* உங்களையும் உங்கள் குழந்தையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், உண்மையில் யார் அதிக ஆனந்தமாக இருக்கிறார்கள். நிச்சயமாக உங்கள் குழந்தைதான். அப்படியானால் யாரைப் பார்த்து வாழ்க்கையை புரிந்துகொள்ளவேண்டும்? உங்களையா அல்லது உங்கள் குழந்தையையா?
* கல்வியென்பது ஒரு தகவலாக, ஒரு செய்தியாக செயல்படாமல், வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்குரிய தூண்டுதலாகவும், வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற தெளிவினை ஏற்படுத்துவதாகவும் இருக்கவேண்டும்.
* சமூகத்தில் தனக்கு விருப்பமானதை செய்துகொள்வதை சுதந்திரம் என்று கருதிக்கொள்கிறார்கள். உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்துகொள்வதெல்லாம் சுதந்திரமில்லை. விருப்பம் என்பதே மிக ஆழமான கட்டுப்பாட்டில் இருந்து வந்ததுதான்.