ஆதியோகி சிலைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மை
ஆதியோகி சிலைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மை
ஆதியோகி சிலை முடிவடையும் நிலையில், 2017 மஹாசிவராத்திரி தினத்தன்று, பிரதமர் சிலையை திறந்து வைப்பார் என்று ஈஷா அறக்கட்டளை அறிவித்த உடனேயே சில சுயநல நோக்கம் கொண்ட அமைப்புகள் ஈஷாவை பற்றி அவதூறுகளை பதிவிட ஆரம்பித்தன. இந்த அவதூறுகள் வதந்தி ஆலைக்கு தீவனம் போட்டது போல் ஆனது. ஊடகங்கள், நிதியுதவிகள் மூலம்இயக்கப்படும் குழுக்கள், அபத்தமான சட்ட வழக்குகள், பயமுறுத்தும் வாட்ஸாப் பரப்புரைகள் என ஒவ்வொரு தந்திரமும் ஆதியோகி சிலையை இழிவுபடுத்தும் நோக்கத்தில் ஏவி விடப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மையை தேடுபவர்களுக்கு இங்கே ஆதாரங்களை நாங்கள் வழங்குகிறோம்:
குற்றச்சாட்டு 1: ஆதியோகி சிலையை நிறுவ ஈஷா காடுகளை அழித்துள்ளது
உண்மை:ஆதியோகியை நிறுவுவதற்கு வாங்கப்பட்ட நிலம் பல தலைமுறைகளாக தனிப்பட்டவருக்கு சொந்தமான பட்டா நிலம்.இதில் எந்த வன நிலமும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. கோயமுத்தூரில் உள்ள வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர், நிலத்தை பற்றிய அறிக்கையினைக் கோரி அதை ஆராய்ந்தும் பார்த்தனர். மாவட்ட வன அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆதியோகி சிலை நிறுவுவதற்கு தடையில்லா சான்றிதழும் அளித்துள்ளார்.
கூகுல் எர்த்தின் ஆதாரம்
கூகுல் எர்த் படங்களின் மூலம் ஆதியோகி சிலை அமைந்து இருக்கும் இடம் வனத்திற்கு சொந்தமான நிலம் அல்ல என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம். இதன்மூலம், சுற்றியுள்ள பகுதிகள் அனைத்துமே தனியார் நிலப்பகுதிகள் என்பது தெளிவாகிறது. மேலும், 2006 ஆம் ஆண்டில் இருந்து (2006லிருந்து தான் செயற்கைக்கோள் படங்கள் கிடைக்கின்றன) இந்த நிலங்கள் காடுகள் அல்ல என்பதும் உறுதியாகிறது. இந்த பகுதிகள் பல வருடங்களாக பட்டா நிலங்களாக இருந்தவை என்றும் காண முடிகிறது.
2006 இல் இருந்து சில படங்கள்:
கூகுல் எர்த் - 2006ம் ஆண்டு படம்

கூகுல் எர்த்– 2012ம் ஆண்டு படம்

கூகுல் எர்த்– 2016ம் ஆண்டு படம்

குற்றச்சாட்டு 2 – ஆதியோகி கட்டுமானம், சட்டவிரோதமானது
உண்மை:முதலில் ஆதியோகி ஒரு கட்டிடம் இல்லை, மாறாக உலோகத்திலான 112 அடி உருவச்சிலை. இந்த சிலை நிறுவ மாவட்ட கலெக்டர், கோயம்புத்தூர், மாவட்ட வன அலுவலர், கோயம்புத்தூர் மற்றும் பி.எஸ்.என்.எல் அதிகாரிகளிடம் இருந்து தேவையான அனுமதி வாங்கி அதன்பின்னரே நிறுவப்பட்டுள்ளது.அதற்கான சான்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
S. No. |
Date
Authority
Ref No.
1
29-09-2016
District Collector
Na.Ka.6901/2016/E2
2
15-11-2016
DFO (Forest Department)
Na.Ka.V1/5589/2016
3
13-10-2016
BSNL
CB/PLG/AGM NWP-I/ GENL CORR/2016-17/1 DT @ CB-43 THE 13/06/2016
அரசாங்க சான்றிதழ் பெற்ற பொறியியலாளரிடமிருந்து இந்த 112 அடி சிலை கட்டமைப்பு ஸ்திரத்தன்மையானது என்ற சான்றிதழும் பெறப்பட்டுள்ளது.
ஆதியோகி சிலைக்கு மாவட்ட கலெக்டர் வழங்கிய அனுமதி கடிதம்:


