சத்குரு:

அடையாளத்தை அழிக்கும் ஆதிக்கம்

இந்தியா என்ற பெயர் நமக்கு கொடுக்கப்பட்ட ஒன்று - இது ஒரு ஆங்கிலப் பெயர். இது ஆதிக்கத்தை செலுத்தும் தொழில்நுட்பம். இதை நீங்கள் கவனிக்க வேண்டும், ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை இறக்குமதி செய்தபோது, அவர்கள் துறைமுகத்தில் செய்த முதல் விஷயம் அடிமைகளின் பெயரை மாற்றியது தான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

'பாரத்' என்று உச்சரித்துப் பாருங்கள், அது உங்களுக்குள் என்ன விதமான அதிர்வை ஏற்படுத்துகிறது என்று பாருங்கள். 'இந்தியா' என்று சொல்லிப் பாருங்கள், அது உங்களுக்குள் என்ன மாதிரியான அதிர்வை ஏற்படுத்துகிறது என்று பாருங்கள்.

உங்களை குக்கு, டோபோ, நோனோ, புப்போ என ஏதோ ஒரு பெயரை சொல்லி அழைப்பது எப்படி இருக்கும், அதுவே நான் உங்களை பத்மநாபன் என்று அழைக்கும்போது நீங்கள் இப்படி நிமிர்ந்து நிற்பீர்கள். ஆதிக்கம் செலுத்த முதலில் செய்ய வேண்டிய விஷயம், எந்த அர்த்தமும் இல்லாத ஒரு பெயரை வைப்பது. ஏனென்றால் மனிதன் என்பவன் நினைவுகள், வரலாறு மற்றும் கலாச்சாரத்திலிருந்து உருவானவன். கலாச்சாரப் பின்னணி இல்லாத ஒரு பெயர், எந்த முக்கியத்துவமும் இல்லாத ஒரு பெயர், உங்களுக்குள் பெருமிதத்தை ஏற்படுத்தாத ஒரு பெயர், அத்தகைய பெயரை நான் உங்களுக்கு கொடுப்பேன், ஏனென்றால் இதுதான் ஆதிக்கத்தை செலுத்தும் தொழில்நுட்பம். இந்நாட்டில், இரண்டு-மூன்று அல்லது ஒரு ஐந்து சதவீதம் மக்கள் ஆங்கிலம் பேசலாம், ஆனால் நாட்டிற்கு ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியா vs பாரத்

ஆங்கிலம் தெரியாத ஒருவருக்கு 'இந்தியா' என்பது எந்த அர்த்தத்தையும் தருவதில்லை. 'பாரத்' என்பதற்கு ஒரு சக்தி இருக்கிறது. ஏனென்றால் இதற்கு இரண்டு அம்சங்கள் உள்ளன. நாம் ஏதோ ஒன்றை உச்சரிக்கும் போது, அங்கு ஒரு ஒலி இருக்கிறது. அர்த்தம் என்பது வெறும் உளவியல் சார்ந்தது, நீங்கள் தான் அதன் அர்த்தத்தை உருவாக்குகிறீர்கள். இப்போது நான் ஏதோ ஒன்றை உச்சரிக்கிறேன், அது வெறும் ஒலிதான். உங்களுக்கு அந்த மொழி தெரியவில்லை என்றால், அது வெறும் ஒலி தான். அர்த்தம் என்பது உங்கள் மனதில் உருவாக்கப்படுவது. அர்த்தம் என்பது இரண்டாம் பட்சம்தான். ஒலியில் தான் அதன் முக்கியத்துவம் இருக்கிறது.

'பாரத்' என்று உச்சரித்துப் பாருங்கள், அது உங்களுக்குள் என்ன விதமான அதிர்வை ஏற்படுத்துகிறது என்று பாருங்கள். 'இந்தியா' என்று சொல்லிப் பாருங்கள், அது உங்களுக்குள் என்ன மாதிரியான அதிர்வை ஏற்படுத்துகிறது என்று பாருங்கள். இரண்டு நாட்களுக்கு இதை உங்கள் மந்திரமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் நீங்கள் "இந்தியா, இந்தியா, இந்தியா" என்று மட்டும் சொல்லுங்கள், இன்னொரு நாள் "பாரத், பாரத், பாரத்" என்று சொல்லுங்கள். அது உங்கள் உடலமைப்பில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று பாருங்கள், பிறகு நீங்களே முடிவு செய்யுங்கள். இது மிகுந்த கவனத்துடன், ஒலி மற்றும் வடிவத்தின் அறிவியல் பற்றிய ஆழமான புரிதலுடன் உருவாக்கப்பட்டது.

ஒலியில் ஒளிந்திருக்கும் உன்னதம்

ஒலி மற்றும் வடிவம் பற்றிய அறிவியல் என்று நான் கூறும்போது, ஒவ்வொரு ஒலிக்கும் அதனுடன் இணைக்கப்பட்ட ஒரு வடிவம் இருக்கிறது. நீங்கள் எந்த ஒரு ஒலியையும் ஆசிலோஸ்கோப்பிற்குள் செலுத்தினால், அது ஒரு குறிப்பிட்ட மாதிரியை நமக்கு தருகிறது, அதுதான் அதன் வடிவம். எனவே ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு வடிவம் இருக்கிறது. ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒரு ஒலி இருக்கிறது. எனவே எந்த வகையான ஒலிகள் மனித அமைப்பில் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அவற்றை நாம் மந்திரங்கள் என்று அழைத்தோம். 'பாரத்' என்பது ஒரு மந்திரம். 'பாரதம்' என்பது இன்னும் சிறந்தது, ஆனால் வடநாட்டில் அவர்கள் அதை ஏற்கமாட்டார்கள், அதனால் கடைசி வார்த்தையை துண்டிக்க வேண்டியிருக்கிறது. 'பாரத்' வலிமையானது.