இந்தத் தொகுப்பில், இன்றைய சூழ்நிலையிலுள்ள கல்விமுறையின் தாக்கத்தையும், குழந்தைகளும் பெற்றோர்களும் எதிர்கொள்ளும் சவால்களையும் சத்குரு அவர்கள் வெகு ஆழமாய் விவரிக்கிறார்.
கற்றலுக்காக குழந்தையினுள் எழும்கனலைத் தக்கவைத்து, தங்களது ஆர்வங்களை அவர்கள் தொடர்வதற்கேற்ற சூழலுக்கான திறவுகோல்களை இதில் தெரியப்படுத்துகிறார். மேலும் உண்மையான மாற்றத்திற்கான இன்றியமையாத வழி காட்டுதலையும் வழங்குகிறார். ""குழந்தையினுள் அறிவுதாகம் தூண்டப்படுமானால், அவன் கற்றுக் கொள்வதை உங்களால் தடுக்கமுடியாது. எப்படியும் அவன் கற்றுக்கொள்வான்” என்கிறார். மேலும், இன்றைய நடைமுறையில் பரவலாயிருக்கும் தவறான வழிகாட்டுதல்களைச் சுட்டிக்காட்டி, கல்வியின் அடிப்படை செயல்பாடு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை நமக்கு நினைவு படுத்துகிறார்.