திறந்த மனதுடன் இருப்பது சாத்தியமா? (open-minded meaning in Tamil)
திறந்த மனதுடன் இருப்பது குறித்த கருத்துகளையும் சொல்லாடல்களையும் நிறைய கேட்கிறோம். உண்மையில் மனம் என்பது என்ன, அதை திறந்து வைக்க முடியுமா போன்ற கேள்விகளுக்கு விடை கூறும் சத்குரு, மனதிற்கும் பஞ்சபூதங்களுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிக் கூறி, மனதின் சூட்சும அம்சங்களை எடுத்துரைக்கிறார்.

கேள்வி: மனம் திறந்த நிலையில் இருப்பது என்றால் என்ன? (open-minded meaning in Tamil)
சத்குரு:Mind என்பது எப்போதுமே ஓப்பனாக இல்லை, அது எப்போதுமே closed தான். நாம் அவரைப் பார்த்து அவர் closed நாம் open என்று நினைத்துக் கொள்கிறோம். அவர் நம்மைப் பார்த்து நாம் open அவர் closed என்று நினைத்துக்கொள்கிறார். Open mind என்று ஒன்றும் இல்லை.
Subscribe
மனம் செயல்படும் விதம்...
எதற்காக நான் சொல்கிறேன் என்றால், எதற்கு நாம் மனம் என்று சொல்கிறோம், இது நம் அடையாளத்தைப் பொறுத்துதான் செயல்படுகிறது. நமக்கு எதோடு அடையாளம் இருக்கிறதோ அதை சுற்றி தான் நடக்கிறது.
இப்போது நம் தேசத்தோடு நமக்கு அடையாளம் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதை சுற்றி தான் நடக்கிறது. இல்லை, நம் மதத்தோடு அடையாளம் என்று வைத்துக்கொள்ளுங்கள், அது சுற்றி தான் நடக்கிறது. இல்லை, நம் ஜாதியோடு அடையாளமா, அது கூட நடக்கிறது. இல்லை, நம் உடலோடு அடையாளம் என்றால் அதை சுற்றி நடக்கிறது. நமக்கு எதோடு அடையாளம் இருக்கிறதோ அதை சுற்றி தான் நம் மனம் நடக்க முடியும், வேறு எப்படியும் நடக்காது. எதற்கென்றால், நமக்கு இந்த மனம் என்பது இருக்கிறது, அது நம் பிழைப்பிற்காக. மனம் என்பதை நாம் பலவிதமாக அடக்கி வைத்திருக்கிறோம். ஆனால் சாதாரணமாக ஆங்கிலத்தில் mind என்று சொன்னால் எல்லாமே சேர்ந்து mind ஆகிவிட்டது. இதற்கு நாம் புத்தி, அகங்காரம், இது அது என்று பலவிதமாக பிரித்து வைத்திருக்கிறோம். முக்கியமாக மனத்து செயல் எல்லாமே நம் அடையாளத்தை சுற்றித்தான் நடக்கிறது.
பஞ்சபூதங்களுடன் மனதின் தொடர்பு
மனம் என்பது நமக்கு மட்டும் இருக்கிற விஷயம் இல்லை. இப்போது மண் எடுத்து தான் இந்த உடல் உருவாக்கினோம். இந்த உடலில் இவ்வளவு புத்தி, இந்த மூளை கூட மண் தானே? பள்ளியில் எல்லாம் சொல்கிறார்களா?
பங்கேற்பாளர்: களிமண் என்று சொல்வார்கள்.
சத்குரு: இல்லை, ஆசிரியருக்கு அந்த மண் எவ்வளவு மதிப்பானது என்று தெரியவில்லை. மண் எடுத்துதான் உடல் செய்தோம். மண் எடுத்துதான் மூளையும் செய்தோம். அப்படியென்றால், மண்ணிலேயே அந்த அளவிற்கு புத்திசாலித்தனம் இருக்கிறதா, இல்லையா? எப்போதாவது இதுபோல ஆகிவிட்டதா? எங்கேயாவது மண்ணில் போய் வேப்ப விதை வைத்தீர்கள், மறந்து போய் மாம்பழம் வந்துவிட்டதா? இப்படி ஏதாவது ஆகிவிட்டதா? எப்போதுமே அப்படி நடக்கவில்லையே. மண் புத்திசாலியாகத் தானே இருக்கிறது? காற்று புத்திசாலியாகத் தானே இருக்க வேண்டும்? உள்ளே போய் என்ன செய்ய வேண்டுமோ செய்துதானே வந்திருக்கிறது? இது, இப்போது நவீன விஞ்ஞானத்தில் நிறைய சோதனை நடந்திருக்கிறது இது பற்றி.
எப்படி தண்ணீர் என்பதற்கு, மண் என்பதற்கு எவ்வளவு ஞாபக சக்தி இருக்கிறது என்று இப்போது பெரிய ஆராய்ச்சி நடக்கிறது. இது முதலில் இருந்தே தெரிந்த விஷயம் நமக்கு நம் நாட்டில்.
யோகத்தில் இது அடிப்படையானது. நாம் நடக்கிற மண், குடிக்கும் நீர், சுவாசிக்கிற காற்று எல்லாவற்றிலும் ஒரு ஞாபக சக்தி இருக்கிறது. அதோடு நாம் எப்படி நடக்கிறோம், அது நம்மோடு அப்படி நடந்துகொள்கிறது என்பது புரிந்து தான் நாம்... யோகத்தில் ஒரு பெரிய விஞ்ஞானம், இதற்கு பூதசுத்தி என்று சொல்வோம். மண்ணோடு எப்படி நடந்துகொள்ள வேண்டும், காற்றோடு எப்படி நடந்துகொள்ள வேண்டும், தண்ணீரோடு எப்படி நடந்துகொள்ள வேண்டும்? எதற்கென்றால், இது எல்லாமே அதேதானே! இதில் 72 சதவீதம் தண்ணீர் தானே இருக்கிறது. 12 சதவீதம் மண், ஆறு சதவீதம் காற்று, நான்கு சதவீதம் நெருப்பு, இன்னும் மற்றது ஆகாயம். இதை நாம் எப்படி வைத்துக்கொள்கிறோமோ அப்படித்தான் இந்த மனித உடல். இதே பொருள் இங்கேயும் இருக்கிறது, இங்கேயும் இருக்கிறது, அங்கேயும் இருக்கிறது, பலவிதமாக உட்கார்ந்து இருக்கிறது. இதை நாம் உணர்வுபூர்வமாக உணர்ந்துவிட்டால், மனப்பூர்வமாக இல்லை, உணர்வுபூர்வமாக நாம் எப்போது உணர்ந்தோமோ, அப்போது இதற்கு யோகா என்று சொல்வோம். ஏனென்றால், எல்லாம் ஒன்றி ஆகிவிட்டது.
யோகாவும் மன உடலும்
யோகா என்றால் தலைகீழாக நிற்பது இல்லை, எல்லாமே நம் அனுபவத்தில் இணைந்துவிட்டது. பிரிந்தது எதற்கு? நாம் அடையாளம் எடுத்ததால் பிரிந்து இருக்கிறது. இது பிழைப்பிற்காக பிரிந்து இருக்கிறது, அவ்வளவுதான். ஆனால் இப்போது கூட நாம் இங்கே உயிரோடு இருக்க வேண்டும் என்றால், இங்கே வெளியே இருக்கிற காற்று உள்ளே எடுத்தால் தானே. நானே தனி என்று இப்படி மூக்கை பிடித்தால் வாழமுடியுமா? ஆனால், இப்போது மனதில் மட்டும் தான் நாம் அதுபோன்ற நிலையில் இருக்கிறோம். மனம் என்பது நம் மூளையில் மட்டும் இல்லை. ஒரு ஒரு அணுவிலேயும் மனம் இருக்கிறது. இதனால் இதற்கு நாம் மனோமய கோஷம் என்று சொல்வோம் யோகத்தில். ஒரு மனம் என்பது முழு உடலாக இருக்கிறது. உடல் மட்டும் இல்லை. முழு பிரபஞ்சமாகவே இருக்கிறது. இந்த பிரபஞ்சமே உயிரோட்டமாக இருக்கும் ஒரு மனமாக இருக்கிறது, புத்திசாலித்தனமாக இருக்கிறது. இதில் நாம் போய் அடையாளம் எடுத்தால், அங்கே ஒரு சுழற்சி ஏற்படுகிறது. எப்போது ஒரு சுழற்சி ஏற்படுகிறதோ, அதே ஒரு தனிப்பட்ட தன்மை என்று அது நினைத்துக்கொள்கிறது.