Nature Quotes in Tamil: இயற்கை பற்றிய சத்குருவின் வாசகங்கள்
இயற்கையை ஒரு அன்னையாக, இறைவனாகப் பார்ப்பது குறைந்து, வளமாகப் பார்த்து பயன்படுத்திக்கொள்வது மேலோங்கியுள்ள இச்சூழலில், சத்குருவின் இந்த குருவாசகஙகள் இயற்கையின் மதிப்பை உணர்த்துகின்றன.

இயற்கை குறித்த சத்குருவின் வாசகங்கள் (Nature Quotes in Tamil)
ஒரு மலை ஒரு மனிதருக்கு என்ன செய்யமுடியும் என்பதை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது. ஒரு மலையுடன் ஒவ்வொருவரும் ஏதோவொரு விதத்தில் காதல்கொள்ள வேண்டும் - அம்மலை உங்களுக்கு சவால்விடுவதாக இருக்கலாம், ஈர்ப்பதாக இருக்கலாம், அல்லது அதன் பிரம்மாண்டம், உறுதி மற்றும் இருப்பினால் உங்களை கீழ்ப்படிய வைப்பதாக இருக்கலாம்.
பல்லாயிரம் ஆண்டுகளாக இந்நதிகள் தாயைப் போல நம்மை அரவணைத்து பேணி வந்துள்ளன. இப்போது நாம் அவற்றை அரவணைத்து பேணி வளர்க்கும் நேரம் வந்துவிட்டது.
போதுமான மரங்கள் இருந்தால், போதுமான மழை கிடைக்கும், நம் நதிகளிலும் நீரோட்டம் இருக்கும்.
இயற்கையின் பாதுகாப்பிற்கு ஒரே உண்மையான தீர்வு விழிப்புணர்வான உலகம் உருவாக்குவதுதான், அதாவது நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வாக இருக்கவேண்டும்.
தற்போது இயற்கையைப் பாதுகாப்பதன் மிக முக்கிய அம்சம், மண்ணைக் காப்பதுதான். மண்வளம் அழிவதை நாம் நிறுத்தாவிட்டால், இந்த பூமி மனிதர்கள் வாழத் தகுதியில்லாமல் போகும்.
உயிர்த்தன்மை என்பது சிறு நுட்பங்களில் உள்ளது. ஒரு மலரையோ எறும்பையோ பாருங்கள், படைப்பின் ஒவ்வொரு துளியும் எவ்வளவு நுட்பமாக கட்டமைக்கப்பட்டுள்ளது!
நீர் என்பது வர்த்தகப் பொருளல்ல, அது உயிரை உருவாக்கும் மூலப்பொருள். ஒவ்வொரு மனிதருக்கும் அது கிடைக்கும்படி நாம் உறுதிசெய்திட வேண்டும்.
நாம் வேறு கிரகத்திற்கு செல்லும்முன், இந்த கிரகத்தை பேணிக்காக்க கற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாம் இங்கு செய்யும் அதே அற்ப விஷயங்களைத்தான் அங்கும் செய்வோம்.
மண்தான் அன்னையர் அனைவருக்கும் அன்னையானவள். மண்ணை உயிர்ப்புடன் வைத்திருந்து, வருங்கால தலைமுறைகளுக்கு அப்படியே விட்டுச்செல்வதுதான் தாய்மையின் சக்தியை உணரும் வழி.
Subscribe
உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் செய்யக்கூடிய ஒரு முக்கியமான விஷயம், அவர்களை இயற்கை சூழ்நிலைக்கு அழைத்துச்செல்ல சிறிது நேரம் ஒதுக்குவதே.
நீங்கள் காட்டில் நேரம் செலவிட்டால், நீங்கள் இன்னுமொரு உயிரினம்தான் என்பதை உணர்வீர்கள். உங்களை நீங்கள் உணர்வது போலவே உங்களை சுற்றியுள்ள உயிர்களையும் உணர்வது ஒரு மாபெரும் ஆன்மீகப் படி.
வசந்தகாலத்தின் அழகே, பழம் இன்னும் வரவில்லை என்றாலும் பூ நம்பிக்கையைத் தந்து சாத்தியமாய் இருக்கிறது என்பதுதான்.
நீங்கள் இங்கு தனியாக இல்லை. உங்கள் வெளிமூச்சு மரங்களுக்கு உள்மூச்சு; மரங்களின் வெளிமூச்சு உங்களுக்கு உள்மூச்சு. இது ஒவ்வொருவரின் அனுபவத்திலும் இருந்தால், மரம் நட்டு மரங்களை பாதுகாக்க உங்களுக்கு சொல்லத் தேவையிருக்குமா?
தாவரங்களோ மரங்களோ விலங்குகளோ மனிதர்களோ, எதுவாயினும் சரி - நாம் ஒருபோதும் சுயநலத்தால் சுரண்டாமலிருப்பது முக்கியம்.
மண்ணின் ஆரோக்கியத்திற்கும் நமது ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு உள்ளது. பல்வேறு உடல், மன ஆரோக்கிய சீர்கேடுகள் மண்ணில் ஏற்பட்டுள்ள நுண்ணூட்டச் சத்து குறைபாட்டின் விளைவாகவே ஏற்படுகிறது. மண்ணை காப்போம்.
பொருளாதாரமா சுற்றுச்சூழலா என்று இருக்கக்கூடாது, இரண்டுமே கைகோர்த்தபடி முன்னேறவேண்டும். சுற்றுச்சூழலை கவனத்தில் கொள்ளும் ஒரு பொருளாதாரம் வடிவமைக்கப்பட வேண்டும்.
ஒரு மரம் நடுவது அன்பின் அளப்பரிய வெளிப்பாடு. அதன் நிழலையும் பழங்களையும் நீங்கள் அனுபவிப்பீர்களா என்று தெரியாது, ஆனால் யாரோ ஒருவர் அனுபவிப்பார் என்று உங்களுக்குத் தெரியும்.
உங்கள் உடலே மண்தான். இந்த பூமியின்மீது நாம் மென்மையாகவும் விவேகமாகவும் நடந்திடுவோம்.
ஒருமுறையே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தடைசெய்யப்பட வேண்டும். இது நம் பூமி. இது நமது காலம். சரியான விஷயங்களைச் செய்திடுவோம்!
மனித உயிர் செழிக்கவேண்டும் என்றால், பூமியிலுள்ள மற்ற உயிரினங்கள் அனைத்துமே செழிக்கவேண்டும்.
அமீபா முதல் யானை வரை, அனைத்து உயிரினங்களும் சுற்றுச்சூழலைப் பேணுகின்றன. மனிதர்களாகிய நாம் மட்டுமே அழிக்கும் போக்கில் செல்கிறோம், ஆனால் நம்மை புத்திசாலிகள் என்று நினைத்துக்கொள்கிறோம்.
நீங்கள் உயிர் வாழ்வதற்கான ஆதாரமே இந்த பூமிதான். அப்படியிருக்க, உங்களை உயிருள்ளவராகவும் இந்த பூமியை உயிரில்லா ஜடமாகவும் உங்களால் எப்படி நினைக்க முடிகிறது?
சுற்றுச்சூழலை காப்பாற்ற வேண்டும் என்று உண்மையாகவே நாம் விரும்பினால், நம்மிடமுள்ள இயற்கை வளங்களுக்கு ஏற்ப மக்கள்தொகை பெருக்கத்தை நாம் நெறிப்படுத்த வேண்டும்.
தொடர்புடைய பதிவுகள்:
இயற்கையின் அழகை வர்ணிக்காத கவிஞர்கள் இல்லை. அப்படி இருந்தாலும், ஒரு ஞானியின் கவிதைகள் இயற்கையின் விநோதங்களைப் பற்றிய முற்றிலும் புதிதான பார்வையை நமக்கு வழங்கவல்லது. இயற்கையைப் பற்றிய சத்குருவின் கவிதைகள் இந்தப் பதிவில்...
பூமி, மண், மண்வளம், மண்வாசனை - இவற்றின் ரகசியங்களை, நுட்பங்களைப் பேசும் சத்குருவின் கவிதைகள் இந்தப் பதிவில்...