
About the Book
எந்த மாபெரும் கண்டுபிடிப்பையும், நீங்கள் நடமாடிக் கொண்டிருக்கும் இந்த பூமியானது ஏற்கனவே அறிந்துள்ளது. நீங்கள் மறுகண்டுபிடிப்பு செய்யும் ஒவ்வொன்றும், இந்த கிரகம் ஏற்கனவே அறிந்திருந்ததுதான். ஆனாலும், இந்த அறிவின் கழைக்கூத்தாட்டத்தால் நீங்கள் சிலிர்ப்படைகிறீர்கள்.
தங்களை அறிவுஜீவிகளென்று நினைத்துக் கொள்பவர்களுக்கு ஒரு மலரைக் காணவோ, சூரிய அஸ்தமனத்தைக் காணவோ, ஒரு குழந்தையைக் காணவோ, ஒரு முகத்தைக் காணவோ கண்கள் இல்லை. அல்லது புன்னகையிழந்த முகத்தைச் சிரிப்பாக மாற்றும் சிறிய கடமையோ, சின்னச்சின்ன பொறுப்புகளோ, சின்னச்சின்ன அக்கறையோ எதுவுமே அவர்களிடம் இருப்பதில்லை. ஆனால் அவர்கள், பிரபஞ்சத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கிளம்பிவிட்டார்கள்
This book is also available in: English
