கவலை, துன்பம் பற்றிய சத்குருவின் வாசகங்கள்! (Sad Quotes in Tamil)

உங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் நிகழ்காலத்தில் நல்லவிதமாக செயல்பட்டால் உங்கள் வருங்காலம் தன்னால் மலரும்.

எதிர்காலம், வருங்காலம்

இறந்தகாலமும் எதிர்காலமும் உங்களுக்கு வேதனை ஏற்படுத்த முடியாது, ஏனென்றால் அவ்விரண்டும் இப்போது இல்லை. நீங்கள் வேதனைப்படுவது உங்கள் நினைவுகளாலும் கற்பனைகளாலும் தான்.

ஞாபகம் மற்றும் கற்பனை, Memory and Imagination

ஒரு மரத்தின் வலி, ஒரு விலங்கின் வலி, ஒரு மலையின் வலி இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தின் வலியையும் உங்கள் உடலின் வலிபோல் நீங்கள் உணர்ந்தால், இவ்வுலகிலுள்ள அனைத்தையும் நீங்கள் நலமாய் பார்த்துக் கொள்வீர்கள்.

Pain, வலி

நீங்கள் செய்ய விரும்பும் விஷயத்திற்கு எல்லோருடைய சம்மதத்தையும் ஒருபோதும் பெறமுடியாது. அதனால் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.

Sadhguru quotes

நான் வளர்கிறேனா அல்லது வாடுகிறேனா என்ற கவலை உங்களுக்கு தேவையில்லை. ஆனால் நீங்கள் ஆனந்தமாக வளர்ந்து வாழ்கிறீர்களா அல்லது துன்பத்தில் தளர்ந்து தடுமாறுகிறீர்களா என்பதைப் பற்றிய நிலையை நினைவு கூறுங்கள்.

ஆனந்தம், துன்பம்

ஒவ்வொருவரிடமும் நீங்கள் நல்லிணக்கமாக இருந்தால், அது உங்களுக்கு பல வழிகளில் திரும்ப வரும். ஆனால் அது திரும்ப வருகிறதா, இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்

நல்லிணக்கம்

கடைசி கணம் வரை நீங்கள் ஆனந்தமாய் வாழ்ந்தால், மரணத்தைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. அதுவும் ஆனந்தமானதாகவே அமையும்.

ஆனந்தம், Bliss

வலி இயற்கையானது; துன்பம் நீங்கள் உருவாக்கிக் கொள்வது.

வலி மற்றும் துன்பம், Pain and Suffering

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எனக்கு துன்பம் நேருமோ எனும் அச்சத்திலிருந்து விடுபடும்போது, வாழ்வை முழுமையாக அறிந்துகொள்ளும் ஆவல் உங்களுக்குள் இயல்பாகவே எழும்.

Sad Quotes in Tamil, துன்பம்

நீங்கள் இரு வழிகளில் விரிவடைய முடியும் - ஒன்று அடக்குமுறை, மற்றொன்று அரவணைத்தல். ஒன்று துன்பம் தரும், மற்றொன்று இன்பம் தரும்.

அடக்குமுறை, அரவணைத்தல்

மக்களிடமிருந்து சந்தோஷத்தை பிழிந்தெடுக்க முயன்றால், வலியே மிஞ்சும்.

depressed sad quotes in tamil

மனதளவில் எவராலும் உங்களுக்கு வலி ஏற்படுத்த முடியாது. நீங்கள்தான் உங்களைச் சுற்றி நிகழும் ஏதோவொன்றிற்கு எதிர்செயலாக வலியை உருவாக்குகிறீர்கள்.

வலி, துயரம், அல்லது கோபம் வந்தால், அது உங்களுக்குள் பார்ப்பதற்கான நேரம், உங்களைச் சுற்றி அல்ல.

வலி, துயரம், கோபம்

யாரோ ஒருவர் வலியில் இருக்கும்போது உங்களுக்கு துளியும் வலிக்கவில்லை என்றால், உங்கள் மனிதத்தன்மையை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

மனிதத்தன்மை, Humanity

வாழ்க்கையை அதன் ஓட்டத்தில் விட்டால், வாழ்க்கை அழகானதாக இருக்கும், அதனை பிடித்து வைத்தால் வேதனையில் முடியும். இதுவே உயிரின் சுபாவம்.

Sad Quotes in Tamil

இன்னொருவரின் வேதனை வழியாக எவரும் நல்வாழ்வை அடையமுடியாது. தற்காலிகமான பலன் இருந்தாலும், அதற்கான விலையைத் தருவீர்கள்.

நல்வாழ்வு

உங்களுக்கும் உங்கள் உடலிற்கும், உங்களுக்கும் உங்கள் மனதிற்கும் இடையே இடைவெளி உருவாக்கிவிட்டால், அதுவே வேதனையின் முடிவு.

உடல், மனம்

உலகின் ஒரு சதவிகித மக்கள் உறுதியுடன் எழுந்து நின்றாலும்கூட போதும், உலகின் பொருள்நிலையிலான வேதனையை முற்றிலுமாக நம்மால் துடைத்துவிட முடியும்.

Sad Quotes in Tamil

விருப்பத்துடன் நீங்கள் செய்யும் எதையும் ரசிக்கிறீர்கள். விருப்பமின்றி நீங்கள் செய்யும் எதையும் வேதனையாக உணர்கிறீர்கள்.

Willingness, விருப்பம்

சந்தோஷம் இயல்பானது, துயரம் உங்கள் படைப்பு.

சந்தோஷம், துயரம், Sad Quotes in Tamil

வெளி சூழ்நிலைகள் உங்களுக்கு உடல் சார்ந்த வலியை ஏற்படுத்தலாம், ஆனால் துயரம் உங்கள் மனத்தின் உருவாக்கமே.

வலி மற்றும் துன்பம், Pain and Suffering, depressed sad quotes in tamil

பஞ்சபூதங்கள் உங்களுக்குள் செயல்படும் விதத்தைப் பொருத்தே உடல்நலம்-உடல்நலக்கேடு, அமைதி-குழப்பம், சந்தோஷம்-துயரம் போன்றவை நிகழும்.

பஞ்சபூதங்கள், Five Elements

பயம், கோபம், வருத்தம், மன அழுத்தம் ஆகியவை உங்கள் மனதில் நீங்கள் உருவாக்கும் விஷங்கள். உங்கள் மனதை உங்கள் ஆளுமையில் எடுத்து வந்தால், பேரானந்தத்தை நீங்கள் உருவாக்க முடியும்.

பயம், கோபம், வருத்தம், மன அழுத்தம்

நீங்கள் குருவைத் தேடிச் செல்ல வேண்டாம். அறியாமையின் வலி உங்களை வாட்டும்போது, குரு உங்களைத் தேடி வருவார்.

 குரு, Guru