logo
search

ஆனந்த அலை

Wave of Bliss

ஈஷா யோகா அனுபவத்தை ஆழமாக்கிட ஓர் இலவச ஆன்லைன் நிகழ்ச்சி

டிசம்பர் 4 - 8, 2024

ஆனந்த அலை என்றால் என்ன?

ஆனந்த அலை என்பது, உங்களுக்குள்ளும் உங்களைச் சுற்றிலும் மாற்றத்தை உருவாக்குவதற்கான யோகக் கருவிகளைப் பயன்படுத்தி, உங்கள் வாழ்க்கை அனுபவத்தை மேம்படுத்துவதற்கான ஓர் அற்புத வாய்ப்பாகும். ஈஷா யோகாவை நிறைவு செய்துள்ள தியான அன்பர்களுக்காக, ஒரு பிரத்யேக அர்ப்பணமாக இது வழங்கப்படுகிறது.

இது உங்கள் சாதனாவை தீவிரப்படுத்துவதற்கும் ஆழப்படுத்துவதற்கும், உங்களுக்கு துணைநிற்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏன் கலந்துகொள்ள வேண்டும்?

ஈஷா யோகாவின் கருவிகளை உங்களுக்குள் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான வழிகளை அறிந்திடுங்கள்

தினமும் சத்குருவின் குரலில் குறிப்புகளுடன், ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவைப் பயிற்சி செய்வதன் ஆனந்த அனுபவத்தைப் பெற்றிடுங்கள்

சத்குருவின் வழிகாட்டுதலுடன் தனித்துவமான & சக்திவாய்ந்த தியானங்களை அனுபவித்திடுங்கள்

ஈஷா யோக மையத்திலிருந்து ஒளிபரப்பப்படும் சக்திவாய்ந்த செயல்முறைகளில் பங்கேற்றிடுங்கள்

டிசம்பர் 2 அன்று பதிவு முடிவடைகிறது.

நிகழ்ச்சி கட்டமைப்பு

  • டிசம்பர் 4 - 8, 2024 வரை, 5 நாள் இலவச ஆன்லைன் நிகழ்ச்சி.

  • ஒரு நாளைக்கு 1 வகுப்பு, ஒவ்வொன்றும் 2 மணிநேரம்.

  • அனைத்து வகுப்புகளிலும் கலந்துகொள்வது சிறந்தது.

  • கீழேயுள்ள நேரங்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய முடியும்:

    • ஸ்லாட் 1: காலை 6:30 - காலை 8:30

    • ஸ்லாட் 2: மாலை 6:30 - இரவு 8:30

ஓரியண்டேஷன்

பங்கேற்பாளர்கள் ஆனந்த அலை நிகழ்ச்சிக்காக தங்களைத் தயார்ப்படுத்தும் ஓரியண்டேஷன் வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும். நிகழ்ச்சி நெருங்கும் வேளையில் வகுப்பு நடைபெறும்.

பங்கேற்பாளர் அனுபவங்கள்

ஆனந்த அலைக்கு முன்பு, தினமும் பயிற்சி செய்வதென்பது எனக்கு ஒரு போராட்டமாக இருந்தது. இந்நிகழ்ச்சி உடனடியாக புத்துணர்ச்சியூட்டியது. அப்போதிருந்து, பயிற்சி செய்யாமல் ஒரு நாள் கூட கடந்ததில்லை. என் உள்நிலை ஆனந்தமும் நானும் மலருகிறோம்.

- அப்துல் ரஹ்மான்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்களைத் தொடர்புகொள்ள

தங்களுக்கு ஏதேனும் வழிகாட்டுதல் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்:
tnk.regsupport@ishafoundation.org.