா வன விலங்குகளை தொந்தரவு செய்வதில்லை, அப்படிச் செய்ய ஒருபோதும் விரும்பவும் விரும்பாது. நாங்கள் இயற்கையோடு இசைந்து வாழ்கிறோம்.
2017ம் ஆண்டு வெளியான தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) அறிக்கையில் ஈஷாவுக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் உண்மையா?
இதில் கூறப்பட்டுள்ள எதுவும் உண்மையில்லை. அவர்களுக்கு நாங்கள் கொடுத்துள்ள பதிலும் பொதுத்தளத்தில் நீண்டகாலம் இருக்கிறது. மேலும் தகவல்களுக்கு
இங்கே வாசிக்கவும்.
ஆதியோகி ஏன் இவ்வளவு ஆடம்பரமாக சித்தரிக்கப்படுகிறார்? இது அவசியம்தானா?
ஆதியோகியைப் பற்றிய ஆடம்பரமான ஒரே ஒரு விஷயம், அதை உருவாக்குவதில் பங்குவகித்த மக்களின் கடின உழைப்புதான். இது முற்றிலும் தன்னார்வத் தொண்டர்களால் செயல்படுத்தப்பட்டுள்ளது. மனிதர்கள் தங்கள் உச்சபட்ச நல்வாழ்வை நாடுவதற்கு ஒர் ஊக்கசக்தியாக, அதற்கான குறியீடாக ஆதியோகி திகழ்கிறார்.
ஆதியோகியை நிறுவ காடுகள் அழிக்கப்பட்டதா?
இல்லை, ஆதியோகியை நிறுவ காடுகள் அழிக்கப்படவில்லை. மேலும் விபரங்களை
இங்கே வாசிக்கவும்.
ஆதியோகிக்குத் தேவையான அரசு அனுமதி பெறப்பட்டுள்ளதா?
ஆம், உரிய அரசுத் துறைகள் அனைத்திடமிருந்தும் அனைத்து அனுமதிகளும் ஆதியோகிக்கு பெறப்பட்டுள்ளது, மேலும் விபரங்களுக்கு
இங்கே வாசிக்கவும்.
சத்குருவின் மனைவி திருமதி. விஜயகுமாரியின் மரணம் குறித்து பல கதைகள் சொல்லப்படுகின்றன. இதில் உண்மை என்ன?
நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் திருமதி. விஜயகுமாரி மஹாசமாதி அடைந்தார். ஒரு ஆன்மீக சாதகரின் உச்சபட்ச நோக்கமே மஹாசமாதி அடைவதுதான். தமிழ் கலாச்சாரத்தில் இந்நிலையை எட்டிய பல யோகிகள் மற்றும் சித்தர்களின் வாழ்க்கையைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். சித்தர்களும் புத்தர்களும் மகான்களும் வாழ்ந்த புண்ணிய பூமி பாரதம். மேலும் தெரிந்துகொள்ள
இங்கே வாசிக்கவும்.
சத்குரு ஏன் எளிய பாரம்பரிய குருவாக இருப்பதில்லை? அவர் ஆரவாரமானவராக, விலைமதிப்புள்ள சால்வைகள், கூலிங் கிளாஸ் அணிபவராக, விலைமதிப்புள்ள கார், பைக் ஓட்டுபவராக, ஆடம்பரமான வாழ்க்கைமுறை உடையவராக இருக்கிறார்.
"எளிய பாரம்பரிய குரு" எனும்போது நீங்கள் மனதில் வைத்திருப்பது என்ன? நாம் வழக்கமாய் சித்தரிக்கும் "குரு" எனும் பிம்பத்திற்குள் அடங்கக் கூடியவர் அல்ல சத்குரு.
ஒரு ஆன்மீக குருவாக, சத்குருவின் அவதாரம் புதியது. கால்ஃப் ஆட்டக்காரராக ஒரு அவதாரம். பைக் ஓட்டும்போது வேறு அவதாரம் எடுக்கிறார். உலகப் பொருளாதார மாநாட்டிலும், ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதிலும் வேறு விதமான உடை அணிந்து மற்றொரு அவதாரம் எடுக்கிறார். இளைஞர்களுடன் வேறு விதமாக இருக்கிறார். சூழ்நிலைக்கு பொருந்தும் விதத்தில் அவர் வாழ்கிறார்.
சத்குரு, பைக்குகள் மற்றும் கார்களை பிரியத்துடன் பயன்படுத்தினாலும், அவற்றில் எதையும் அவர் சொந்தமாக வைத்திருப்பதில்லை.
ஈஷா, சமுதாயத்தில் உயர்மட்டத்தில் இருப்போருக்கு மட்டுமான நிறுவனமாக பார்க்கப்படுகிறது. சத்குரு ஏன் எப்போதும் பிரபலங்களோடு காணப்படுகிறார்?
ஊடகங்கள் சத்குரு பிரபலங்களோடு இருப்பதை மட்டுமே செய்தியாக வெளியிட விரும்புவதால், சத்குரு பிரபலங்களோடு மட்டுமே செயல்படுவதாக நினைக்கிறீர்கள். சத்குரு சந்திக்கும் ஒவ்வொரு பிரபலத்திற்கும், பல லட்ச எளிய மக்களை சந்திக்கிறார். ஆன்மீகமானாலும், சமூக நலத் திட்டங்களானாலும், ஈஷாவின் பெரும்பாலான பணிகள் கிராமப்புறத்தில் தான் நடக்கின்றன. ஆனால் அவை சுவாரசியமான செய்திகளாக கருதப்படுவதில்லை, அதனால் அவை வெளிவருவதும் இல்லை. ஈஷாவின் சமூக நலத்திட்டங்கள் பற்றி
இங்கே மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
மஹாசிவராத்திரி ஏன் இவ்வளவு பிரபலப்படுத்தப்படுகிறது? ஈஷாவின் மஹாசிவராத்திரி விழாவில் கலந்துகொள்ள எதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது? ஒருவர் இலவசமாக கலந்துகொள்ள முடியாதா?
கோடிக்கணக்கான மக்களுக்கு மஹாசிவராத்திரி விழாவை இலவசமாக வழங்கிட ஏராளமான வேலைகளும் செலவுகளும் செய்யத் தேவையிருக்கிறது. இந்த மாபெரும் இரவுநேரத் திருவிழாவைக் கொண்டாட சிலநூறு மக்கள் மட்டுமே கட்டணம் செலுத்துகின்றனர்.
போல்ஸ்டார் அறிக்கையின்படி (Pollstar’s report), 2021ல் கிராமி விருதுகளை (Grammy Awards) பார்த்த மக்களைவிட அதிக எண்ணிக்கையிலான மக்கள் மஹாசிவராத்திரி விழாவை இணையவழி சேனல்கள் வாயிலாக கண்டுகளித்தனர்.
ஈஷா யோகா வகுப்புகளுக்கு ஏன் இத்தனை அதிக கட்டணம்? ஆன்மீக செயல்முறைக்கு இவ்வளவு கட்டணம் தேவையா?
ஆன்மீக செயல்முறை எப்போதும் இலவசமாகத் தான் வழங்கப்படுகிறது. இந்த வகுப்புகளுக்கான ஏற்பாடுகளைச் செய்ய பணம் செலவாகிறது, அந்தச் செலவுகளுக்கு உண்டான கட்டணத்தைத்தான் பங்கேற்பாளர்கள் செலுத்துகின்றனர்.
சத்குரு பா.ஜ.க. கட்சி ஆதரவாளரா?
சத்குரு ஜனநாயகத்தையும் மக்கள் விருப்பத்தையும் ஆதரிப்பவர். அனைத்து கட்சியை சேர்ந்த அரசியல் தரப்பினரோடும் அவர் வெற்றிகரமாக பணியாற்றியுள்ளார். அவர் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளதைப் போல, ஜனநாயகம் என்றால் எங்களுக்கு நீங்கள் யார் என்பதில் ஆர்வமில்லை, உங்களால் என்ன செய்ய முடியும் என்பதில்தான் எங்கள் ஆர்வம்.
வரியிலிருந்து தப்பிக்க ஈஷா 'நன்கொடை' ரசீதுகளை வழங்குகிறதா?
ஈஷா வரிகட்டுவதை தவிர்ப்பதில்லை. தற்போது யோகாவிற்கு எந்த வரியும் இல்லை.
2016ல் இரண்டு துறவிகள் சிறைப்பிடிக்கப்பட்டது உண்மையா?
ஈஷா யோக மையத்தில் எவரும் சிறைப்பிடிக்கப்படவில்லை. அனைவரும் அவரவர் சுய விருப்பத்தாலேயே இங்கு வாழ்கின்றனர். பிரம்மச்சாரிகள் (துறவிகள்) அனைவரும் அவரவர் சுயவிருப்பத்தால் துறவறப் பாதையை தேர்வு செய்துள்ளனர். உண்மையை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தால்,
இங்கே மேலும் வாசிக்கவும்.
மக்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ள ஈஷா சிரிப்பூட்டும் வாயுவை (Laughing Gas) பயன்படுத்துவது உண்மையா?
ஹாஹாஹா (இதை கேட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை). எங்களை மகிழ்வூட்டுவது வாயு அல்ல, எங்களை மகிழ்வூட்டும் விஷயத்திற்கு பெயர் 'யோகா'.
ஈஷா மக்களை கோமாவில் வைத்து அவர்களது சிறுநீரகத்தைத் திருடுகிறது என்று கேள்விப்பட்டோம், இதுகுறித்து என்ன கூறுகிறீர்கள்?
உண்மையாகவா? அப்படி திருடும் அத்தனை சிறுநீரகங்களையும் வைத்து என்ன செய்வது? எங்கள் இணையதளத்தில் விற்பதா? கொஞ்சம் யதார்த்தத்திற்கு வாருங்கள்.