சத்குரு:

வணக்கம்.

“துன்பமில்லாத நிலையே சக்தி,
தூக்கமில்லா கண் விழிப்பே சக்தி,
அன்பு கனிந்த கனிவே சக்தி”

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பாரதி யோகி தானே!

ஏதோ ஒரு யோகத்தின் அம்சம் உங்கள் உணர்வில், உங்கள் அனுபவத்தில் வந்தால்தானே இந்த பேச்சு வெளியே வருகிறது. யோகா என்றால் இவ்வளவுதான். எது நாம் கனவு என்று நினைக்கிறோம், அதை உண்மையாக்கிக் கொள்கிறோம். எது உண்மை என்று நினைத்துக்கொள்கிறோம், அதை கனவாக பார்க்கிறோம். எது தூக்கம் என்று நினைக்கிறீர்கள், அதில் விழிப்பாக இருக்கிறோம். எது விழிப்பு என்று நினைக்கிறீர்கள், அதில் தூங்கியதுபோல இருக்கிறது உடல். இது யோகா.

இந்த ஒரு அனுபவம் ஏதோ ஒரு நிலையில் மனிதனுக்கு தொட்டால்தான், இதுபோன்ற தன்மை வெளிப்படுகிறது.

போற்றிக் கொண்டாடப்பட வேண்டிய மகாகவி பாரதியார்!

மகாகவிக்கு இந்த நூற்றாண்டிற்குப் பிறகு அவருக்கு கட்டாயமாக நம் தமிழ் மாநிலத்தில் தேவையான கௌரவம் கிடைக்கவேண்டும். திரும்ப அவருடைய கவிதையை நம் தமிழ் மக்கள் பாடவேண்டும். எல்லா இடத்திலும், எல்லார் காதிலும் கேட்க வேண்டும், இது மிக முக்கியமானது. எதற்கென்றால், யோகா என்பது ஒரு பயிற்சி இல்லை, ஒரு உள் அனுபவம். இந்த அனுபவம் எல்லா மனிதனுக்கும் சேர்ந்தது. ஒரு மனிதன் எந்த செயலில் இருந்தாலும், எதுபோன்ற செயல் இருந்தாலும் சரி, முழு ஈடுபாடாக, நான் என்கிற தன்மையை கரைத்துவிடுவானோ, அப்போது அதில் யோகா என்கிற ஒரு அனுபவம் இருக்கிறது. என்னவென்றால், இரண்டாக இருப்பது, ஒன்றாக தெரிகிறது நம் அனுபவத்தில். இதுதான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. ஒரு நன்மைக்கு அடிப்படை. ஒரு முன்னேற்றத்திற்கு அடிப்படை. எல்லாவற்றிற்கும் முக்கியமாக ஒரு மனிதனுடைய முக்திக்கு அடிப்படை.

Photo Credit: Bharathiyar image from Wikimedia.