Pain Quotes in Tamil: வலி பற்றிய சத்குருவின் வாசகங்கள்
வலி இருந்தால் துன்பத்தை அனுபவித்தே ஆக வேண்டுமா? அல்லது உடலில் வலி இருந்தாலும் மனதில் துன்பத்தை அனுபவிக்காமல் இருக்க முடியுமா? வலி பற்றிய சத்குருவின் வாசகங்கள் இந்தப் பதிவில்...

வலி குறித்த சத்குருவின் வாசகங்கள் (Pain Quotes in Tamil)
ஒரு மரத்தின் வலி, ஒரு விலங்கின் வலி, ஒரு மலையின் வலி இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தின் வலியையும் உங்கள் உடலின் வலிபோல் நீங்கள் உணர்ந்தால், இவ்வுலகிலுள்ள அனைத்தையும் நீங்கள் நலமாய் பார்த்துக் கொள்வீர்கள்.

அன்பு என்பது சந்தோஷமானது இல்லை; அது மிக ஆழமான, அற்புதமான வலி. உங்களுக்குள் அனைத்தும் கிழிந்திட வேண்டும், அப்போதுதான் அன்பென்றால் என்னவென்று உணர்வீர்கள்.

மக்களிடமிருந்து சந்தோஷத்தை பிழிந்தெடுக்க முயன்றால், வலியே மிஞ்சும்.

வலி என்பது உடலின் சுய-பாதுகாப்புக்கான நுட்பமாக நல்ல விஷயம்தான். ஆனால் வேதனை என்பது உங்கள் மனதில் நீங்கள் உருவாக்குவது.

வாழ்ந்து பெற்ற அனுபவங்களால் அறுவடை செய்ய விரும்புவது விவேகமா அல்லது துன்பங்களையா என்பதை நீங்களே தேர்ந்தெடுத்துத் தீர்மானிக்கலாம்.

Subscribe
மகிழ்ச்சியோ துயரமோ, வலியோ இன்பமோ, வேதனையோ பரவசமோ, அடிப்படையில் அது உங்களுக்குள் இருந்தே நிகழ்கிறது.

வெளி சூழ்நிலைகள் உங்களுக்கு உடல் சார்ந்த வலியை ஏற்படுத்தலாம், ஆனால் துயரம் உங்கள் மனத்தின் உருவாக்கமே.

மனதளவில் எவராலும் உங்களுக்கு வலி ஏற்படுத்த முடியாது. நீங்கள்தான் உங்களைச் சுற்றி நிகழும் ஏதோவொன்றிற்கு எதிர்செயலாக வலியை உருவாக்குகிறீர்கள்.

அறியாமையின் வலிதான், வாழ்க்கையை அறிந்து கொள்ள, உண்மையில் மனிதர்களைத் தூண்டுகிறது. இல்லாவிட்டால் அவர்கள் தங்களது பிழைப்புக்குத் தேவையானவற்றை மட்டும் அறிந்து கொள்ள முயல்வார்கள்.

வலி, துயரம், அல்லது கோபம் வந்தால், அது உங்களுக்குள் பார்ப்பதற்கான நேரம், உங்களைச் சுற்றி அல்ல.

நீங்கள் குருவைத் தேடிச் செல்ல வேண்டாம். அறியாமையின் வலி உங்களை வாட்டும்போது, குரு உங்களைத் தேடி வருவார்.

ஞானோதயம் என்றால் உங்களுக்கு எதுவும் மறுக்கப்படுவதல்ல. வலி, இன்பம், எல்லாமே சாத்தியம்தான் - ஆனால் அனைத்தும் நீங்கள் விருப்பப்படி தேர்வுசெய்வதாக இருக்கும்.

தொடர்புடைய பதிவுகள்:
கவலை, துன்பம் நீங்க வழிசெய்யும் சத்குருவின் வாசகங்கள்!
கவலை, துன்பம் ஆகியவற்றை உங்கள் வாழ்விலிருந்து களைந்திட வழிசெய்யும் சத்குருவின் வாசகங்கள் இங்கே...
துன்பம் வந்தால் பிரார்த்தனை அவசியமா?
பலர் துன்பம் வரும் போது கடவுளிடம் அதிகமாகப் பிரார்த்தனை செய்வது உண்டு. இது அவசியமா?

