logo
search

ஈஷா சங்கமித்ரா

விழிப்புணர்வான உலகை கட்டமைப்போம்

“யாரோ ஒருவர் விருப்பப்படுவதால் மட்டுமே அழகான விஷயங்கள் நடந்து விடுவதில்லை. யாரோ ஒருவர் அதை நிகழச் செய்வதால்தான் அழகான விஷயங்கள் நடக்கின்றன. அந்த ஒருவர் நீங்களா....” - சத்குரு

ஈஷா சங்கமித்ரா என்றால் என்ன

யோகக் கலாச்சாரத்தில் சங்கம் என்பதற்கு ஆன்மீக சமூகம் என்று அர்த்தம். மித்ரா என்றால் நண்பர். சங்கமித்ரா என்பவர் ஆன்மீக சமூகத்திற்கு ஒரு நண்பர்.

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு துளி ஆன்மீகமாவது வழங்கி உள்நிலையில் மேம்பட்ட மனித சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே சத்குருவின் நோக்கம். இந்த நோக்கத்தின் ஒரு அம்சமாகி, அதை நிறைவேற்றுவதில் பங்களிக்க ஒரு வாய்ப்பு ஈஷா சங்கமித்ரா.

சங்கமித்ராவாக இருப்பது என்றால் நீங்கள் விரும்பும் கால அளவிற்கு தொடர்ச்சியாக மாதாந்திர நன்கொடை அளிக்கலாம். அது சிறிதோ பெரிதோ ஒவ்வொரு நன்கொடையும் பெரிதான ஒரு மாற்றத்தை ஏற்படுத்திடும். தயவுசெய்து உங்களால் முடிந்த வகையில் உதவிடுங்கள்.

பகிர்வுகள்

"நாம் தவறாக பயன்படுத்தப் படுகிறோமா?” என்ற கவலை ஏதும் இன்றி, மக்களின் சேவைக்கு பரிபூரணமாக என்னை அர்ப்பணித்து வாழக்கூடிய ஒரு இடம் உள்ளது என்று நான் முன்பு அறிந்திருக்கவில்லை.  இங்கே தினமும் முழு ஆனந்தத்தோடும், சுதந்திரத்தோடும் அதை நான் செயல்படுத்த முடிகிறது. இது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்! நான் கவனித்துக்கொள்ளப்படுகிறேன் என்ற உணர்வு எனக்கு எப்போதுமே இருக்கிறது. இந்த இடத்தை இந்த விதத்தில் அமைத்திருக்கும் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன்."

- அதிதி நாராயண்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தொடர்புடைய பதிவு