மெஸ்ஸியின் கண்களில் கால்பந்து …

சத்குரு:  நீங்கள் என்னை இங்கே பார்க்கும்போது, உங்களது மூளையில் 14 வெவ்வேறு புள்ளிகளில் தற்போது நீங்கள் என்னைப் பார்க்கிறீர்கள். இன்றைக்கு, நரம்பியலாளர்கள் இதுகுறித்து பெரிய அளவில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஒரு கால்பந்துக்குக்கூட 14 வித்தியாசமான காட்சிப்புள்ளிகள் உண்டு. விளையாடும்போது, அவர்கள் வழியில் வரும் பந்தை ஒரேவிதமாக, அனைவராலும் எதிர்பார்க்க முடியாமல் இருப்பது எதனால்? மற்ற அனைவரும் குளறுபடியாக இருப்பதைப்போல், லியோனல் மெஸ்ஸி தோன்றச் செய்வது ஏன்? அது என்னவென்றால், இந்த 14 வெவ்வேறு விஷயங்களும் ஒருங்கிணைந்து, முறையாக செயல்படுவதால், மற்றவர்கள் பார்க்கமுடியாத விஷயங்களை அவர் பார்க்கிறார்.
பார்ப்பது என்பது வெறுமனே ஒரு எளிய புகைப்படக்கருவியின் லென்ஸ் போன்றது அல்ல. நமது கண்ணின் திரையில் விழும் பிம்பம், 14 வெவ்வேறு பகுதிகளாக உடைக்கப்படுகிறது.

உங்களின் மூளையில், அந்த ஒருங்கிணைப்பில் சிறிது மாறுபட்டால், அதைச் சற்று தாமதமாக நீங்கள் பார்க்கிறீர்கள். 14 வெவ்வேறு புள்ளிகளையும் மெஸ்ஸியைப்போல் பார்ப்பதற்கு, நீங்கள் சற்று கூடுதலாக முயற்சிக்க வேண்டியுள்ளது. (ஒரு பங்கேற்பாளரைக் குறிப்பிட்டு) உங்களுக்கே தெரியும்! யாரோ ஒருவரால் பந்தை சரியான நேரத்தில் பார்க்கமுடியவில்லை என்று தினமும் உங்கள் விளையாட்டு வீரர்களிடம் நீங்கள் ஏமாற்றமடைகிறீர்கள், அல்லவா? ஒருவர் மட்டும் காந்தம் போல, பந்தை ஈர்ப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். அது அப்படி அல்ல, மற்றவர்கள் பார்ப்பதற்குச் சற்று முன்னதாக அவர் பந்தைப் பார்த்துவிடுகிறார், அப்படித்தானே?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஏனென்றால் மக்கள் எண்ணிக் கொண்டிருந்ததைப்போல், பார்ப்பது என்பது வெறுமனே ஒரு எளிய புகைப்படக்கருவியின் லென்ஸ் போன்றது அல்ல. நமது கண்ணின் திரையில் விழும் பிம்பம், 14 வெவ்வேறு பகுதிகளாக உடைக்கப்படுகிறது. அதனால் நீங்கள் நிறத்தை ஒரு புள்ளியில் பார்க்கிறீர்கள், வடிவத்தை மற்றொரு புள்ளியில் பார்க்கிறீர்கள், அதன் புறஅமைப்பை வேறொரு புள்ளியில் பார்க்கிறீர்கள். உங்களது மூளையில் ஒரே நேரத்தில், 14 வெவ்வேறு வடிவங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. நாம் ஒரு புள்ளி மீது ஒரு குண்டூசியை வைத்தால், சட்டென்று நிறம் மறைந்துவிடும். நீங்கள் வேறொரு புள்ளியில் அதை வைத்தால் அமைப்பு மறைந்துவிடும், மற்றொன்றில் வடிவம் மறைந்துவிடும்.

மெஸ்ஸி, Messi in Tamil

உயிர்த்தன்மையை ஆலோசிக்காமல் விடுவதால் நிகழும் குளறுபடி

ஆகவே, இது ஒரு சிக்கலான இயக்கவியல். இது முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றால், இதை இயக்கும் நபர் எல்லைகளைக் கடந்து இருக்கவேண்டும், இல்லையென்றால், அவர் எல்லைக்குட்பட்ட வழிகளில் இயக்குவார். நீங்கள் இங்கே அமர்ந்திருந்தால், உங்களுடைய 4 கை, கால்களும் அவற்றின்போக்கில் இயங்கிக்கொண்டிருந்தால், அது நகைப்புக்குரியதாக இருக்கும், இல்லையா?

தயவுசெய்து இதைக் கவனமாகப் பாருங்கள், தற்போது, இதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது, அதாவது தன்னுள்ளே வைத்துக்கொண்டு, சேவகம் செய்யவேண்டிய உயிர்த்தன்மையை ஆலோசிக்காமல், உங்களது உடலும், மனமும் அவைகளின்போக்கில் ஏதோ செய்துகொண்டுள்ளன. ஒன்றோடொன்று ஆலோசனைகூட இல்லாமல், அவைகள் தன்னிச்சையாகச் செய்கின்றன. நீங்கள் பயன்படுத்தவேண்டிய ஒரு கருவியானது, உங்களுக்கு சேவை செய்யாமல், தன்னிச்சையாக செய்துகொண்டிருக்கும்போது தான், அது குளறுபடியாக இருக்கிறது.

உடலளவிலான கட்டுப்பாட்டினால் உருவாகும் ஒளி உடல்

ஒருவர் குறிப்பிட்ட நிலையில் உடலளவிலான கட்டுப்பாட்டை அடைந்திருந்தார் என்றால், அதாவது, தினசரி வாழ்வில் நீங்கள் பார்க்கும் ஒரு தடகள வீரர் அல்லது விளையாட்டு வீரர்கூட, அவர்களது உடலின் மீது ஒரு குறிப்பிட்ட அளவு கட்டுப்பாடு கொண்டு இருப்பவர்களுக்கு ஒருவிதமான ஒளி உடல் (aura) மற்றும் அவர்களைக் குறித்த ஒரு குறிப்பிட்ட தன்மை இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அவர்கள் வேறெதுவும் அறியாதவர்களாக, முற்றிலும் அறியாமையில் இருக்கக்கூடும். அவர்கள் ஒரு தீய வாழ்க்கை வாழக்கூடும், ஆனால் அவரைக் குறித்து ஒருவிதமான ஒளி உடல் இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள், ஏனென்றால் அவரது உடல் மீது அவருக்கு ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாடு இருக்கிறது. இதனை நீங்கள் கவனித்துள்ளீர்களா? இதனை நீங்கள் காட்டு விலங்குகளிடத்தில் காண்பீர்கள். நீங்கள் ஒரு புலியைப் பார்த்தால், அதற்கான ஒரு ஒளி உடல் இருக்கிறது. அதனுடைய உடல் மீது அது கொண்டிருக்கும் ஒரு கட்டுப்பாட்டின் காரணத்தினாலேயே நீங்கள் அதன்மீது பிரமிப்படையாமல் இருக்கமுடியாது.

புலி, Tiger

நான் ஏன் இதைக் கூறுகிறேன் என்றால், வெறுமனே உடலளவில் கை, கால்களை அசைப்பதேகூட, நீங்கள் விரும்பும் அதேவிதத்தில் துல்லியமாக உங்களால் செய்யமுடிந்தால், சட்டென்று, ஒரு புதிய நிலையிலான அழகும், சுதந்திரமும் உங்கள் வாழ்க்கையில் ஏற்படுகிறது. இதுதான் பேச்சு, பாட்டிசைத்தல், நடனமாடுதலின் நேர்த்தியில் இருக்கிறது. அது என்னவென்றால், நீங்கள் விரும்புவதைப்போலவே, உங்களால் அதனைச் செய்யமுடிகிறது. நீங்கள் பேசும்பொழுது ஒரே உளறலாக இருந்தால், அது அழகாக இருக்காது. ராகத்தோடு இணைந்திருந்து உங்களால் பாடமுடியவில்லை என்றால், அது அழகாக இருக்காது. உங்கள் கை, கால்களை நீங்கள் விரும்பும் விதத்தில் அபிநயிக்க முடியவில்லை என்றால், அது அழகாக இருக்காது. நீங்கள் விரும்புவதைப்போலவே, இதை உங்களால் செய்ய முடிவதனாலேயே, சட்டென்று, அங்கே ஒரு புதிய நிலையிலான ஆற்றல், புதிய நிலையிலான நேர்த்தி மற்றும் அந்த உடல் குறித்த ஒரு வித்தியாசமான நிலையிலான ஒளி உடல் தோன்றுகிறது.