
About the Book
நம்மால் உறவுகள் இல்லாமல் தனித்து வாழ முடியவில்லை.
அதனால்தான் உறவுகளை புதிதுபுதிதாக ஏற்படுத்திக் கொள்கிறோம்.
இப்படி கஷ்டப்பட்டு ஏற்படுத்திக் கொண்ட உறவுகள் எப்போதும்
மகிழ்ச்சியைத்தான் கொடுக்கிறதா என்றால் 'ஆமாம்' என்று உங்களால்
முழு மனதுடன் சொல்ல முடியவில்லை. சுதந்திரத்தை விட
கட்டுப்பாடுகளையே பரிசாகத் தரும் இந்த உறவுகளைக் கையாள்வது ஒரு
பெரிய சர்க்கஸாகவே இருக்கிறது. இவ்வளவு சவால்கள் இருந்தாலும்,
உறவுகளுக்காக ஏன் தொடர்ந்து ஏங்குகிறோம்? உறவுகளின் மத்தியில்
இருந்து கொண்டே அந்த கட்டுப்பாடுகளைக் கடந்து எப்படி முன்னேறுவது?
வாருங்கள், அதற்கான வழிகளை சத்குரு இந்த புத்தகத்தில் விரிவாக
விளக்குகிறார்.
உங்களுக்கு கோபம் வரவழைக்க ஒருவர் எண்ணினால் அதற்காக அவர்
அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. உங்களுக்கு பிடிக்காத ஒரு
வார்த்தை போதும், உங்களை கோபத்தின் உச்சிக்கு எடுத்துச் செல்ல
முடியும், இல்லையா? ஆமாம், மனிதன் உணர்ச்சிகளின் சங்கமமாக
இருக்கிறான். அன்பு, காதல், ஆனந்தத்தில் ஆழ்ந்திருக்கும்போது
ஆகாயத்தில் மிதக்கிறான். கோபம், வெறுப்பு மிகுந்திருக்கும்போது,
மனிதத்தன்மை கூட இழந்து செயல்படுகிறான். அதனால்தான்
உணர்ச்சிகளை வாழ்வின் சாரம் என்கிறோம். உணர்ச்சிகள் என்பவை
உங்களுக்கு எதிரிகள் அல்ல, எப்படிப்பட்ட உணர்ச்சிகளாக இருந்தாலும்,
அவற்றை உங்கள் வாழ்வின் மேன்மைக்கு பயன்படுத்திக்கொள்ள
முடியும். அதற்கான வழிகளை சத்குரு இங்கு விரிவாக எடுத்துச்
சொல்கிறார்.
More Like This