கேள்வியாளர்: எனக்கும் என் மனைவிக்கும் சந்தேகத்தினால் தினமும் சண்டை வருகிறது. நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் வாக்குவாதம் பண்ணாமல் இருக்க முடியவில்லை. ஜோதிடர் நாங்கள் சேர்ந்து வாழ முடியாது என்கிறார். எனக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள் சத்குரு.

- பூங்கோதை முருகன்,

முருகனின் மனைவி

சத்குரு: முருகன் wife of பூங்கோதை…

வழக்கறிஞர் சங்கரன்பிள்ளை செய்த தந்திரம் 

ஒரு சமயம், அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு கொலை வழக்கு நடக்கிறது. சங்கரன்பிள்ளை அதன் வழக்கறிஞர். இவருடைய வாடிக்கையாளர் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடக்கிறது. அங்கெல்லாம் நீதிபதி மட்டும் இருப்பதில்லை, நடுவர் குழு ஒன்று இருக்கும். பத்து பேர் இருப்பார்கள். உங்களைப் போன்று சமூகத்தில் இருப்பவர்கள் பத்து பேர் தன்னார்வலராக சென்று உட்கார்ந்திருப்பார்கள். ஆதாரங்கள் என்னென்ன இருக்கிறதோ அவை அனைத்தையும், வாதங்கள் அனைத்தையும் கேட்டபிறகு அந்த பத்து பேர் தான் முடிவு எடுக்கவேண்டும். அதனால், அனைத்து விதமான முயற்சியையும் செய்தார். வழக்கு இவருக்கு எதிர்மறையாக செல்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் கடைசியில் ஒரு தந்திரம் செய்தார். 

முருகன் wife of பூங்கோதை, அப்படியென்றால் என்னவென்றால், நான் கீழே இருக்கிறேன், அவர் மேலே இருக்கிறார் என்று சொல்கிறீர்கள். இந்த மேலே கீழே என்பதை விட்டுவிட்டு சேர்ந்து இருப்பது எப்படி என்று பார்த்தீர்கள் என்றால் ஏதோவொன்று நிகழும்.

எதனாலென்றால், இந்த கொலை வழக்கில் இவன்தான் கொலை செய்தது என்று பலவிதமான சான்றுகள் இருக்கிறது. ஆனால், இறந்தவர் உடல் கிடைக்கவில்லை என்பதால் சங்கரன்பிள்ளை எதிர்வாதம் செய்தார். அந்த நபர் இறக்கவே இல்லை. உடல் கிடைக்கவில்லை, அதனால் அவன் இறக்கவே இல்லை என்று சொன்னார். இவரைத்தவிர மற்ற அனைவரும், குடும்பத்தினரும், இறந்தவரின் இரத்தம் கிடைத்தது, அது கிடைத்தது, இது கிடைத்தது என்று சொல்கின்றனர். ஆனால் உடல் மட்டும் கிடைக்கவில்லை.

அதனால், இறுதியில் எப்படியும் தோற்றுப்போய்விடுவோம் என்ற நிலையில் ஒரு தந்திரம் செய்தார். அவர் என்ன செய்தார் என்றால், இன்னும் ஒரு நிமிடத்தில் யாரை நீங்கள் செத்துவிட்டார் என்று இவர் மேல் குற்றம் சுமத்துகிறீர்களோ அவர் இந்த வாசல் வழியாக வரப்போகிறார் என்று சொன்னார். நீதிபதி, இந்த பத்து பேர் மற்றும் நீதிமன்றத்தில் இருப்பவர்கள் அனைவரும் வாசலைப் பார்த்து உட்காருகின்றார்கள். இன்னும் ஒரு நிமிடத்தில், யார் இறந்துவிட்டார் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோமோ அவர் வரப்போகிறார் என்றார். அனைவரும் அப்படியே உட்கார்ந்து, ஒரு நிமிடம், இரண்டு நிமிடம், மூன்று நிமிடம் ஆகிவிட்டது, ஆனால் அவர் வரவில்லை. பிறகு அனைவரும் இப்போது என்னவென்று பார்த்தார்கள். அப்போது சங்கரன்பிள்ளை சொன்னார், அவன் சாகவில்லை, இறந்துவிட்டான் என்று இன்னும் நிரூபணமாகவில்லை. எப்படி இவன் கொலை செய்தான் என்று நிரூபிக்கப்போகிறீர்கள். இப்போது நான் சொன்னதும் உடனே நீங்கள் அனைவரும் வாசலைப் பார்த்தீர்களா, இல்லையா? அதனால் உங்களது அனைவரின் மனதிலும் அவன் உயிருடன் இருக்கிறானா அல்லது இறந்துவிட்டானா என்று சந்தேகம் இருக்கிறது. அதனால் இந்த வழக்கு செல்லுபடியாகாது என்று கூறிவிட்டு அமர்ந்தார். ஓ, வெற்றி பெற்றுவிட்டேன் என்று அவர் நினைத்தார். 

நடுவர் குழு உள்ளே சென்று கலந்தாலோசித்துவிட்டு திரும்பி வந்து, இவன் குற்றவாளி என்றனர். சங்கரன்பிள்ளை கேட்டார், "எப்படி இருக்க முடியும், நீங்கள் அனைவரும் வாசலை பார்த்தீர்களா இல்லையா?" அதற்கு அவர்கள் சொன்னார்கள், "நீதிமன்றத்தில் இருக்கும் அனைவரும் அந்த ஒரு நிமிடம் வாசலைப் பார்த்து உட்கார்ந்தோம். ஆனால் உனது வாடிக்கையாளர் மட்டும் வெறுமனே இருந்தான். எதனால் என்று அவனுக்கே தெரியும்." 

கணவன் மனைவி சண்டை - கையாள்வது எப்படி?

உங்களுக்குத்தான் தெரியும் உங்களது வீட்டு சூழ்நிலை. இது எப்படியென்றால், உடன் இருந்தால் சேர்ந்து இருக்க முடியாது, தனித்தனியாக பிரித்துவைத்தால் தனியாக இருக்க முடியாது. இது ஒருவிதமான நோய். முருகன் wife of யாராக இருந்தாலும். அதை சிறிது மாற்றிக்கொள்ள வேண்டும். இவர் கணவர் அவர் மனைவி, சரியான பாத்திரம் எடுத்தால் சிறிது நன்றாக இருக்கும். 

நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், நீங்கள் எதற்காக இவ்வாறு, நான் முருகன், மனைவி என்று சொல்லிக்கொள்கிறீர்கள் என்றால், அவர் ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கிறார் என்பதை குறிப்பிட. இதன் மூலமாக தான் குறைவாக இருக்கிறேன் என்று அவர் நமக்கு சொல்கிறார். நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். கணவன் மனைவி என்றால் ஒருவர் தலைமேல் இன்னொருவர் உட்கார்வது இல்லை. இரண்டு பேரும் சேர்ந்து வாழ்வதற்காக திருமணம் செய்துகொண்டது. அதிக நாட்கள் நீங்கள் அவர் தலைமேல் உட்கார்ந்து இருந்தீர்களோ என்னவோ, இப்போது அவர் ஏறி உட்கார்ந்து இருக்கிறார். முருகன் wife of பூங்கோதை என்று ஆகிவிட்டது. இரண்டு பேரும் தலைமேல் ஏறி உட்காரவேண்டாம். பக்கத்தில் உட்கார்ந்து, சேர்ந்து நடந்தால் சுகமாக இருக்கும். நீங்கள் சென்று அவர் தலைமேல் உட்கார்ந்தால், அல்லது அவர் வந்து உங்களது தலைமேல் உட்கார்ந்தால், இது யாருக்கும் சுகமாக இருக்காது. முதலில் நம் தலைமேல் யாராவது உட்கார்ந்தால் நமக்கு சுகமாக இருக்காது. உட்கார்ந்தவருக்கும் சுகம் இல்லைதானே. நாற்காலியில் உட்கார்ந்துக் கொள்ளலாம், கீழே தரையில் உட்கார்ந்துக் கொள்ளலாம். தரையில் உட்காருவது நன்றாக இருக்கும், தலைமேல் உட்காருவது நன்றாக இல்லை. இதனால் எவருக்கும் சுகம் வராது. 

அதனால் இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கணவன் மனைவி என்றால் ஒன்றுக்கு மேல் ஒன்று என புரிந்துகொள்ள வேண்டாம். ஆணுக்கு கணவன், பெண்ணுக்கு மனைவி என சொன்னோம். அப்படியென்றால் இது மேலே, அது கீழே என்று நினைத்துவிட்டீர்கள். அதனால்தான் நீங்கள் மாற்றி சொல்லிக்கொள்கிறீர்கள். முருகன் wife of பூங்கோதை, அப்படியென்றால் என்னவென்றால், நான் கீழே இருக்கிறேன், அவர் மேலே இருக்கிறார் என்று சொல்கிறீர்கள். இந்த மேலே கீழே என்பதை விட்டுவிட்டு சேர்ந்து இருப்பது எப்படி என்று பார்த்தீர்கள் என்றால் ஏதோவொன்று நிகழும். 

கணவனைத் திருத்த வேண்டுமென்று மனைவியும், மனைவியைத் திருத்த வேண்டுமென்று கணவனும் போராடிக்கொண்டிருக்கும் நிலை பல குடும்பங்களில் இருப்பதைப் பார்க்கிறோம். உண்மையில், இதுபோன்ற சூழலில் இருப்பவர்களுக்கு சத்குரு கூறும் இந்த வழிகாட்டுதல்கள் நிச்சயம் தெளிவைத் தரும். தொடர்ந்து வாசியுங்கள்.

கணவன் மனைவி சண்டை, Kanavan Manaivi Sandai

கேள்வியாளர்: சத்குரு நமஸ்காரம். மிகவும் ஒரு சுயநலமான வாழ்க்கைத்துணை அமையும்போது, நம்மை எவ்வாறு நடத்திக்கொள்வது?

சத்குரு: நீங்கள் வாழ்க்கைத்துணையை எப்படி நடத்துவது என்று கேட்கிறீர்களா? அல்லது நீங்கள் எப்படி நடந்துகொள்வது என்று கேட்கிறீர்களா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கேள்வியாளர்: நான் எப்படி நடந்துகொள்வது.

சத்குரு: அப்படியில்லை, உண்மையில் நீங்கள் அவரை எப்படி சரிசெய்வது என்று தெர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள், சரியா?

கேள்வியாளர்: இல்லை, சத்குரு.

உங்களுக்குள் நேர்மையாக இருப்பது…  

சத்குரு: இது மிகவும் முக்கியம். நம் வாழ்க்கையில் நாம் நேர்மையாக இருப்பது மிகவும் முக்கியம், உங்களுக்கு புரிந்ததா? உண்மையில் உங்களது கணவரை சரிசெய்ய நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் என் முன் அமர்ந்திருப்பதால், "சத்குரு, சுயநலமாக என்னைப் பயன்படுத்திக்கொள்ளும் சூழ்நிலையில் என்னை எப்படி நடத்திக்கொள்வது" என்று கேட்கிறீர்கள். அது உண்மையில்லை. தயவுசெய்து பெண்கள் கூறவும், நீங்கள் உங்களது கணவரை சரிசெய்வது எப்படி என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள், இல்லையா? அவர் எப்படிப்பட்டவர் என்று நமக்கு தெரியவில்லை, ஆனால் நீங்கள் அவர் சுயநலமானவர் என்று புரிந்துணர்ந்தீர்கள் என்றால், கட்டாயமாக நீங்கள் அவரை சரிசெய்ய நினைக்கிறீர்கள், இல்லையா? உங்களையே நீங்கள் ஒரு தொந்தரவுதரும் மனைவியாக பார்த்தால், அப்போது, “என்னை நான் சரிசெய்துகொள்ளலாம்" என்ற எண்ணம் வரலாம். நீங்கள் மற்றவரை சுயநலமானவர் என்று பார்க்கும்போது, அப்போது உங்களது எண்ணம், அவர்களை சரிசெய்வது, இல்லையா? ஆனால் நாம் அதற்கு நேர்மையாக இருக்க விரும்புவதில்லை. ஏனென்றால் "உங்களது கணவரை சரிசெய்வது ஒரு நல்ல விஷயம் இல்லை - உங்களை நீங்கள் சரிசெய்துகொள்ள வேண்டும் என்று கலாச்சாரத்தில் உங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது.

தியானம் என்பது எதற்கு எதிராகவோ ஒருவரை சரிசெய்வது பற்றியது அல்ல. தியானத்தன்மை என்றால் நீங்கள் எப்படி ஆவீர்கள் என்றால், நீங்கள் பிரச்சனைகளின் மூலம் அல்லாதவராக. நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் ஒரு தீர்வாக இருப்பீர்கள், நீங்கள் ஒரு பிரச்சனையாக அல்ல.

அதனால் உங்களுக்கு தலைவலி என்றால் காலுக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ளுங்கள். அப்போது தலையைவிட கால் அதிகம் வலிக்கும். ஒருவிதத்தில் தலைவலி சரிசெய்யப்பட்டுவிட்டது. குறைந்தபட்சம் உங்களது கவனம் அதில் இருக்காது. அதனால், வாழ்க்கைப் பற்றிய அக்கறை நமக்கு இருந்தால், நாம் 100 சதவீதம் நேர்மையாக, குறைந்தபட்சம் நமக்குள் இருப்பதற்கான நேரம் வந்துவிட்டது. உலகத்தில், நீங்கள் என்னவிதமான தொழில் செய்கிறீர்கள், என்னவிதமான சூழ்நிலை இருக்கிறது, எப்படி நீங்கள் நேர்மையாக இருக்க முடியும் என்பது நமக்கு தெரியாது. அதில் நான் தலையிடமாட்டேன். ஆனால் குறைந்தது உங்களுக்குள் நீங்கள் 100 சதவீதம் நேர்மையாக இருக்க வேண்டும் - இது மிகவும் முக்கியம். இல்லையென்றால், உங்களையோ அல்லது உங்களது சூழ்நிலையையோ எப்போதும் சரிசெய்ய முடியாது, வெறுமனே குற்றம்சாட்டிக்கொண்டு செல்வதுதான் நடக்கும்.

பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கை என்பது வாழ்நாள் முழுவதுமான குற்ற பத்திரிக்கையாகவே இருக்கும். ஏனென்றால் அவர்கள் அதனை தீர்க்க முயற்சிக்காமல் அதைச்சுற்றி செல்லவே விரும்புகிறார்கள்.

அடிப்படைகளை சரிசெய்தல்

அதனால், கணவரை சரிசெய்யும் நிகழ்ச்சி ஒன்று நாம் நடத்தவேண்டும். இல்லை, நாம் பலரை சரிசெய்திருக்கிறோம், ஏனென்றால் திடீரென அவர்கள் தியானத்தன்மையானவராக ஆனதால் அவர்கள் வேறுவொன்றில் ஈடுபாட்டில் இருப்பதால் அவர்களின் சுயநலமான தன்மை போய்விட்டது. அதனால் இப்போது உங்களது தனிப்பட்ட சூழ்நிலைக்குள் நான் செல்லவிரும்பவில்லை. ஆனால் உங்களுக்குள்ளும் உங்களது குடும்பத்தினருக்குள்ளும் தியானத்தன்மையை நீங்கள் கொண்டுவர வேண்டும். நாம் தற்போது வாழ்க்கையில் முதலீடு செய்யவேண்டிய ஒன்று இது. உங்களது கணவரை சரிசெய்ய முடியவில்லை என்றால், குறைந்தபட்சம் அடுத்த தலைமுறை கணவர்கள் சுயநலமிக்கவர்களாக இருக்கக்கூடாது என்ற விருப்பத்துடன் நீங்கள் இருக்கவேண்டும். உங்களுக்கு அதில் விருப்பம் இருந்தால், இப்போது உங்களிடம் இருக்கும் அந்த சிறுவனை, சில தியானங்களின் மூலம் சரிசெய்யவேண்டும். தியானம் என்பது எதற்கு எதிராகவோ ஒருவரை சரிசெய்வது பற்றியது அல்ல. தியானத்தன்மை என்றால் நீங்கள் எப்படி ஆவீர்கள் என்றால், நீங்கள் பிரச்சனைகளின் மூலம் அல்லாதவராக. நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் ஒரு தீர்வாக இருப்பீர்கள், நீங்கள் ஒரு பிரச்சனையாக அல்ல.

நீங்கள் தீர்வாக ஆகிவிட்டால், நீங்கள் எங்கிருந்தாலும் அனைவரும் உங்களை விரும்புவார்கள், இல்லையா? உங்களது வேலையிடமாகட்டும், உங்களது குடும்பம், தெரு, எல்லா இடத்திலும், யார் தீர்வாக இருக்கிறார்களோ, அவரை அனைவரும் நாடுகிறார்கள், இல்லையா? நீங்கள் ஒரு பிரச்சனையாகவோ அல்லது பிரச்சனைகளைப் பற்றி புகார் கூறுபவராகவோ இருந்தால் யாரும் உங்களது முகத்தைப் பார்க்க விரும்புவதில்லை, இது உங்களுக்கு தெரியவேண்டும். ஆனால் நீங்கள் ஒரு தீர்வாக இருந்தால், எல்லா இடத்திலும், உங்களது கணவர் உட்பட அனைவரும் உங்களை விரும்புவார்கள். கணவரது வாழ்க்கைக்கு நீங்கள் தீர்வாக இருந்தால் அவர் தீவிரமாக உங்களை நாடுவார், இல்லையா?

அதனால், நாம் அனைவரும் அவசியம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், முதலில் நம்மை, நம் வாழ்க்கையினை ஒரு இனிமையான ஒன்றாக உருவாக்குவது அடிப்படையானது. இதை நீங்கள் செய்த பிறகு, உங்களுக்கு திருமணம் வேண்டுமா, வேண்டாமா? குழந்தைகள் வேண்டுமா, வேண்டாமா? என்ற அனைத்தையும் முடிவுசெய்துகொள்ளலாம். நாமே துன்பமாக இருக்கும்போது, அதை பெருக்குவது வேண்டாம். துன்பம் என்றால் “எனது கணவருடன் ஒத்துப்போகமுடியவில்லை. எனது மனைவியுடன் ஒத்துபோகமுடியவில்லை". ஆனால் ஏற்கனவே குழந்தைகள் வந்துக் கொண்டிருக்கிறது, எப்படி? உங்களால் ஒத்தப்போகமுடியவில்லை என்றால் இது எப்படி நடக்கிறது? எதனாலென்றால் நாம் வாழ்க்கையை விழிப்புணர்வின்றி நடத்த தேர்ந்தெடுத்துள்ளோம்.

விழிப்புணர்வான செயல்முறையாக மாற்றுங்கள்

நீங்கள் இப்படி வாழுங்கள் அப்படி வாழுங்கள் என்று நான் சொல்லவில்லை. நீங்கள் எதை செய்தாலும், அதன் அர்த்தம் என்ன என்பதன் முழு தாக்கத்துடன், உங்கள் விருப்பப்படி விழிப்புணர்வுடன் செய்யுங்கள், அவ்வளவுதான். அந்தளவுக்கு பொறுப்புணர்வு ஒவ்வொருவரும் எடுக்கவேண்டும், இல்லையா? இதை உங்களுக்குள் கொண்டுவராவிட்டால், நீங்கள் வாழ்க்கை முழுவதும் புகார் கூறுபவராகவே இருப்பீர்கள். உங்களது திருமண வாழ்க்கையை எப்படி நடத்தவேண்டும் என்று நான் சொல்லமாட்டேன். உங்களது வாழ்க்கையில் இந்தளவுக்கு நீங்கள் செய்ய வேண்டும். திருமணத்திற்கு முன், "இல்லை சத்குரு, எனக்கு விருப்பமில்லை, ஆனால் எனது பெற்றோரால் நான் திருமணம் செய்துகொண்டேன்." திருமணத்திற்குப் பிறகு, “நான் இந்த திருமண வாழ்க்கையை வாழ விரும்பவில்லை, ஆனால் எனது குழந்தைகள்." குழந்தைகள் வளர்ந்த பிறகு, “ஆனால், நான் எனது பேரக்குழந்தைகளுக்காகக் காத்திருக்க வேண்டுமே."

பார்த்தீர்கள் என்றால், ஒரு விழிப்புணர்வற்ற செயல்முறையின் விளைவாக இருக்கும்விதமாகவே உங்களை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். நீங்கள் ஒரு விழிப்புணர்வற்ற செயல்முறையின் விளைவாக இருக்கும்போது, நீங்கள் ஒரு பரிதாபகரமான விபத்தாகவே இருப்பீர்கள். இந்த அளவுக்காவது மாறுவதற்கு ஒவ்வொரு மனிதரும் பொறுப்பேற்க வேண்டும். அப்போது நாம் உங்களது விழிப்புணர்வின் உச்சத்தை அடைதல், முக்தி, மோக்ஷம் போன்ற பெரிய விஷயங்களைப் பற்றி பேசலாம். இந்த வார்த்தைகளை எளிதாக உச்சரிக்க வேண்டாம். முதலில் அடிப்படைகளை சரிசெய்யுங்கள். அடிப்படைகள் இவைதான் - இப்போது நீங்கள் எங்கிருந்தாலும் அது உங்களுடையது.

அதை மாற்றுவதற்கான தைரியம் உங்களுக்கு இருக்கவேண்டும் அல்லது அதில் பொருந்திக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும், இல்லையா? இவற்றில் ஒன்றை நீங்கள் கண்டிப்பாக செய்யவேண்டும். உங்களது வாழ்க்கையின் விளைவினைப் பற்றி முடிவற்ற புகார் கூறுவது நல்லது இல்லை.

என்னவென்றால், நாம் குறிப்பிட்ட ஒருநிலையில் இருக்கும்போது, அனைத்தும் நமக்கு எதிரானதாக இருப்பது போல் தோன்றுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தன்னை சரிசெய்துகொண்ட பிறகு உங்களது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் முடிவுசெய்யுங்கள். அங்கே இருந்தால் ஒருவிதமான விளைவு, அங்கிருந்து வெளிவந்தால் ஒருவிதமான விளைவு. அனைத்திற்கும் ஒரு விளைவு இருக்கிறது. ஆனால் உதவியற்ற, விழிப்புணர்வற்ற, ஒரு இருப்பாக இல்லாமல் குறைந்தபட்சம் அது ஒரு விழிப்புணர்வான விளைவாக இருக்கட்டும்.

எல்லோரையும் சத்குருவாகப் பாருங்கள் என சத்குரு கூறுகிறார். ஆனால், எரிச்சலூட்டும் ஒரு ஜந்துவாக வீட்டிலிருக்கும் கணவரை அப்படிப் பார்க்க முடியவில்லை எனக்கூறும் ஒருவருக்கு சத்குரு அளித்த இந்த பதில், கணவன்-மனைவி உறவு சிறப்பதற்கான ஆழமிக்க பார்வைகளை வழங்குகிறது.

கணவன் மனைவி சண்டை, Kanavan Manaivi Sandai

கேள்வியாளர்: சத்குரு, ஒரு தரிசன நேரத்தின்போது அனைவரையும் உங்களைப் பார்ப்பது போலவே பாருங்கள் என்று கூறியிருந்தீர்கள். சத்குரு நீங்கள் ஒரு கருணாவதாரம், ஆனால் என் வீட்டில் இரக்கமில்லாத, மோசமான ஒரு ஜந்து உள்ளது. அவரை நான் உங்களைப் பார்ப்பது போல பார்ப்பது சிரமமாக உள்ளது. இப்படியொரு சூழ்நிலையில் அவரை எப்படி பார்ப்பது? 

சத்குரு: எத்தனை வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இப்படி ஒரு பரிணாம வளர்ச்சி உங்களுக்கிடையே நடந்துள்ளது? இது பரிணாம வளர்ச்சியல்ல, வீழ்ச்சி. ஒரு காலத்தில், நிச்சயமாக அற்புதமான, நல்ல காதலராக, அருமையான மனிதராக அவர் இருந்திருப்பார். கல்யாணம் ஆகி எத்தனை வருடத்திற்கு பிறகு அவர் மோசமான ஒரு ஜந்துவாக மாறினார் என்று எனக்கு தெரியவில்லை. ஜந்துவாக அவர் மாறியதில் உங்களது பங்கு என்னவென்றும் எனக்கு தெரியவில்லை. அவர் மோசமான ஜந்துவாக இருந்தால், ஒருவேளை அவர் அப்படி இருந்தால், ஏனெனில் அது உங்களது கண்ணோட்டம், இல்லையா? யாரோ உங்களது வீட்டிலேயோ அல்லது உங்களது அலுவலகத்திலேயோ அல்லது நீங்கள் இருக்கிற ஏதொவொரு இடத்தில் மோசமான ஜந்துவாக இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம், நீங்கள் யாரோ ஒருவரை குறிப்பிட்ட விதத்தில் பார்ப்பது, அது அவர்களைப் பற்றிய விஷயம் அல்ல, அது உங்களைப் பற்றிய விஷயம். 

வாழ்வின் உச்சநிலையை இழக்க வேண்டாம்

உங்களது கண்களை, உங்களது மனதை, உங்களது இதயத்தை, உங்களது உடலை, நீங்கள் இனிமையாக வைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா அல்லது கசப்பாக வைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? இதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும். அதன் பிறகு நீங்கள் அவரைப் பார்க்க வேண்டும். அந்த மோசமான ஜந்துவைக்கூட என்னைப் பார்ப்பது போலவே பாருங்கள் என்று நான் கூறினேன். நான் உங்களிடம் அவருடைய போதனையை கேளுங்கள், அவரிடம் பயிற்சிகள் கற்றுக்கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. நான் சொல்வதெல்லாம், நீங்கள் என்னை ஒருவித மதிப்புடன், பக்தியுடன், அன்புடன், பாசத்துடன் பார்த்திருந்தீர்கள் என்றால், உங்களது உணர்ச்சி எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, அப்படி இருந்தால், நீங்கள் அனைவரையுமே அதே உணர்வுடன் பாருங்கள் என்று சொல்கிறேன். உங்களுக்கு ஒரு உடல் இருக்கிறது, மனம் இருக்கிறது, உணர்ச்சி இருக்கிறது, சக்தி இருக்கிறது. உங்களது உணர்ச்சி பற்றி இப்பொழுது நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம்.

அவர்கள் என்னவே செய்தாலும் சரி, உங்களை நீங்களே அழகாக ஆக்கிக்கொள்ளுங்கள். நீங்கள் அழகாக ஆகிவிட்டால், அவர்கள் மோசமான விஷயங்கள் செய்தாலும் நீங்கள் அற்புதமாகவே இருப்பீர்கள். இது வேறுவிதமான அணுகுமுறை.

உங்களது வாழ்க்கையில் ஏதோவொரு கட்டத்தில், உணர்ச்சியில் ஒரு இனிமையான நிலையை நீங்கள் அடைந்திருந்தால், அது அன்பினாலேயோ, பக்தியினாலேயோ, கருணையினாலேயோ, ஏதோ ஒன்றினால் நீங்கள் இனிமையாக மாறியிருந்தால் - அதுதான் உங்களது வாழ்க்கையின் உச்சநிலை. நீங்கள் அதிலிருந்து கீழே இறங்கக்கூடாது, அதையும் தாண்டி இன்னும் எவ்வாறு வளர்வது என்று தான் பார்க்க வேண்டும். உங்களுக்கு ஏற்பட்டதிலேயே உயர்ந்த இனிமையான உணர்ச்சி எதுவோ அதை துவக்கப்புள்ளியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதிலிருந்து இன்னும் கீழே இறங்கி வரக்கூடாது, சரியா? 

சத்குருவைப் பார்ப்பதுபோல் அனைவரையும் பார்ப்பதால்…

அப்படி ஒரு உணர்வு உங்களுக்கு ஏற்படவே இல்லை என்றால், பிறகு உங்களுக்கு என்னதான் சொல்வது? உங்களது வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்பட்ட மிகவும் இனிமையான உணர்ச்சி என்ன? உங்களது குழந்தை. அப்படியென்றால் அனைவரையும் உங்களது குழந்தையைப் பார்ப்பது போலவே பாருங்களேன். எல்லாருக்கும் தாயாக இருங்கள் என்று உங்களிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். அதை நீங்கள் உணர்ந்து பார்த்தபோது, என் முன்பு பரவச கண்ணீருடன், அன்பாக நீங்கள் உட்கார்ந்து இருந்தீர்கள். அதன் பிறகு தான், என்னை எப்படி பார்க்கின்றீர்களோ, அதுபோலவே அனைவரையும் பாருங்கள் என்று கூறினேன். ஏனென்றால், இப்படி பார்க்கும்போது, உங்களது கண்கள், உங்களது மனம், உங்களது இதயம், உங்களது உடம்பு, உங்களது உயிர் இனிமையாக, அற்புதமாக ஆகிவிடும். இது இன்னொரு மனிதரைப் பற்றியது இல்லை. குறிப்பாக, அவர் கடினமான ஆளாக இருந்தால், உங்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். நரகத்துக்கே நீங்கள் போனாலும் சிறப்பாக இருப்பீர்கள், ஆமாம். யாரும் உங்களுக்கு உத்தரவாதம் எதுவும் தரவில்லை. நான் உங்களுக்கு சொர்க்கத்துக்கு டிக்கெட் வாங்கி தருகிறேன் என்று எப்போதாவது சொல்லியிருக்கிறேனா? உங்களைத் தொடர்ந்து நான் பயமுறுத்திக்கொண்டே வந்துள்ளேன். இங்கு நீங்கள் வாழும்போதே எல்லாமே நடக்கும் என்று தான் சொல்லி வந்துள்ளேன். அதனால் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், இது உங்களுடைய சுய-மாற்றம் பற்றியது. 

அணுகுமுறையை மாற்றுங்கள்

உங்களது பிரச்சனை என்னவென்றால், நீங்கள் நிறைய படித்துள்ளீர்கள். நான் எந்த பெயரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. நீங்கள் நிறைய காதல் கதைகளை எல்லாம் பதின்ம வயதில் வாசித்து, பலவிதமான கற்பனைகளுக்குள் போய்விட்டீர்கள். முதலில் உங்களுக்கு நீங்களே நேர்மையாக இல்லை. உங்களது ஹார்மோன் உங்களை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது. யாரையோ பார்க்கின்றீர்கள், திடீரென்று "அற்புதம்... அழகாக இருக்கின்றாளே" என்று உங்களுக்கு தோன்றுகிறது. அற்புதமாக இருக்கிறாள், அவன் எவ்வளவு அழகாக இருக்கிறான், மிகவும் சிறப்பாக இருக்கிறான் என்று தோன்றுகிறது. அந்த ஒருவர் செய்வது எல்லாமே சிறப்பாக தெரிகிறது என்று நினைத்துக்கொண்டு, உங்களை நீங்களே முட்டாளாக ஆக்கிக்கொள்கிறீர்கள். அது அப்படி இல்லை. அவர்கள் என்னவே செய்தாலும் சரி, உங்களை நீங்களே அழகாக ஆக்கிக்கொள்ளுங்கள். நீங்கள் அழகாக ஆகிவிட்டால், அவர்கள் மோசமான விஷயங்கள் செய்தாலும் நீங்கள் அற்புதமாகவே இருப்பீர்கள். இது வேறுவிதமான அணுகுமுறை. 

அவர்கள் மோசமான விஷயங்களை செய்கிறார்கள் என்று உங்களுக்கு தெரிந்தாலும், நீங்கள் அற்புதமாக இருப்பீர்கள், இது அருமை. அவர்கள் மோசமான விஷயங்கள் செய்யும்போது, அவர்கள் அழகானவற்றை செய்கிறார்கள் என்று நீங்களாகவே நினைத்துக்கொண்டால், அது முட்டாள்தனம், குப்பை.

இராணுவ வீரரும் காட்டு யானையும்

இந்திய ராணுவத்தில் சேவை செய்துகொண்டு இருந்த ஒருவர் என்னிடம் இந்த கதையைக் கூறினார், அதை உங்களுக்கு சொல்கிறேன். 

அந்த வீரர்கள் வடகிழக்கு பகுதியில் பணியில் இருந்தார்கள். யானைகள் நடமாட்டம் நிறைந்த பகுதி அது. அந்த வீரர் அந்த பட்டாலியனுடைய தலைவர். 18-20 பேர் கொண்ட படைக்கு தலைமையேற்று, காட்டு வழியாக போய்கொண்டு இருந்தார்கள். பெரிய ஆண் யானையைப் பார்த்திருக்கிறார்கள், எல்லோரிடமும் சக்திவாய்ந்த ஆயுதங்கள் இருந்தாலும் உடனே எல்லோரும் பின்வாங்கி இருந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் ஊடுறுவலை தடுக்கக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஒரு குழு. ஆயுதபலமும் எல்லா உபகரணங்களும் அவர்களிடம் இருக்கிறது. அவர்களால் ஒரு யானையை சுட்டுத் தள்ளிவிட முடியும். 100 மீட்டரோ, 200 மீட்டரோ எவ்வளவு தூரமாக இருந்தாலும், அவர்களால் நிச்சயமாக சுட்டுத் தள்ளிவிட முடியும். ஆனால் காட்டுக்குள் அவர்கள் வந்த நோக்கம் அது இல்லையென்பதால் பின்வாங்கினார்கள். அந்த வீரர் ஏன் இதை என்னிடம் சொன்னார் என்றால், இதேவிதமான சூழ்நிலை ஒரு தென்னிந்தியருக்கு நடந்திருக்கிறது. 

அவர்கள் குழுவில் தமிழர் ஒருவர் இருந்திருக்கிறார். இந்த ராணுவப் படையில் சர்ஜன்ட்டாக (Havildar) இருந்திருக்கிறார். அவர் ஆயுதங்கள் எல்லாவற்றையும் கீழே போட்டுவிட்டு, கணபதி வந்துவிட்டார், “கணேசா கணேசா” என்று ஏதோ மந்திரம் சொல்ல ஆரம்பித்துவிட்டார். அவருக்கு கணபதி மந்திரம் ஏதோ தெரியும்போல, அவர் அதை சொல்வதற்கு ஆரம்பித்துவிட்டார். ஓடிப்போய் அந்த யானையின் அருகில், வெறுமனே 50 அடி தூரத்தில் மண்டியிட்டு சத்தமாக கணபதி மந்திரம் சொல்ல ஆரம்பித்துவிட்டார். யானை அப்படியே பார்த்திருக்கிறது. யார் இந்த முட்டாள், தெரியாத பெயரெல்லாம் சொல்லி நம்மை கூப்பிட்டுக்கொண்டு இருக்கிறானே என்று பார்த்துள்ளது. 

ஏதோ அதிசயம் நடக்கப் போகிறது என இவர்கள் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள். இந்த யானை நின்றுகொண்டு இருக்கிறது, இவர் மண்டிப்போட்டு மந்திரம் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார். எல்லோரும் பார்த்துக்கொண்டே இருக்கும்போது, யானை வேகமாக வந்து, இரண்டிலிருந்து ஐந்து விநாடிக்குள் அவர் முன்வந்து காலால் நசுக்கிவிட்டு, வந்த வழியாகவே சென்றிருக்கிறது. பார்த்துக்கொண்டு இருந்த இவர்கள் அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. கண்முன் அவர் நசுக்கப்பட்டதைப் பார்த்த ஒருசிலர் ஆயுதங்களை எடுத்திருக்கிறார்கள். எனக்கு தெரிந்த அந்த தளபதி, சர்ஜன்ட் ஏற்கனவே இறந்துவிட்டார், அதனால் வீரர்களை சாந்தப்படுத்தி ஆயுதங்களை கீழிறக்க வைத்திருக்கிறார். ஏனென்றால், ஒரு மிதியில் அந்த நபர் இறந்துவிட்டார். 

நான் ஏன் இதை உங்களுக்கு சொல்கிறேன் என்றால், காட்டு யானையை நீங்கள் கடவுள் என்று சொல்வதாலேயே அது நல்ல விஷயங்களை உங்களுக்கு செய்துவிடப்போவதில்லை. அவரை நீங்கள் கணபதி என்று அழைத்து வழிபட்டாலும், அவர் உங்களது பேச்சை கேட்கமாட்டார், அவர் செய்வதைத்தான் செய்வார். அதேவிதமாக, உங்களது வீட்டில் இருக்கின்ற அந்த ஜந்து, அவருக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் அவரும் செய்வார். அவருடைய குணம் எதுவோ அப்படித்தான் அவர் இருப்பார். நான் பேசுவது உங்களைப் பற்றி மட்டும்தான். 

அழகு மற்றும் அசிங்கம் – எங்கே உருவாகிறது? 

நீங்கள் எப்போதும் வாழ்க்கையை உறவுசார்ந்தே பேசுகிறீர்கள். அப்படி கிடையாது. நீங்கள் என்ன புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நீங்கள் பிறப்பதற்கு முன் அல்லது நீங்கள் பிறந்தபோதும் கூட, உங்களது தாயுடன்கூட உங்களுக்கு உறவு இருக்கவில்லை. மக்கள் நிச்சயமாக என்னை திட்டப் போகிறார்கள், ஆனால் தயவுசெய்து இதை நீங்கள் பார்க்கவேண்டும். உங்களுக்கு உறவு என்று எதுவும் இல்லை. உங்களுக்கு இருப்பு மட்டும்தான் இருக்கிறது. உங்களுக்கு தேவை இருப்பதால், உறவுகள் ஏற்பட்டது. தாயை உங்களது உணவாகப் பார்த்தீர்கள், அவரிடம் போனீர்கள். நீங்கள் உயிர் வாழ்வதற்கு உங்களது தாயை ஆதாரசக்தியாக பார்த்தீர்கள்.

ஒரு குழந்தை பிறந்தவுடனே, அதை வேறொரு ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ கொடுத்து, அந்த குழந்தையின் தேவைகள் அனைத்தையும் அவர்கள் பார்த்துக்கொண்டார்கள் என்றால், குழந்தை உடனே அவர்களிடம் சென்றுவிடும். உறவுகள் பற்றி உங்களுக்குள் நீங்கள் கருத்துகள் வைத்துக்கொள்வது, நீங்கள் தாய், நீங்கள் பெற்றெடுத்தீர்கள் இப்படியெல்லாம் நினைத்துக்கொள்கிறீர்கள். அப்படியெல்லாம் இல்லை. உங்களுக்கு தேவைகள் இருப்பதால் நீங்கள் உறவுகளை ஏற்படுத்திக்கொள்கிறீர்கள். அப்படி இல்லையென்றால், வெறுமனே இருப்பு மட்டும்தான் இருக்கிறது. 

இந்த இருப்பு விழிப்புணர்வு பெற்று, அபாரமான ஒரு இருப்பில் வாழ்ந்து, அதற்கு திறந்த நிலையிலேயும் இருக்கலாம். இல்லையென்றால், தொடர்ந்து இதே சர்க்கஸையே செய்துகொண்டு இருக்கலாம். 

ஆரம்பத்தில், தாய்தான் உங்களுக்கு அனைத்துமாக இருந்தார்கள். மிகவும் அற்புதமான உயிராக தெரிந்தார்கள். நீங்கள் வளர்ந்தீர்கள், வயதுக்கு வந்தீர்கள், அப்புறம் ஒரு பையனைப் பார்த்தீர்கள், உலகத்திலேயே அட்டகாசமான ஆணாக அவர் தெரிந்தார். உங்களுக்கு இடையில் அம்மா வந்தார். திடீரென அம்மாவை வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள், இல்லையா? அதன்பிறகு நீங்கள் சொல்கிற இந்த ஆண் உங்களது வாழ்க்கைக்குள் வருகிறார். மிகவும் சிறப்பானவராக தெரிந்தார். நாட்கள் செல்ல செல்ல, அதே மனிதர் மோசமான ஜந்துவாக உங்களுக்கு தெரிகிறார், அல்லது நீங்கள் அப்படி நினைத்துக்கொள்கிறீர்கள். அவர் மிகவும் கொடூரமானவர் என்று நினைக்கிறீர்கள், இந்த கதை இப்படியே போய்க்கொண்டு இருக்கிறது. 

நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், அழகு, அசிங்கம் இரண்டையும் நீங்கள்தான் உருவாக்குகிறீர்கள். நீங்களாகவே கற்பனை செய்துகொள்ள வேண்டும் என்று நான் இப்போது சொல்லவரவில்லை. அந்த நபர் என்ன செய்தாலும் சிறப்பானது என்று நீங்கள் நினைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அது வாழ்வதற்கு முட்டாள்தனமான வழி. என்னவென்றால், உங்களுடைய மிகச்சிறந்த அனுபவமாக எது இருந்ததோ அவ்வாறு இருக்கவேண்டும் என்பதை உங்களுடைய துவக்கப்புள்ளியாக வைத்துக்கொண்டால், அங்கிருந்து இன்னும் நிறைய வளர முடியும். 

வாழ்க்கையெனும் பரமபதத்தில் ஏற்றம்

நீங்கள் பரமபதம் விளையாடி இருக்கிறீர்களா? விளையாடும்போது, ஏணியில் ஏறி மேலே மேலே போகவேண்டும் என்பது உங்களது விருப்பம், பாம்பிடம் கடி வாங்கி கீழே வரக்கூடாது என்று நினைப்பீர்கள். பாம்பில் சென்று நிற்கக்கூடாது என்று ஜாக்கிரதையாக விளையாடுவீர்கள். ஒரு ஏணியில் இருந்து இன்னொரு ஏணியைத் தேடி மேலே ஏறுவீர்கள். வாழ்க்கையிலேயும் இதுதான் உண்மை. அதனால் ஒரு இனிமையான நிலையை உங்களுக்குள் நீங்கள் உணர்ந்துவிட்டால், அதைவிட்டு கீழே இறங்கி வந்துவிடாதீர்கள். அதுதான் அடிப்படையாக இருக்கவேண்டும். அடுத்தது இன்னும் இன்னும் மேலானதாக இருக்க வேண்டும். 

என் முன் நீங்கள் பரவச கண்ணீருடன், அன்பாக உட்கார்ந்தீர்கள். அதைப் பார்த்துவிட்டு, இதை உங்களது அடிப்படையாக வைத்துக்கொள்ளுங்கள், இதிலிருந்து கீழே சென்றுவிடாதீர்கள் என்று நான் சொன்னேன். எல்லோரையுமே என்னைப் பார்ப்பது போலவே பாருங்கள் என்று சொன்னேன். இந்த அளவிற்காவது நடந்தாக வேண்டும். இது தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தால், விடாமல் நடந்தால், நிச்சயமாக நீங்கள் இன்னொரு ஏணியில் ஏறுவீர்கள். சிறிது காத்திருக்க வேண்டும், அவ்வளவுதான். ஆனால் கீழே மட்டும் வரக்கூடாது. நான் சொல்வதெல்லாம் அவ்வளவுதான். தயவுசெய்து உங்களது கணவரை மோசமான ஜந்து என்று சொல்லவேண்டாம், பாவப்பட்ட மனிதர்.

சங்கரன்பிள்ளையை ஏமாற்றிய மனைவி

ஒருமுறை இவ்வாறு நடந்தது. சங்கரன்பிள்ளை தன் மனைவி தன்னை ஏமாற்றுகிறார் என்று நினைத்து ஒரு துப்பறிவாளரை வேலைக்கு வைத்தார். மனைவிக்கு எதிராக ஆதாரம் வேண்டும் என்று அழுத்தமாக சொன்னார். துப்பறிவாளர் அவர்களது வீட்டிற்கு வெளியில் காத்திருந்தார். மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றதும் இவர் பின்தொடர்ந்து போனார். அவர் ஒரு பார்க்கிற்கு சென்று வண்டியை நிறுத்தி, உள்ளே நுழைந்தார், அங்கு ஒரு ஆண் இருக்கையில் உட்கார்ந்திருந்தார். இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தவுடன், ஓடிப்போய் கட்டிப் பிடித்துக்கொண்டார்கள். கையை பிடித்துக்கொண்டார்கள், இருக்கையில் உட்கார்ந்து, சந்தோஷமாக பேசி சிரித்தார்கள். இதை முழுமையாக வீடியோ எடுத்து, சில மணி நேரத்தில் அந்த வீடியோ ஆதாரத்தைத் தொகுத்து, "உங்களுக்கு வேண்டிய ஆதாரம் இதோ" என்று சொல்லி சங்கரன்பிள்ளையிடம் துப்பறிவாளர் கொடுத்தார். என் வேலை முடிந்தது, வீடியோவைப் பாருங்கள் என்றார்.

சங்கரன்பிள்ளை வீடியோவைப் பார்க்க ஆரம்பித்தார். "இதை நம்பமுடியவில்லை, என்னால் நம்பவே முடியவில்லை" என சொல்லிக்கொண்டே இருந்தார். அதற்கு அந்த துப்பறிவாளர், "எதை உங்களால் நம்ப முடியவில்லை, இது போலி இல்லையே, இது இப்போது எடுத்த வீடியோ ஆதாரமாச்சே" என கேட்டார். "முட்டாளே அது இல்லை, என் மனைவி இவ்வளவு சந்தோஷமாக இருக்கக்கூடிய ஒருவர் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை" என்று சொன்னார் நம் சங்கரன்பிள்ளை. 

அதனால், உங்களது கணவர் வேறு எங்கோ சென்ற பிறகு, 15 நாளுக்கு பிறகு, அவர் எவ்வளவு சந்தோஷமானவர் என்று நீங்கள் நினைத்துப் பார்க்க ஆரம்பிப்பீர்கள். உங்களுக்கு நீங்களே இதையெல்லாம் தயவுசெய்து செய்துகொள்ள வேண்டாம்.