எது புனிதத்தலம்?
விதி என்பது 100% உங்களுடைய உருவாக்கம். நீங்கள் விழிப்புணர்வுடன் விதியை உருவாக்க முடியும். எந்த அளவிற்கு என்றால் நீங்கள் எப்படி வாழவேண்டும், எப்படி இறக்க வேண்டும் என்பதைக் கூட நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். எந்தக் கருவில் நீங்கள் பிறக்க வேண்டும் என்பதைக்கூட நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். அந்த அளவிற்கு விநியை உங்களுடைய கைகளில் நீங்கள் எடுக்க முடியும்.
ஒரு குரு என்பவர் இதமானவராக இருக்க வேண்டும் என்பது அ அவசியமில்லை. என்னைப் பாருங்கள் நான் அப்படியா இருக்கிறேன்? அவர் இதமான மளிதராக இருக்கத் தேவையில்லை. அவரது நோக்கம் உங்களுக்கு மிகவும் இளிமையானவராக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதல்ல. அவரது நோக்கம் உங்களை விழிப்புணர்வு அடையச் செய்வதுதான், உங்களை உறங்கச் செய்வது அல்ல.
'துறவு' என்று நாம் சொல்லும்போதும், 'ஆசிரமத்தில் வாழ்வது என்று நாம் சொல்லும்போதும் வாழ்க்கையில் இருந்து விலகிவிட்டீர்கள் என்று பொருள் அல்ல. வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அதே தீவிரத்தோடு அதே புனிதத்தன்மையோடு ஈடுபடக்கூடிய தகுதி உடையவர் என்றே பொருள்.