அமைதி குறித்த சத்குருவின் வாசகங்கள் (Peace Quotes in Tamil)

அமைதி ஒன்றும் வாழ்க்கையின் பரம லட்சியம் அல்ல, அது மிக மிக அடிப்படையான தேவை.

Peace Quotes in Tamil, அமைதி

உலகிலுள்ள சண்டை சச்சரவெல்லாம் மனித மனத்தின் வெளிப்பாடுதான். மனிதர்களின் மனத்தில் ஒரு சுகமான நிலையை கொண்டுவருவதன் மூலம், அமைதியின் ஆற்றலை உணர்ந்திடுவோம்.

Peace Quotes in Tamil, அமைதி

தனிமனிதர்கள் அமைதியானவர்களாக மாறினால்தான், உலகம் அமைதியானதாக இருக்கும்.

Peace Quotes in Tamil, அமைதி

நீங்கள் சந்தோஷமாகவும் அமைதியாகவும் இருக்கும் போதுதான், உடலும் மனமும் சிறந்த நிலையில் இயங்கி, அதன் திறன்கள் முழுமையாக வெளிப்படும்.

Peace Quotes in Tamil, அமைதி

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நாமெல்லாம் நம் மனத்தை அமைதியாக வைத்துக்கொள்ளாவிட்டால், உலகம் எப்படி அமைதியாக இருக்கமுடியும்? உலகிலுள்ள சண்டை சச்சரவுகள் அனைத்தும் மனிதர்களின் மனத்திலிருந்து வெளிப்படுவதுதான்.

Peace Quotes in Tamil, அமைதி

பிரபஞ்சத்தின் அடிப்படையாக இருப்பது அமைதிதான். அதை உருவாக்க முடியாது. அளவுக்கு அதிகமான தலையீடுகளை தவிர்த்தால், அமைதி என்பது இயல்பாகவே நிலவும்.

Peace Quotes in Tamil, அமைதி

தனிமனிதர்களின் உள்நிலை மாற்றத்திற்காக நாம் வேலை செய்யவில்லை என்றால், உலக அமைதி பற்றி பேசுவது என்பது வெறும் பொழுதுபோக்குதான்.

Peace Quotes in Tamil, அமைதி

அமைதியை வெளியிலிருந்து வலியுறுத்தி நடைமுறைப்படுத்த முடியாது. நமக்குள் நாம் எந்த விதத்தில் இருக்கிறோம் என்பதன் விளைவுதான் அமைதி.

Peace Quotes in Tamil, அமைதி

இயற்கை வளங்கள் குறிப்பிட்ட அளவு மட்டுமே இருக்கும் இந்த பூமியில், நம் அனைவரின் வாழ்வையும் தீர்மானிப்பது பொருளாதார சக்திகள்தான் என்றாகிவிட்டால், சண்டைகளை தவிர்க்க முடியாது; அமைதி என்பது வெறும் கனவாகத்தான் இருக்கும்.

Peace Quotes in Tamil, அமைதி

வாழ்க்கை என்பது அமைதி பற்றியது அல்ல. அதேசமயம், அமைதியை உணராவிட்டால், வாழ்க்கையை ஒருபோதும் உணரமாட்டீர்கள்.

Peace Quotes in Tamil, அமைதி

தொடர்புடைய பதிவுகள்:

உள்ளத்தில் அமைதியை மீட்க என்ன வழி?

பதற்றம், பயம், அமைதியின்மை என்பது வாடிக்கையாகிவிட்டால், அதன்பின் மருந்துகளும் மாத்திரைகளுமே துணையாகிவிடும்! ஒருவருக்கு அமைதியும் ஆனந்தமும் தனது இயல்பாகவே மாறுவதற்கு யோகா வழங்கும் விஞ்ஞான சாத்தியங்களை அறிவிக்கிறது இந்த பதிவு!

வீட்டிலும், ஆபீஸிலும் எப்படி அமைதியை உருவாக்குவது?

"ஆசிரமத்தில் கிடைக்கும் அமைதியை வீட்டில் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லையே, வீட்டிலும், ஆபீஸிலும் அமைதியை உருவாக்குவது எப்படி?" என்று ஒருவர் கேட்க, அதற்கு சத்குருவின் பதில்...