எதிர்மறை மனிதர்கள், கடினமான உறவுகள் - கையாள்வது எப்படி? (Toxic Relationship Meaning in Tamil)
நம் அன்றாட வாழ்வில் தொடர்ந்து மனதைப் புண்படுத்தும் விதமான உறவுகளை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இப்படிப்பட்ட உறவுகளை எப்படிச் சமாளிப்பது? சத்குரு விளக்குகிறார்.

எதிர்மறை மனிதர்கள் - எதுவரை உறவைத் தொடர்வது?
இப்போது இந்த 'நெகடிவ் எனர்ஜி', இது போன்ற விஷயங்களை விட்டுவிடுங்கள். இந்த அபத்தமான விஷயங்களுக்குள் போக வேண்டாம். யாரோ ஒருவர் அவர்கள் மனநிலையில் 'நெகடிவ்' ஆக இருக்கிறார். வாய்ப்பு இருந்தால், அவர்களை அணுகாமல் இருங்கள். ஆனால் அவர் உங்கள் கணவராகவோ அல்லது மனைவியாகவோ இருந்தால், உங்கள் குழந்தையாகவோ அல்லது உங்களால் தவிர்க்க முடியாத ஒருவராகவோ இருந்தால், அவர்களை மாற்ற முடியுமா என்று பார்க்கலாம்.
Subscribe
உங்களால் மாற்ற முடியவில்லை என்றால், அவர்களை என்னிடம் கொடுத்துவிடுங்கள். எதுவுமே வேலை செய்யவில்லை என்றால், உங்களை அவர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள் - அவ்வளவுதான். வேறு வழி இல்லை. எப்படி பாதுகாத்துக்கொள்வது? உடல்ரீதியாக துன்புறுத்தினால் தவிர, அவர்கள் என்ன செய்தாலும் அதற்கு பதில் செயல் செய்ய வேண்டாம். உடல்ரீதியாக துன்புறுத்தினால், விலகிவிடுங்கள். உறவைத் தொடர்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுப்பதை நிறுத்துங்கள்
வெளியே, உங்களைச் சுற்றி பரவலாக மரங்கள் இருந்தால், பூச்சிகள் இரவு முழுவதும் கத்திக்கொண்டிருக்கும். அவை என்ன சொல்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வீர்களா? அவை உங்களைச் சபித்துக்கொண்டிருக்கலாம். அதையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்ள முயற்சிக்க மாட்டீர்கள், இல்லையா?
நூற்றுக்கணக்கான பூச்சிகள் இரவு முழுவதும் கத்திக்கொண்டிருக்கின்றன. அவை என்ன சொல்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்க மாட்டீர்கள், இல்லையா? நீங்கள் வெறுமனே கேட்டுக்கொண்டிருப்பீர்கள். அந்த சத்தத்திற்குப் பழகிப் போனதால், அதை புறக்கணிப்பீர்கள். அதையே இங்கேயும் செய்யுங்கள். அவர்கள் நிறைய முட்டாள்தனமான விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வார்த்தைகளுக்கு ஏன் அர்த்தம் கொடுக்கிறீர்கள்? அவர்கள் சத்தம் மட்டுமே போடுகிறார்கள், இல்லையா? அப்படித்தானே? சிறிது நேரத்திற்கு அவர்கள் பேசுவதை புரிந்துகொள்ள முயற்சி செய்யாதீர்கள். அர்த்தமற்ற ஏதோ ஒன்றை செய்கிறார்கள்.
தெரியுமா, ஒருவர் உளறிக்கொண்டிருந்தால், அது பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் நன்றாகவும் இருக்கும், அது பரவாயில்லை. இந்த நபருக்காக நீங்கள் செய்யமுடிந்த அனைத்தையும் செய்துவிட்டீர்கள். இனி எதுவும் செய்ய முடியாது, இருந்தாலும் சமூக, பொருளாதார மற்றும் பிற காரணங்களுக்காக, நீங்கள் அவர்களுடன் சிக்கி இருக்கிறீர்கள்.
அப்படி இருந்தால், அவர்கள் பேசும்பொழுது சத்தத்தை மட்டும் கேளுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு எந்த அர்த்தமும் கொடுக்க வேண்டாம், ஏனென்றால் பெரும்பாலான மக்களுக்கு தாங்கள் என்ன பேசுகிறோம் என்றே தெரியாது, இல்லையா? அப்படித்தானே? தாங்கள் என்ன பேசுகிறோம் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தால், அர்த்தமுள்ளதாகப் பேசியிருப்பார்கள்.
என்ன பேசுகிறோம் என்று தெரியாததால் அர்த்தமில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், அவர்களை அப்படியே விட்டு விடுங்கள். அவர்களை மாற்ற முயற்சி செய்வதே சிறந்த விஷயமாக இருக்கும் - இதை உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்குச் செய்வது உங்கள் கடமை. உங்களால் முடியவில்லை என்றால், அவர்களை என்னிடம் ஒப்படைக்க முயற்சி செய்யுங்கள். அது முடியவில்லை என்றால், அவர்களுடன் இருக்க விரும்பவில்லை என்றால், விலகிச் செல்ல முயற்சி செய்யுங்கள்.
உடல்ரீதியாக துன்புறுத்தினால்...
உங்களால் முடியவில்லை என்றால், அவர்களை பூச்சிகளைப் போல நடத்துங்கள், கருணையுடன், ஆனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் அல்லது எந்தவித முக்கியத்துவமும் கொடுக்காமல் இருங்கள் - அவ்வளவுதான். அவர்கள் உங்களைக் கடிக்க வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும், இல்லையா? தெரியும் தானே? பூச்சி வெளியே மரத்தில் அமர்ந்து கத்திக் கொண்டிருக்கிறது, அது பரவாயில்லை. அது வந்து உங்கள் முகத்தில் அமர்ந்து உங்களைக் கடித்தால், என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும், தெரியும் தானே?