ரமணன்பல்லாண்டுகளாக இயங்கிவரும் எழுத்தாளார், பத்திரிகையாளார்.
அரசியல், சமூகம், வரலாறு எனப் பல விரிவான களங்களில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர். தமிழகத் தொழில் வெற்றியாளர்கள், மற்றும் தொழில் முனைவோருக்கானா நூல்கள், பயண நூல்கள், பிரமுகர்களின் வாழ்க்கைப் பயணங்கள் ஆகியவை வெளிவந்துள்ளன. இவரது ‘கடைசிக் கோடு' புத்தகத்திற்காக திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றவர். தேசிய வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர்.
மலர்ந்து கொண்டிருக்கும் அதிகாலைப் பொழுது. மஞ்சளும் சிகப்பும் கலந்து என்னவென்று சொல்லவியலாத குழம்பிய நிறத்தில் வானத்தை தீட்டியிருந்தான் உலகின் மிகச்சிறந்த ஓவியன். மிதந்து கொண்டிருக்கும் நமது படகைப் போல நேரம் மெல்ல நகர்கிறது. ஓரிடத்தில் படகு நிற்கிறது. மெல்ல பெரிய ஆரஞ்சு பந்தாக எழுந்து கொண்டிருக்கும் சூரியன் தன் சிவந்த கிரணங்களை கங்கையின் இளப்பச்சை நிறத்தின்மீது பரப்பி, புதிய வண்ணக்கலவையை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. ""ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற ஆதவனே போற்றி" என்ற கவியரசரின் வரிகள் மனதில் ஓடுகிறது. புனிதமான கங்கையின் நடுவிலிருந்து பரவசத்தோடு சூரியோதயத்தைப் பார்க்கிறோம்.