ஆதாரமற்ற அவதூறுகள்

கடந்த 25-30 வருடங்களாக, சில குழுக்கள், சிறிதாக இருந்தாலும் உரத்த குரலில், விஷமத்தனத்துடன் இடைவிடாது ஈஷா அறக்கட்டளையின் மீது எவ்வித ஆதாரமும் இல்லாமல் புகார்களை சுமத்தி வருக்கின்றனர். இன்று, போலியான செய்திகள், சமூக ஊடகங்கள், பணத்தால் இயக்கப்படும் சில ஊடகங்கள் ஆகியவற்றின் உதவியுடன், வஞ்சக நோக்கம் கொண்ட குழுக்கள், ஈஷா அறக்கட்டளையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பொய்களால் ஆன வலைப்பின்னலை திட்டமிட்டு பின்னிக் கொண்டிருப்பதை நாம் பார்த்து வருகின்றோம். ஈஷா உலகளவில் 90 லட்சம் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் 50 கோடி மக்களின் வாழ்வைத் தொட்டுள்ள இவ்வேளையில், உண்மையை வெளியிட வேண்டும் என்று மக்கள் மீண்டும் மீண்டும் வேண்டிக் கொண்டதற்கிணங்க, பொதுவாக புனையப்படும் சில கட்டுக்கதைகளுக்கு எதிரான உண்மை நிலவரம் என்ன என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
 
 

கட்டுக்கதை

உண்மை

கட்டுக்கதை

ஈஷா அறக்கட்டளை காடுகளை ஆக்கிரமித்துள்ளது

உண்மை

ஈஷா அறக்கட்டளை செயல்படும் நிலம் தனிநபர்களிடமிருந்து, சட்டப்பூர்வமாக வாங்கப்பட்ட, 100% பட்டா நிலமாகும். தமிழக வனத்துறை அதிகாரிகள் இதனை சரிபார்த்து தெளிவாக ஆவணப்படுத்தியுள்ளனர். ஈஷா யோக மையம் வனப்பகுதியில் இல்லை என்றும், மையத்தை சுற்றியிருக்கும் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் எந்த தீங்கையும் மையம் விளைவிக்கவில்லை என்பதையும் அவர்கள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். போலிச் சுற்றுசூழல் குழுக்களால் சென்னை உயர்நீதிமன்றத்திலும் தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு, தமிழ்நாடு வனத்துறை கொடுத்த பதில் மனுவில் ஆவண எண்: CFCIT/07/2013 ஆனது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான மத்திய அமைச்சகமும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முன் சமர்ப்பித்த தனது பதில் மனுவில் இதனையே வலியுறுத்தியுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் இதனை சர்வே வரைபடங்கள், வருவாய்ப் பதிவுகள், பஞ்சாயத்து பதிவுகள் ஆகியவற்றின் மூலம் சரிபார்த்து கொள்ள முடியும்.

விபரங்களுக்கு இந்த ஆவணத்தை வாசிக்கவும்.

மேலும் பார்க்க:

கட்டுக்கதை

ஈஷா யோக மையம் யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ளது

உண்மை

யானைகள் வழித்தடம் அல்லது யானைகள் வலசைப்பாதை என்பது, இரண்டு யானைகளின் வசிப்பிடங்களுக்கு இடைப்பட்ட, யானைகள் பயணிப்பதற்கான, 100 மீட்டர் முதல் 1 கிலோமீட்டர் வரை அகலமுள்ள பாதையாகும். இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான மத்திய அமைச்சகம், அதன் ‘கஜா'’, எனப்படும் வருடாந்திர அறிக்கையில், யானைகள் வலசைப்பாதை அல்லது வழித்தடங்களை பட்டியலிட்டுள்ளது. ஈஷா யோக மையம் இதில் எந்த யானை வழித்தடத்திலும் இல்லை. இந்திய விலங்கியல் அறக்கட்டளையின் ‘ரைட் ஆஃப் பாசேஜ்’ என்ற அறிக்கையில் யானை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள நிபுணத்துவமிக்க விஞ்ஞானிகள் தொகுத்துள்ள யானைகள் வழித்தடங்களின் பட்டியலில் ஈஷா யோக மையம் இடம்பெறவில்லை.

மேலும் விபரங்களுக்கு இங்கு வாசிக்கவும்.

மேலும் பார்க்க:

கட்டுக்கதை

112 அடி ஆதியோகி, ஈஷா அறக்கட்டளை தன்னைப் பற்றி தானே மார்தட்டிக்கொள்ளவும் மக்கள் கவனத்தை ஈர்க்கவும் நிறுவியுள்ள இன்னுமொரு சிலையே.

உண்மை

மனிதகுலம், தெளிவற்ற பிரிவினைவாத முறைகளிலிருந்து அறிவியல்பூர்வமான முறையில் அணுகுவதை நோக்கி உலகம் மாறுவதற்கான ஒரு அடையாளச் சின்னமாக, ஒரு உத்வேக சக்தியாக ஆதியோகி உலகிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கைகள், தத்துவங்கள், சித்தாந்தங்கள் ஆகியவை மனிதகுலத்தில் இடையறாது பிரிவினையையே ஏற்படுத்தியுள்ளது. போர் மற்றும் இனப்படுகொலைகளுக்கு வழிவகுத்துள்ளது. மனிதகுலத்தை மதத்திலிருந்து பொறுப்புணர்வு நோக்கி நகர்த்துவதற்கான இயக்கமிது.

வீடியோவை காணுங்கள்

கட்டுக்கதை

ஆதியோகி சிலையை நிறுவ, ஈஷா அறக்கட்டளை காடுகளை அழித்துள்ளது.

உண்மை

ஈஷா யோக மையத்தின் மற்ற நிலங்களைப் போலவே, ஆதியோகி சிலையும் தனியார் நிலத்தை முறைப்படி வாங்கியே நிறுவப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வன நிலங்கள் இந்த தனியார் நிலத்தின் அருகாமையில்கூட இல்லை. இதனை கூகுல் எர்த் புகைப்படங்களில் தெளிவாக காணமுடியும். மாவட்ட வன அதிகாரி, ஆதியோகி சிலையை நிறுவ ஆட்சேபனை இல்லை என்று தடையில்லா சான்றிதழையும் வழங்கியுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர், வனத்துறை மற்றும் பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 112 அடி ஆதியோகி சிலைக்கு, கட்டமைப்பின் உறுதிக்கான சான்றிதழையும் அரசு ஆங்கீகாரம் பெற்ற பொறியாளர் வழங்கியுள்ளார்.

ஆதியோகியின் திருவுருவத்தை அவமதிப்பதற்காக அரங்கேற்றப்பட்ட அவதூறுகளின் வலைப்பின்னல் குறித்த முழு உண்மையை இங்கே காணலாம்.

இயற்கையுடனான ஈஷாவின் ஈடுபாடு பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் பார்க்க:

கட்டுக்கதை

ஈஷா யோக மையத்தின் கட்டிடங்கள் யாவும் சட்டத்திற்கு புரம்பாக கட்டப்பட்டவை.

உண்மை

ஆரம்பத்தில், ஈஷா யோக மையம் கட்டிடங்கள் எழுப்ப திட்டமிட்டபோது, அப்போதைய முறைப்படி பஞ்சாயத்திடம் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்றோம். வனத்துறையைத் தவிர அனைத்து துறைகளிடமிருந்தும் தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டிருந்தது. எனினும் HACA ஒப்புதல் கைவசம் இல்லாமலேயே கட்டிடப் பணியை அப்போது துவங்கி நிறைவுசெய்தது உண்மைதான். தமிழ்நாடு வனத்துறையின் உயர்மட்ட செயற்குழு ஒன்று, தீயநோக்குடன் மேற்கூறிய அதிகாரி வெளியிட்ட பொய்யான அறிக்கையை நிராகரித்துள்ளது. பின்னர் வனத்துறை, தடையில்லா சான்றிதழை வழங்கியது. மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம், சென்னையில் நடத்திய 59வது சந்திப்பில், அனைத்து கட்டிடங்களுக்கும் தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கியுள்ளது. நகர்புற மற்றும் தேசிய திட்டமிடுதல் துறையிடம், கட்டமைப்பு மற்றும் வசதிகள் கட்டணங்களுக்குரிய தொகையையும் அறக்கட்டளை செலுத்தியுள்ளது. இப்போது கட்டிடங்கள் யாவும் முறையாக்கப்பட்டுள்ளன, ஈஷா யோக மையத்தில் இருக்கும் அனைத்து கட்டிடங்களும் முறையான அனுமதிகளுடன் எழும்பி நிற்கின்றன.

வீடியோவை காணுங்கள்

கட்டுக்கதை

ஆன்மீகத்தில் உள்ளவர்கள் அனைவரும் கடினமான வாழ்க்கைச்சூழலில் வாழவேண்டும், நாடோடிகளாக சந்நியாசிகளாக இருக்கவேண்டும், ஓலைக்குடிசையில் பழங்களை உண்டு மகிழ்வுடன் இருக்கவேண்டும். அவர்களுக்கு முறையான தங்குமிடமோ, கழிப்பறைகளோ, சாப்பிட இடமோ தேவையில்லை.

உண்மை

ஆன்மீக செயல்முறை என்பது, பலநூறு ஆண்டுகளாக அரசர்களாலும், தொழிலதிபர்களாலும், சமுதாயத்தின் தலைவர்களாலும் பேணி வளர்க்கப்பட்டு, முதன்மைப் பாரம்பரியமாக சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் வண்ணம் பரிமாறப்பட்டது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில், நம் தேசத்தை ஆக்கிரமித்த சக்திகளால் ஆன்மீகம் ஒடுக்கப்பட்டது, சமுதாயத்தின் ஒரு சிறு பிரிவினருக்கு மட்டுமே கிடைக்கும் விதமாக மாறிப்போனது. இதனால் காலப்போக்கில், ஆன்மீகப் பாதையில் நடப்பவர்கள் என்றாலே ஏதுமில்லாமல் வெறும் பழங்களையும் காய்ந்த இலைகளையும் சாப்பிட்டு, நாதியற்று காடுகளிலும், குகைகளிலும் தேசாந்திரியாக வாழவேண்டும் என்ற நம்பிக்கைக்கு வழிவகுத்தது. லட்சக்கணக்கான மக்களுக்கு, உள்நிலை யோக அறிவியலை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு, இந்த அவலமான எண்ணமே பெரும் தடையாக இருந்துள்ளது.

மலைமேல் இருக்கும் ஆன்மீகத்தை வீடுகளுக்கும் வீதிகளுக்கும் ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் கொண்டு சேர்ப்பதே சத்குரு அவர்களின் முயற்சி. ஆன்மீக செயல்முறையை முதன்மையானதாக மாற்றவேண்டும் என்றால், இன்று நாம் வாழும் காலத்திற்கேற்ப நாம் பணிசெய்து, தனிமனிதர்கள் இந்த ஆழமான அறிவியலை உள்வாங்க சரியான சூழ்நிலையையும் புரிதலையும் உருவாக்குவது அதிமுக்கியமானது. இன்று நாம் வாழும் காலகட்டத்தில், உலகியல் வாழ்க்கையை துறந்து வாழ காடுகளும் இல்லை, குகைகளும் இல்லை. அதைவிட முக்கியமாக, மனிதர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்து, தங்கள் உணவை காடுகளில் தாமே தேடி உயிர்பிழைத்து வாழும் திறனை இழந்துவிட்டனர். சற்றே அசௌகரியமான சூழ்நிலையிலும் வாழ சிரமப்படுகின்றனர்.

ஈஷா யோக மையத்தில், சத்தான உணவு, படுக்கை வசதிகள், சுத்தமான கழிப்பறைகள், மின்சாரம் என நாம் வழங்கக்கூடிய அடிப்படை வசதிகளை நீங்கள் நிச்சயம் பாராட்டுவீர்கள் என்று நம்புகிறோம்.

இதைப் பற்றி இங்கே மேலும் வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.

கட்டுக்கதை

2016ல் இரண்டு பிரம்மச்சாரிகள் தங்கள் விருப்பத்திற்கு மாறாக சிறை வைக்கப்பட்டனர்

உண்மை

இது முன்னுக்குப் பின் முரணான பொய்களின் கட்டுக்கதை. இது உள்நோக்கம் கொண்ட சில நபர்களால் சாட்டப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டு. இரு பெண்கள் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக ஈஷா யோக மையத்தால் கடத்தப்பட்டுள்ளனர் என்று இவர்களால் மனு தாக்கல் செய்யப்பட்டது. 2016 ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் நிகழ்ந்த இந்த அவதூறுப் பிரச்சாரத்தை அரங்கேற்ற, பொய்க்குற்றம் சாட்டியவர்கள் பல கோடி ரூபாய்களை செலவழித்தனர் என்று எம்முடன் தொடர்பிலிருந்த சில ஊடகவியலாளர்கள் கூறினர்.

திருமணம் செய்யவேண்டும் என்ற சமூக நிர்ப்பந்தங்களைத் தாண்டி, நன்கு படித்த, விவரமறிந்த இந்த இரு பெண்களும், தங்களது சுய விருப்பத்தினால், ஆன்மீகப் பாதையில் செல்லவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் ஈஷா யோக மையத்திற்கு வந்தனர். அவர்களுடன் பேசி இருக்கக்கூடிய எவரும், அவர்களது மனத்தெளிவு குறித்து கேள்வி எழுப்பக்கூட நாணுவார்கள். எனவே அவர்களை மீட்கக்கோரிய ஆட்கொணர்வு மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது இயற்கையானதே!

மேலும் விவரங்களுக்கு இங்கே வாசிக்கவும்.

கட்டுக்கதை

திருமதி. விஜயகுமாரி அவர்கள் இறந்தபோது, அவரது உடல் சப்தமில்லாமல் தகனம் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்தது

உண்மை

23 ஜனவரி 1997’ல் , விஜி அம்மா மஹாசமாதி அடைந்தார். கௌதம புத்தர் மஹாபரிநிர்வாணா என்று அழைத்த இந்த மஹாசமாதி, ஒவ்வொரு ஆன்மீக சாதகரும் அடைய விரும்பும் ஒரு கனவு. மஹாசமாதி என்றால், உயிர் செயல்முறையின் மீது ஆளுமை கொண்ட உன்னத யோகிகள், புனிதமான ஒரு காலத்தைத் தேர்வுசெய்து விழிப்புணர்வாக தங்கள் உடலை விட்டுப் பிரியும் வழக்கம். அவர் தேர்ந்தெடுத்த நேரத்தை, அவருடைய 7 வயது மகள் உட்பட அவருக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்த அனைவருக்கும் தெரியப்படுத்தி, சொன்ன நேரத்தில் சுயவிருப்பத்துடன், வெகு சுலபமாக உடலை விட்டுச் சென்றார். எட்டு மாதங்களுக்குப் பிறகு, சத்குருவின் பணியை தடுக்கவேண்டும் என்று தீவிரமாக செயல்பட்ட சிலர், விஜி அம்மாவின் மஹாசமாதியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல்துறையில் வழக்குத் தொடுத்தனர். சப்தமில்லாமல் உடலை தகனம் செய்துவிட்டனர் என்பதே அவர்களின் முக்கிய குற்றச்சாட்டாக இருந்தது. உண்மை என்னவென்றால், அவர் உயிர்பிரிந்த 12 மணி நேரத்திற்குப் பின், 2000 பேர் முன்னிலையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. வெட்கமில்லாமல் சாட்டப்பட்ட இந்த பொய் குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மையை வெளிக்கொணர, முழு விசாரணை செய்யச்சொல்லி காவல்துறை மற்றும் நீதித்துறையிடம் கேட்டுக்கொண்டோம். விசாரணையில் இந்த குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை என்பதை அவர்கள் உறுதிசெய்தனர். 8/1/1999ல் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவில் இந்த புகார் தள்ளுபடி செய்யப்பட்டது.

வீடியோவை காணுங்கள்

கட்டுக்கதை

மக்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள ‘Laughing Gas’ எனப்படும் நைட்ரஸ் ஆக்சைடை பயன்படுத்துகிறது

உண்மை

மனநிலை மேம்பாட்டிற்காக நாங்கள் பயன்படுத்துவது வேறொரு உத்தி. அதன் பெயர் யோகா.

கட்டுக்கதை

ஈஷா மக்களின் சிறுநீரகத்தை திருடுகிறது.

உண்மை

இந்த அபத்தமான குற்றச்சாட்டை சுமத்தும் மக்களுக்கு சிறுநீரகம் என்றால் என்ன என்றும், அது உடலில் எங்கு இருக்கிறது என்றும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம். அவர்களது மூளையை யாரோ திருடிவிட்டிருப்பார்கள் போல!

கட்டுக்கதை

ஈஷா, ஆயிரக்கணக்கான மக்களை கோமா நிலையில் வைத்துள்ளது

உண்மை

இது சம்பந்தமான உண்மையை புரிந்துகொள்ள, ஈஷா யோக மையத்திற்கு வருகைதந்து, இவ்விடத்தையும், இங்கு வாழும் மக்களின் உயிரோட்டமான நிலையையும் அனுபவித்து உணருமாறு உங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.